25 செப்டம்பர் 2015 அன்று பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பூட்டான் நாட்டின் பிரதமர் ஷெரிங் டோக்பே அவர்களை நியூயார்க் நகரில் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் அவையில் 2015க்குப் பிறகான வளர்ச்சிக்கான திட்டத்தை முன்வைத்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை திரு.டோக்பே அவர்கள் பாராட்டினார். பூட்டானில் அமைந்து வரும் நீர் மின் நிலையத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார் பாரதப் பிரதமர். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவதற்கான பூட்டானின் ஆதரவை, திரு டோக்பே அவர்கள் தெரிவித்தார்.
பாரதப் பிரதமர், இலங்கையின் அதிபர் திரு மைத்ரிபாலா சிறிசேனா அவர்களை சந்தித்தார். இலங்கையில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட இரு தேர்தல்களை குறிப்பிட்ட பிரதமர் திரு.மோடி, இலங்கையில் ஆழ வேரூன்றியுள்ள ஜனநாயகப் பண்புகளை அத்தேர்தல் வெற்றிகள் நிரூபிப்பதாக கூறினார். இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்தும், இந்திய முதலீடுகள் குறித்தும் பிரதமர் இலங்கை அதிபர் சிறிசேனாவோடு விவாதித்தார்.
ஸ்வீடன் நாட்டின் பிரதமர் திரு. ஸ்டேஃபான் லோஃப்வென் அவர்களை, பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் சந்தித்தார். இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் திருப்திகரமான ஸ்வீடன் விஜயம் குறித்து மனநிறைவு தெரிவிக்கப்பட்டது. மேக் இன் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்வீடன் நாடும் பங்கெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், சைப்ரஸ் நாட்டின் அதிபர் திரு. நிகோஸ் அனாஸ்டாஸியாட்ஸ் அவர்களை சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையே நிலவும் நல்ல உறவை சுட்டிக்காட்டிய பாரதப் பிரதமர், பூகோள ரீதியாக இரு நாடுகளும் தூரத்தில் இருந்தாலும், உணர்வுகளால் அருகில் இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியா சைப்ரஸ் நாட்டின் உறுதியான நட்பு நாடு என்று குறிப்பிட்டார் சைப்ரஸ் அதிபர்.
A picture of my meeting with PM @tsheringtobgay. pic.twitter.com/MbaU63tsld
— Narendra Modi (@narendramodi) September 26, 2015
Enjoyed calling on PM @narendramodi at the Waldorf Astoria. We reaffirmed our close ties of friendship & cooperation pic.twitter.com/QX4KjSWPa5
— Tshering Tobgay (@tsheringtobgay) September 25, 2015
Spoke about regional and global issues with President @MaithripalaS. Our meeting was very fruitful. pic.twitter.com/1taKYYiKIl
— Narendra Modi (@narendramodi) September 26, 2015
Talked about ways to further enhance India-Sweden ties during the meeting with PM Stefan Lofven. pic.twitter.com/eba7Gq4t6D
— Narendra Modi (@narendramodi) September 26, 2015
Had a meeting with President @AnastasiadesCY. We talked about stronger cooperation between India and Cyprus. pic.twitter.com/46xgyQB9zv
— Narendra Modi (@narendramodi) September 26, 2015