பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பு திட்டத்தின் (நாட்ரிப்) செலவு மதிப்பீட்டை 2727.30 கோடியாக திருத்தி அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு தரத்துடன் வாகன தரசோதனை மையத்தை அமைக்க வேண்டும் என்ற இந்திய அரசின் பிரதான எண்ணப்படி தொடங்கப்பட்ட நாட்ரிப் திட்டம் முழுமை பெற அமைச்சரவை ஒப்புதல் வகை செய்யும். வாகனதொழில்சார்ந்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் முழு அளவிலான சோதனை உறுதியளிப்பு வசதிக்கு இது ஆதரவாக அமையும். வடக்கு வாகன தொகுப்புமையம் அரியானா மாநிலம் மனேசரிலும், தெற்கு வாகன தொகுப்பு மையம் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடத்திலும் அமையும். மேலும் ஏற்கெனவே புனேவில் உள்ள ஏ.ஆர்.ஏ.ஐ. மையம், மகாராஷ்டிராவில் அகமது நகரில் உள்ள மேற்கு வாகன தொகுப்பான வி.ஆர்.டி.இ. மையம் ஆகியவற்றை மேம்படுத்தவும் இது உதவும்.
நாட்டிரிப் திட்டத்தின் தேவைகள்:
சாலைபாதுகாப்பு பன்னாட்டு தரத்துடன் கூடிய நடைமுறைகளுக்கு உறுதி செய்வது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாட்டிரிப் திட்டம் தேவையாகும். வடிவமைப்பு, உற்பத்தி, இந்தியாவில் வாகனங்களின் செயல்பாடு ஆகியவற்றில் ஐ.நா. ஒழுங்குமுறைகளை பின்பற்றவும் இது தேவையாகிறது.
2016-26 வரையிலான வாகன கொள்கை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதுடன், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வாகன தயாரிப்பில் 30 முதல் 40 சதவீத ஏற்றுமதிக்கும் இது உதவியாக இருக்கும்.
சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்பு தரத்துடன் (ஐ.நா.பார்சிலா தீர்மானப்படி) இந்திய வாகனங்கள் உற்பத்தி செய்யயப்படவும், அதிகப்படியான உயிரிழப்புகளை தடுக்கவும் இது வகை செய்யும்.
இந்திய சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் விற்பனைக்கு பின்பும் உற்பத்தியின்போதும் உதிரிபாக நற்சான்றுக்கு வகைசெய்யப்படும். உலக தரத்திலான ஆய்வுக்கூடம், சாதகமான பாதுகாப்பு சோதனை தளம் (மோதல் சோதனை) தொழில்நுட்ப தரச்சான்று, இந்துாரில் அதிவேக தடசோதனை மையம் அமைத்தல், பொருந்தகூடிய மின்காந்த சோதனைகள், ஒலி அதிர்வு, கடுமையான சோதனைகள், சி.ஏ.டி, மற்றும் சி.எம்.இ. உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் இது தேவையாகும்.
இதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களுக்கும், அதன் உதிரி பாகங்களுக்கும், இந்திய அரசின் சான்றை பெறும். அதன் மூலம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ஊக்கம் பெறும்.
வாகன தயாரிப்புகள் வாடிக்கையாளர் சேவைசார்ந்ததாக மாறவும், நாட்ரிப்மையங்கள் உள்ளூர் மற்றும் பன்னாட்டு போட்டிக்கான ஒருங்கிணைந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்து, உலக தரத்தில் இநதிய பொருட்களின் உற்பத்திக்க வகை செய்யும். அதன் விபரம் வருமாறு
(அ)வாடிக்கையாளர் சேவை இனங்கள்-
நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், வர்த்தக வாகன உற்பத்தியாளர்கள்,முன்று சக்கர வாகன உற்பத்தியாளர்கள், இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், கட்டுமான தளாவாட கருவிகள் உற்பத்தியாளர்கள், வேளாண் கருவிகள் (டிராக்டர்)உற்பத்தியாளர்கள், இ.ரிக்ஷா உற்பத்தியாளர்கள், பேருந்து கூண்டு (பாடி) உற்பத்தியாளர்கள், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி எரிவாயு சார்ந்த கருவிகள் தயாரிப்பாளர்கள். தானியங்கி மற்றும் தானியங்கி அல்லாத என்ஜின் உற்பத்தியாளர்கள். வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள்.
(ஆ) சேவைகன் இனங்கள்-
1) பல்வேறு வாகன வகைகளுக்கு சான்றிதழ் அளித்தல்
(அதாவது, எச்.இ.வி., இ.வி. டீசல், பெட்ரோல்,சி.என்.ஜி. எல்.பி.ஜி வாகனங்களுக்கு சி.எம்.வி.ஆர் –1989ன் படி)
2) அறிவிக்கப்பட்ட வாகன பாகங்கள் சான்றளித்தல்
3) வாகனங்களுக்கான ஏற்றுமதி தரச்சான்று
4) வாகனத் தொழில் சார்ந்த மேம்பாட்ட சோதனை
5) வாகனத்தொழிற்சாலைகளுக்கான சிறப்பு உற்பத்தி மேம்பாட்டினை செயல்படுத்துதல்
6) வாகன சோதனை, அடிச்சட்ட சோதனை திறன் மதிப்பீடு செய்தல்
7) தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
8) புதிய ஒழுங்குமுறைகளுக்கான தகவல்களை சேகரித்தல்