பிரதமர் திரு நரேந்திர மோடி உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று நிலவரம் குறிப்பாக ஒமிக்ரான் பரவல், மற்றும் தடுப்பூசி இயக்கத்தின் நிலை ஆகியவை குறித்து பிரதமர் ஆய்வு நடத்தினார்.
கொவிட்-19 பெருந்தொற்று பரவலின் உலகளவில் இந்தியாவின் நிலவரம் குறித்த விரிவான வீடியோ விளக்கம் அளிக்கப்பட்டது. தடுப்பூசி இயக்கம், தடுப்பூசியின் செயல்திறன்,மருத்துவமனையில் அனுமதிப்பது வெகுவாக குறைந்திருப்பது, தொற்று பரவலை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்துபவர்கள், சுகாதார பணியாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் இடையறாத முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். கொவிட் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை இணையமைச்சர், நித்தி ஆயோக் உறுப்பினர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***************
Chaired a meeting to review the COVID-19 situation and vaccination drive across the nation. We are proud of our doctors, nurses and healthcare workers who have ensured stellar vaccination, which has helped in curtailing the spread of the infection. https://t.co/f5MNMx6dpV
— Narendra Modi (@narendramodi) March 9, 2022