Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)

நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)


     பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர்பூடான் ராஜ்யத்தின்  முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில்  2018, ஆகஸ்ட் 30, 31  தேதிகளில் சந்தித்தோம்.

    1997-ம் ஆண்டு பாங்காக் பிரகடனத்தில் கண்டுள்ளபடி, பிம்ஸ்டெக்கின் கொள்கைகள், நோக்கங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியும்;
      3-வது பிம்ஸ்டெக் பிரகடனம் (நேய் பை டா, 04 மார்ச் 2014 ) மற்றும் பிம்ஸ்டெக் தலைவர்கள் ஒதுங்கு ஓய்வு கூட்ட ஆவணம்  (கோவா, 16 அக்டோபர், 2016) ஆகியவற்றை நினைவில் கொண்டும்;

     வங்காள விரிகுடா மண்டலத்தை  அமைதி, வளம், ஸ்திரத்தன்மைகொண்டதாக நமது பொது வலு மற்றும் கூட்டு முயற்சி மூலம் உருவாக்க மனப்பூர்வமான  உறுதியை மீண்டும்  வலியுறுத்தியும்;

     இந்த மண்டலத்தில் உள்ள புவியியல் தொடர்ச்சி நிலை, விரிவான இயற்கை மற்றும் மனிதவளங்கள், வளமான வரலாற்று இணைப்புகள், பண்பாட்டு பாரம்பரியம், ஆகியவற்றின் அடிப்படையில், உள்ள முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புக்கான திறன் மீது நம்பிக்கைக் கொண்டும்;

    நிலைத்த மேம்பாட்டு அலுவல் பட்டியல், 2030-ஐ  அமல்படுத்துவதற்காக  சேர்ந்து உழைப்பதில்  உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியும், மேம்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஏழ்மையை அகற்றுவதுதான் பெரிய சவால் என்பதை உணர்ந்தும்;

     பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம், சமுதாயங்களில் ஒருவருக்கொருவர் இணைப்பு மற்றும் சார்ந்திருக்கும் நிலை உயர்ந்தால்தான் மண்டல ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டும்;

     நமது மண்டலத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வளம், பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு இணைப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பல பரிமாண இணைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தியும்;

     மண்டலத்தில் பொருளாதார சமூக மேம்பாட்டை வளர்ப்பதில் வர்த்தகம், முதலீடு ஆகிய பெரும் பங்களிக்கும் காரணிகள் என்பதால் அவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும்;

      மண்டலத்தில் உள்ள மிகக் குறைந்த அளவு வளர்ச்சியடைந்துள்ள அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகளின் சிறப்புத் தேவைகள், சூழ்நிலைகள், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றின் மேம்பாட்டின் நடைமுறைகளுக்கு ஆதரவு வழங்குவதன் அவசியத்தை உணர்ந்தும்;

       பிம்ஸ்டெக் நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதமும்,  அமைப்புகளால் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களும் பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும், இவற்றை எதிர்ப்பதில் தொடர்ந்த முயற்சிகள், ஒத்துழைப்பு, உறுப்பு நாடுகளின் தீவிர பங்கேற்புடன் கூடிய விரிவான அணுகுமுறை ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்தும்;

      அர்த்தமுள்ள ஒத்துழைப்பு, மற்றும் ஒருங்கிணைப்பு மூலம், அமைதியான, வளமான, ஸ்திரத்தன்மையுள்ள வங்காள விரிகுடா மண்டலத்தை உருவாக்க பிம்ஸ்டெக் அமைப்பை துடிப்பான, திறம்பட்ட, முடிவுகள் அடிப்படையிலான மண்டல அமைப்பாக மாற்றுவதில் உறுதிப்பாட்டை தெரிவித்தும்;

       நியாயமான, நேர்மையான, சட்டத்தின் அடிப்படையிலான, சமமான, வெளிப்படையான, சர்வதேச அமைப்பு,.நாவை மத்தியமாகக் கொண்ட பலதரப்பு தன்மையில் நம்பிக்கை, சட்ட அடிப்படையிலான சர்வதேச வர்த்தக அமைப்பு ஆகியவற்றின்  அவசியத்தை வலியுறுத்தியும்;

       பிம்ஸ்டெக்கின் கீழ் மண்டல ஒத்துழைப்பு நடைமுறையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல வலுவான நிறுவன ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும்;

       பூடான்  இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பங்கேற்று உச்சிமாநாட்டு முடிவுகளுக்கும், வெளியாகும் ஆவணங்களுக்கும், அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுமதி அளிப்பதற்கு உட்பட்டு சம்மதம் அளிக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டும்;

       கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறோம்:

  1. 1997 பாங்காக் பிரகடனத்தில்  கண்ட கொள்கைகளை  நினைவில் கொண்டு பிம்ஸ்டெக் அமைப்பிற்குள் ஒத்துழைப்பு என்பது ஆதிபத்திய சமத்துவம், நிலப்பகுதி ஒருங்கிணைப்பு அரசியல், சுதந்திரம், உள்நாட்டு விஷயங்களில் தலையிடாமை, அமைதியான கூட்டு வாழ்க்கை, பரஸ்பர நன்மைகள் என்ற கொள்கைகள் அடிப்படையில் அமைந்தவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

  1. 1997 பாங்காக் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி பிம்ஸ்டெக் நோக்கங்கள், கொள்கைகள் ஆகியவற்றை அடையும் முயற்சிகளை தீவிரப்படுத்துவது என்றும் பிம்ஸ்டெக் அமைப்பை வலுவானதாக, திறம்பட்டதாக, முடிவுகள் அடிப்படையிலான, அமைப்பாக மாற்றி அமைதி, வளம், ஸ்திரத்தன்மை கொண்ட வங்காள விரிகுடா மண்டலத்தை உருவாக்குவதில் சேர்ந்து பாடுபடுவது எங்கள் உறுதிமொழியையும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

  1. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இணைப்புப் பாலமாக விளங்கும் பிம்ஸ்டெக்கின் தனித்தன்மையை பயன்படுத்தி மேம்பட்ட பொருளாதார சமூக வளர்ச்சியை காண்பதற்கு தீர்மானிக்கிறோம்.  உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை    வலுப்படுத்தி இந்த அமைப்பை அமைதி, வளம், ஸ்திரத்தன்மை, ஆகியவற்றை வளர்க்கும் திறம்பட்ட மேடையாக உருவாக்குவதிலும் உறுதியுடன் உள்ளோம்.

 

  1. பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதலை இகழ்ந்துரைத்து  பயங்கரவாதத்தை  அனைத்து வடிவங்கள் மற்றும் வழிபாடுகளில் அதனை எவர் எங்கே செய்தாலும் அத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாது என வலியுறுத்தி இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் , கட்டமைப்புகள் ஆகியவற்றை நோக்கி மட்டுமன்றி அவற்றை ஊக்குவித்து ஆதரவோ, நிதியுதவியோ வழங்கி பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து அவர்களை புகழ்ந்துரைக்கும் நாடுகள், அரசு அல்லாத அமைப்புகள் ஆகியவற்றுக்கும் எதிராக அமைய வேண்டும் என உறுதி கூறுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முழு உறுதிப்பாட்டை வலியுறுத்தி இந்த வகையில், விரிவான அணுகுமுறையை உருவாக்குமாறு நாடுகளை கேட்டுக்கொண்டு இந்த அணுகுமுறைகளில் பயங்கரவாத நிதி அளிப்பை தடுத்தல் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில், பயங்கரவாதச் செயல்களைத் தடுத்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பு, எல்லைகள் தாண்டி பயங்கரவாதிகள் நடமாட்டம், அடிப்படைவாத பிரச்சார எதிர்ப்பு, இண்டர்நெட் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்தல், பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழித்தல் ஆகியவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

 

  1. ஐ.நா-வின் சாசனம் தொடர்பான கொள்கைகள், நோக்கங்கள் ஆகியவற்றில் முழு நம்பிக்கையை வைத்து  இந்த பலதரப்பு அமைப்பினை வலுப்படுத்தும், நடவடிக்கைகளான விதிகள், நிறுவனங்கள், அமைப்புகள், சீர்திருத்தம், உலக சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல், நியாயம், நேர்மை, சட்ட அடிப்படை, சமச்சார்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவை  கொண்ட உலக அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக வலுவாக முயற்சி மேற்கொள்வோம்.

நிறுவனச் சீர்திருத்தம்

  1. 1997 பாங்காக் பிரகடனத்தின் அடிப்படையில், நீண்டகால நெடுநோக்கு, மற்றும் ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் ஆகியவற்றை வரையறுக்கும், நிறுவன அமைப்பின்    பல்வேறு அடுக்குகளின், பங்குபணி, கடமை, பொறுப்பு ஆகியவற்றை வரையறுத்தும், இந்த அமைப்புக்கான வரைவு சாசனத்தை தயாரிக்குமாறு பிம்ஸ்டெக் செயலகத்தை, பணிக்க முடிவு செய்துள்ளோம். இந்த வரைவை பிம்ஸ்டெக் நிரந்தர பணிக்குழுவும் இதர உயர்அமைப்புகளும் பரிசீலித்து 5-வது உச்சிமாநாட்டில் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளோம். பிம்ஸ்டெக் அமைப்பின் நடைமுறை விதிகளை உருவாக்குமாறு இந்த அமைப்பின் நிரந்தர பணிக்குழுவைக் கேட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.

 

  1. இந்த அமைப்பின் செயலகம் சார்ந்த நிர்வாக நிதி விவகாரங்களை கையாள பிம்ஸ்டெக் நிரந்தர பணிக்குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். பிம்ஸ்டெக் மையங்கள், அமைப்புகள், ஏற்படுத்தவும், கூட்டக்கால அட்டவணை தயாரிக்கவும், அமைப்பு செயல்பாடுகளை முன்னுரிமைப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.

 

  1. பிம்ஸ்டெக் மேம்பாட்டு நிதியத்தை உரிய தருணத்தில் உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கும் சாத்தியக் கூறுகள்  குறித்து ஆராய, உறுப்பு நாடுகளின் அமைச்சகங்கள், தேசிய அமைப்புகள், ஆகியவற்றை கேட்டுக் கொள்கிறோம். இந்த நிதியத்தை பிம்ஸ்டெக் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு பயன்படுத்தவும், பிம்ஸ்டெக் மையம் மற்றும் அமைப்புகளின் திட்டங்கள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு நிதி அளிக்கவும், பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

  1. பிம்ஸ்டெக் செயலகத்தின், நிதி மற்றும் மனிதவளம் உள்ளிட்ட  நிறுவனத்திறனை உயர்த்தி பிம்ஸ்டெக் செயல்கள் திட்டங்களை ஒருங்கிணைத்து, கண்காணித்து செயல்படுத்தவும் உடன்படுகிறோம்.  உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டபடி, திட்ட  யோசனைகளை தொடங்கவும், ஒப்படைக்கப்பட்ட இதர பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றவும், இயக்குநர்கள் எண்ணிக்கையை உறுப்புநாடுகளுக்கு ஒன்று என்ற வீதத்தில்  7-ஆக உயர்த்தவும் சம்மதிக்கிறோம்.

 

  1. சர்வதேச அரங்குகளில் பிம்ஸ்டெக்கின் தோற்றத்தையும் செயல்பாடுகளையும், உயர்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொள்கிறோம். அதாவது பொது அக்கறையுள்ள விஷயங்களில் பொதுவான நிலைப்பாட்டை மேற்கொள்ளுதல், பல்வேறு பலதரப்பு அமைப்புகள், நிறுவனங்கள், நடைமுறைகள் ஆகியவற்றில் குழு அந்தஸ்தைப் பெறவும், முயற்சி மேற்கொள்ள உடன்படுகிறோம்.
  2. ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். பிம்ஸ்டெக்கில் தற்போதுள்ள ஒத்துழைப்பை ஆய்வு செய்து மாற்றியமைத்தல், பிம்ஸ்டெக் திட்ட அமலாக்க நடைமுறையை சீரமைத்து உடனடி முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்கிறோம். பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு தூண்கள், முன்னுரிமையை சீரமைக்கும் தாய்லாந்தின் கொள்கை ஆவணத்தை  வரவேற்று அதனை பிம்ஸ்டெக் நிரந்தர பணிக்குழுவின் விவாதத்திற்கு உட்படுத்த முடிவு செய்கிறோம்.

 

  1. நிலுவையில் உள்ள சட்ட ஆவணங்கள் குறித்த விவாதத்தை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு அவற்றை இறுதி செய்ய ஒப்புக்கொள்கிறோம்.

 

  1. இந்த பிரகடனத்தில் இணைக்கப்பட்டுள்ள துறைகளில், மேம்பாடு ஏற்படுத்திய முன்னணி நாடுகளின் பங்கினை பாராட்டுகிறோம். இவற்றில் மேலும் முன்னேற்றம் அடைய முயற்சிகளை முடுக்கி விடுமாறு அந்த நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.

 

  1. பிம்ஸ்டெக்கின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு சுமித் நாக்கான்டாலாவின் பங்கு பணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வங்காளதேசத்தின் திரு. எம். ஷாஹிதுல் இஸ்லாம் அவர்களை  வரவேற்கிறோம்.

 

  1. பிம்ஸ்டெக்கின் தலைமைப் பதவியை 2014 மார்ச் மாதம் முதல் திறம்பட வகித்த நேபாளத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பிம்ஸ்டெக் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள இலங்கையை வரவேற்கிறோம்.
  2. பிம்ஸ்டெக்கின் உச்சிமாநாடு, இதரக் கூட்டங்களை உரிய காலத்தில் நடத்துவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.

 

  1. இந்தப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக உள்ள இணைப்பில் வெளியிடப்பட்ட பகுதி ஆய்வு குறித்த உத்தரவுகள், உறுதிப்பாடுகள், அறிக்கைகள் குறித்த நிலைப்பாட்டை தெளிவாக்க உடன்பட்டுள்ளோம்.

 

  1. இந்த உச்சிமாநாட்டின்போது நேபாள அரசு செய்த சிறப்பான ஏற்பாடுகள், மற்றும் விருந்தோம்பலுக்கான மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

4-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனத்தின் இணைப்பு
பகுதி சார்ந்த ஆய்வு

 

ஏழ்மை அகற்றுதல்

  1. 2030 நிலைத்த மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு ஏற்ப 2030-க்குள் வங்காள விரிகுடா மண்டலத்தில் ஏழ்மையை அகற்றும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். பிம்ஸ்டெக் ஏழ்மை ஒழிப்பு செயல்திட்டத்தை திறம்பட்ட முறையில் அமல்படுத்தி ஒட்டுமொத்த இலக்கான ஏழ்மை அகற்றுதல் இலக்குக்கு அனைத்துத் துறைகளும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

 

  1. தேசிய பொருளாதாரத்தின் சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் கூடுதல் முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை உரிய வயதினருக்கு வழங்குவதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

 

 

 

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு (.இணைப்புத்திறன்)       

  1. மண்டலத்தில் நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், நீர்வழிப்பாதைகள். கடல் மார்க்கங்கள். விமானப்பாதைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல், விரிவாக்குதல், நவீனமயமாக்குதல் மூலம் பல்வகை போக்குவரத்து இணைப்புகளை உருவாக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். பிம்ஸ்டெக் கடலோரக் கப்பல் போக்குவரத்து உடன்பாடு, பிம்ஸ்டெக் மோட்டார் வாகன ஒப்பந்தம் ஆகியவற்றை உறுப்பு நாடுகளின் சிறப்புச் சூழல் மற்றும் தேவை கருதி இறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

  1. பிம்ஸ்டெக் போக்குவரத்து இணைப்புக்கான பெரிய திட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது குறித்து மனநிறைவு தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உதவிய ஆசிய மேம்பாட்டு வங்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டத்தை  அமல்படுத்துவதற்கான வழிவகைகளை, உறுப்பு நாடுகளின் சிறப்புச் சூழல் மற்றும் தேவை கருதி வகுக்குமாறு பிம்ஸ்டெக் போக்குவரத்து இணைப்புத் திறன் பணிக்குழுவைக் கேட்டுக் கொள்கிறோம். ஆசியான்  இணைப்புத் திறன் பெருந்திட்டம் 2025, அயேயாவாடி, சவோ ப்ராயா – நீகாங் பொருளாதார ஒத்துழைப்பு அணுகுமுறை போன்ற பல்வேறு இணைப்புத்திறன் கட்டமைப்புகளுடன் இந்த பெருந்திட்டம் ஒருங்கிணைப்பையும், செயல்வழிகாட்டுதல்களையும்,  தந்து உதவும் முக்கிய ஆவணமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

 

 

  1. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாள பணிக்குழு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்த மண்டலத்தின் மக்களுக்கு மேலும் விரைவான குறைந்த விலையிலான இண்டர்நெட் மற்றும் மொபைல் தொலைத்தொடர்பு வசதியை வழங்க இது உதவும். இந்த  வகையில், புதுதில்லியில் 2018 அக்டோபர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ள இந்தியா மொபைல் காங்கிரஸ் 2018 மாநாட்டில், பிம்ஸ்டெக் அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தை நடத்த முன்வந்துள்ள இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். “புதிய டிஜிட்டல் வான்வெளி: இணைப்பு, படைப்பு, புதுமைப்படைப்பு” என்ற தலைப்பிலான இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்.

வர்த்தகம் மற்றும் முதலீடு

  1. பிம்ஸ்டெக் வரியற்ற வர்த்தக மண்டலத்தை விரைவில் அமைக்கும் உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்கிறோம். இந்த மண்டலத்தை கூடிய விரைவில் அமைப்பதற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் விரைவில் இறுதி செய்யுமாறு வர்த்தக பேச்சுவார்த்தைகள் குழு உள்ளிட்ட பிம்ஸ்டெக் வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் நிலைக் கூட்டத்திற்கு உத்தரவிடுகிறோம். சரக்கு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சுங்கவரி ஒத்துழைப்பு உடன்பாடு ஆகியவை குறித்து மனநிறைவை தெரிவித்துக் கொள்கிறோம்.  வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு கூட்டங்களில் முறையாக பங்கேற்குமாறு எமது சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்  / முகமைகளுக்கு உத்தரவிடுகிறோம்.

 

  1. பிம்ஸ்டெக் வர்த்தக அமைப்பு, பிம்ஸ்டெக் பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு புத்துயிரூட்டி வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் அரசுத்துறை, தனியார்துறை ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த விரும்புகிறோம். பிம்ஸ்டெக் விசா விஷயங்கள் குறித்த நிபுணர் குழுவை விசா வசதிகளுக்கான நடைமுறைகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
  2. 2018 டிசம்பரில் பிம்ஸ்டெக் தொடக்கநிலை நிறுவனங்கள் மாநாட்டை நடத்த இந்தியா வெளியிட்டுள்ள திட்டத்தை வரவேற்கிறோம். அனைத்து உறுப்பு நாடுகளும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாத  எதிர்ப்பு மற்றும் சர்வதேச குற்றங்கள்

  1. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்கள் மற்றும் வழிபாடுகளில் அதனை எவர் எங்கே செய்தாலும் அத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாது என வலியுறுத்தி இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  பயங்கரவாதத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க உடன்படுகிறோம்

 

  1. குற்ற விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி குறித்த பிம்ஸ்டெக் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்நோக்கியுள்ளோம்: உறுப்புநாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அநேக உறுப்பு நாடுகள் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு ஒப்பந்தம், சர்வதேச அமைப்புச் சார்ந்த குற்றம் மற்றும் சட்டவிரோத போதை மருந்து கடத்தல் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். எஞ்சியுள்ள உறுப்பு நாடுகளும் விரைவில் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

  1.  சட்ட அமலாக்கம், உளவுத் தகவல், பாதுகாப்பு முகமைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு என பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவும் பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் கூட்டத்தை தொடரவும், அவற்றின் மூலம் பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச குற்றங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.
  2. 2019 மார்ச் மாதம் பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள்  3-வது கூட்டத்தை நடத்த முன்வந்துள்ள தாய்லாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை

 

  1. தகவல் பரிமாற்றம், முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பு, தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மறுவாழ்வு மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றில் மூலம் பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பை ஊக்குவித்து மண்டலத்தில் தற்போதுள்ள திறன்களை மேம்படுத்தவும் உடன்படுகிறோம்.  வங்காள விரிகுடா மண்டலத்தின் இயற்கை பேரிடர், குறித்த தயார் நிலை மேம்பாடு ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக அரசுகளுக்கு  இடையிலான நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 

பருவநிலை மாற்றம்

  1. எளிதில் பாதிப்படையும் இமயமலைப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதி, சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆகியவற்றில் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.  சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானிக்கிறோம். இதன் மூலம் பருவநிலை மாற்றம் மக்கள் வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களை குறைக்கவும், முடிவு செய்துள்ளோம். மண்டலத்தின் பருவநிலை மாற்றத்திற்கு ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கையாக செயல்திட்டம் உருவாக்க அரசுகளுக்கு இடையிலான நிபுணர் குழுவை உருவாக்குவது என்று முடிவு செய்துள்ளோம். பல்வேறு நாடுகளின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பொதுவான ஆனால் வித்தியாசமான பொறுப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட திறன்கள் என்ற கொள்கையின்படி, பாரீஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதில் எமது உடன்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

எரிசக்தி

  1. இந்த மண்டலத்தின் எரிசக்தி ஆதாரங்கள் குறிப்பாக புதுப்பிக்கக்கூடிய, தூய்மையான எரிசக்தி ஆதாரங்களின் உயர் திறனை அங்கீகரித்து எரிசக்தி ஒத்துழைப்புக்கான விரிவான திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். இதற்கென மண்டலத்தின் நாடுகளுடன் நெருங்கி ஒத்துழைக்கவும், நீர்மின்சக்தி, இதர புதுப்பிக்கக் கூடிய ஆதாரங்கள் உள்ளிட்ட எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த அரசுகளுக்கு இடையிலான நிபுணர் குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்.

 

  1. மின்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நமது மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென தடையற்ற குறைந்த விலை மின்சாரத்தை வழங்குவதில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். பிம்ஸ்டெக் மின்கட்டமைப்பு இணைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். மின் கட்டமைப்பு இணைப்புகளில் தடைகளை அகற்றும் பணியில் தொழில்நுட்ப, திட்டமிடல், செயல்பாட்டு தரங்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மண்டலத்தில் மின்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு என பிம்ஸ்டெக் மின்சார மையத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

 

தொழில்நுட்பம்

  1. குறைந்த செலவிலான சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், கிடைக்கச்செய்தல், பகிர்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பிம்ஸ்டெக் தொழில்நுட்ப மாற்றித்தரும் வசதியை இலங்கையில், உருவாக்குவதற்கான உடன்பாட்டை செய்து கொண்டதற்காக உறுப்பு நாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம்.

 

  1. மனிதவள மேம்பாடு, கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு முக்கிய கவனம் செலுத்தி மண்டலத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழி வகுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம். அதே சமயம் தொழில்நுட்பத்தின் எதிர்மறை தாக்கப் பிரச்சினையை தீர்ப்பது அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டுள்ளோம்.

வேளாண்மை

  1. விவசாயம் மற்றும் பயிர்கள். கால்நடை, தோட்டப்பயிர், பண்ணை எந்திரங்கள், அறுவடை மேலாண்மை, உள்ளிட்ட விவசாயம் சார்ந்த துறைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் உற்பத்தித்திறன், வேளாண்மை உற்பத்திப் பொருட்களின் லாபத்தன்மை, ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்துள்ளோம். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய ஒத்துழைப்பை தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.  பாரம்பரிய மற்றும் நவீன பண்ணை முறைகளை உரியவாறு ஒருங்கிணைத்தல், செலவினங்களைக் குறைத்தல், வருமானத்தை பெருக்குதல், விவசாய சமுதாயத்தினரின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றில் பாரம்பரிய பண்ணை தொழில்நுட்பத்தை பாதுகாத்து மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் உறுப்பு நாடுகளிடையே விவசாயம் வர்த்தகம் மேம்படும் என்றும் ஏழ்மை அகற்றுதலுக்கு பங்களிக்கப்படும் என்றும் வேலை வாய்ப்புகள் பெருகி, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
  2. வேளாண்மை குறித்த முதலாவது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் கூட்டத்தை 2019-ல் நடத்த முன்வந்துள்ள மியான்மருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல பிம்ஸ்டெக் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகள் குறித்த கருத்தரங்கை 2019-ல் நடத்த முன்வந்துள்ள இந்தியாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மீன்வளம்

  1. மண்டலத்தின் கடல் வளத்தை பாதுகாத்து, நிர்வகித்து நிலையான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு தொடர வலியுறுத்தப்படுகிறது. மண்டலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், மீன்வளத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளோம். நிலைத்த கடல் மீன்பிடிப்பு, துறையின் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய தேசிய முகமைகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.  நிலத்தால் சூழப்பட்டுள்ள உறுப்பு நாடுகளில் உள்நாட்டு மீன்பிடிப்புத் தொழிலை மேம்படுத்தி பயன்தர வழிவகைகளை ஆராயுமாறு இந்த அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பொது சுகாதாரம்

  1. பிம்ஸ்டெக் மண்டலத்தில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை அச்சுறுத்தும், தொற்று அல்லாத நோய்கள் மற்றும் பல நாடுகள் சம்பந்தப்பட்ட, எச் ஐ வி, எய்ட்ஸ், மலேரியா, டெங்கு, காசநோய், இன்புளுயன்சா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பொது சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பு, இத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றங்கள். தீவிர ஒத்துழைப்பு, அனுபவ பகிர்வு, பணியாளர் பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்த நோய்களை தடுப்பது ஊக்குவிக்கப்பட்டது.  பாரம்பரிய மருத்துவத்துறையில் ஒத்துழைப்புக்காக தாய்லாந்து மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே தொடர்புகள்

  1. உறுப்பு நாடுகளிடையே மேலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நிலைகளில் மக்கள் தொடர்புகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பிம்ஸ்டெக் குறித்து பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதில் பிம்ஸ்டெக் கொள்கை சிந்தனையாளர் குழுவின் கட்டமைப்பு மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து திருப்தி அடைகிறோம். இந்த சிந்தனையாளர் குழுவுக்கான நிபந்தனைகளை இறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
  2. மக்கள் தொடர்புகளை மேம்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்., பல்கலைக்கழகங்கள். கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள், ஊடக சமுதாயம், ஆகியவற்றுக்கான உரிய பிம்ஸ்டெக் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய ஒப்புக் கொள்ளப்பட்டது.

பண்பாட்டு ஒத்துழைப்பு

  1. நமது மக்களிடையே உள்ள வரலாற்று ரீதியிலான பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுப்பு நாடுகளிடையே பண்பாட்டு பரிவர்த்தனைகளை அதிகரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.  பண்பாட்டு பலதரப்பு தன்மைக்கு மரியாதையும், சகிப்புத்தன்மையும், மேம்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மண்டலத்தின் இணைப்புப் பாலமாக விளங்கும் புத்த சமயத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. புத்த சமய பயணச்சுற்று ஒன்றை ஏற்படுத்தி இதனைத் தெளிவாக்க உறுதி செய்யப்பட்டது.
  2. உரிய கால இடைவெளியில் பிம்ஸ்டெக் பண்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவும், பிம்ஸ்டெக் கலை விழாக்களை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 2-வது பிம்ஸ்டெக் பண்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தையும், முதலாவது பிம்ஸ்டெக் கலைவிழாவையும் நடத்த முன்வந்த வங்காளதேசத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு உறுப்பு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சுற்றுலா

  1. பிம்ஸ்டெக் நாடுகளிடையே சுற்றுலாவை மேம்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. கொல்கத்தாவில் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிம்ஸ்டெக் மண்டல மேம்பாடு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கான செயல்திட்டம் உள்ளிட்ட பண்டைய திட்டங்களைக் கருத்தில் கொண்டும், வளர்ந்து வரும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும் இதற்கான அணுகுமுறைகளை வரையுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  இந்த செயல்திட்டம், இரண்டாவது பிம்ஸ்டெக் சுற்றுலா அமைச்சர்கள் வட்ட மேஜை மற்றும் 2006 காத்மாண்டு பயிலரங்கு ஆகியவற்றில் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து சுற்றுலா வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.  புத்த சமய சுற்றுலாத் திட்டம், கோவில் சுற்றுலாத்திட்டம், தொன்மையான நகரங்கள் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா போன்றவற்றை மேம்படுத்துவதில் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.  நேபாள சுற்றுலா ஆண்டு 2020 –உடன் இணைந்து பிம்ஸ்டெக் சுற்றுலா மாநாட்டை 2020-ல் நேபாளத்தில் நடத்த முன்வந்துள்ள நேபாளத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மலைப்பகுதி பொருளாதாரம்

  1. நிலைத்த மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், உயிரி பன்முகத் தன்மை உள்ளிட்ட மலைப்பகுதி சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நேபாளம் தயாரித்த பிம்ஸ்டெக் நாடுகளின் மலைப்பகுதி பொருளாதார மேம்பாடு குறித்த கொள்கைக் குறிப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தக் கொள்கை குறித்து இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும். இது குறித்த செயல்திட்டத்தை உருவாக்கு அரசுகளுக்கு இடையிலான நிபுணர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நீலப்பொருளாதாரம்

  1. நீலப்பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. மண்டலத்தின் நிலைத்த மேம்பாட்டுக்காக இந்தத் துறையில் ஒத்துழைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. நீலப் பொருளாதாரம் குறித்த செயல் திட்டத்தை உருவாக்க அரசுகளுக்கு இடையிலான நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிலத்தால் சூழப்பட்ட உறுப்பு நாடுகளின் சூழ்நிலை மற்றும் சிறப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

  1. வங்காளதேசத்தில் 2017-ல் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச நீலப்பொருளாதார மாநாடு நடத்தப்பட்டது குறித்து மன நிறைவு தெரிவிக்கப்பட்டது.

——