Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாரி சக்தி வந்தன் அதினியத்திற்கு வாக்களித்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


நாரி சக்தி வந்தன் அதினியத்திற்கு (மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா) ஆதரவாக வாக்களித்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயக பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணம் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு சட்டம் அல்ல, மாறாக நமது தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு ஒரு மரியாதை என்றும், அவர்களின் குரல்கள் இன்னும் திறம்பட கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டில் இது ஒரு வரலாற்று நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

நமது தேசத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்! 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.

நாரி சக்தி வந்தன் தினியத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஏகோபித்த ஆதரவு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியப் பெண்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரமளித்தலுக்கான  புதிய  சகாப்தத்தை நாம் தொடங்குகிறோம். இது வெறும் சட்டம் அல்ல; இது நமது தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு செலுத்தும் மரியாதையாகும். அவர்களின் மீட்சித் திறன் மற்றும் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நாம் கொண்டாடும் போது, நம் தேசத்தின் அனைத்து பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத உத்வேகம் நமக்கு நினைவுக்கு வருகிறது. இந்த வரலாற்று நடவடிக்கை அவர்களின் குரல்களை இன்னும் திறம்பட கேட்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகும்.

***