Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராவதற்கு அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலரை, தற்போது காலாவதி ஆகியுள்ள திட்டக் குழு செயலருக்கு பதிலாக, தொலைத் தொடர்பு ஆணையத்தின பகுதி நேர உறுப்பினராக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.

தொலைத்தொடர்பு ஆணையத்தின் கூட்டங்களில் நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலர் கலந்து கொண்டு விவாதிப்பது ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு செழுமை சேர்க்கும். ஏனென்றால், நித்தி ஆயோக் மத்திய அரசின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.

பின்னணி

தொலைத்தொடர்புத் துறையில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் 11 ஏப்ரல் 1989 நாளிட்ட தீர்மானத்தின்படி, நிர்வாக மற்றும் நித்தி அதிகாரங்களோடு, தொலைத்தொடர்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

திட்டக் குழு காலாவதியாவதற்கு முன்பு தலைவர் (தொலைத் தொடர்புத் துறையின் செயலர்), மற்றும் நான்கு முழு நேர உறுப்பினர்கள் (உறுப்பினர் (நித்தி ) உறுப்பினர் (உற்பத்தி), உறுப்பினர் (சேவைகள்) மற்றும் உறுப்பினர் (தொழில்நுட்பம்) மற்றும் நான்கு பகுதிநேர உறுப்பினர்கள் (மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச்செயலர்), செயலர் (மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர்), செயலர் (திட்டக் குழு) செயலர் (தொழிற் கொள்கை மற்றும் தொழில் வளர்ச்சித் துறை செயலர்) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

திட்டக் குழுவுக்கு பதிலாக நித்தி ஆயோக் உருவாக்கப்பட்ட பிறகு தொலைத் தொடர்பு ஆணையத்தில் மூன்று பகுதி நேர உறுப்பினர்களே இருந்தனர்.

தொலைத்தொடர்பு ஆணையத்தின் கூட்டங்களில் நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலர் கலந்து கொண்டு விவாதிப்பது ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு செழுமை சேர்க்கும். ஏனென்றால், நித்தி ஆயோக் மத்திய அரசின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.

***