நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்திய ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அரசியல் நிர்ணய சபையின் தலைவராக, இந்திய ஜனநாயகத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்ததில் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். இன்று நாம் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் மேலும் உத்வேகம் அளிக்கின்றன.”
***
(Release ID: 2079972)
TS/BR/KR
देश के प्रथम राष्ट्रपति भारत रत्न डॉ. राजेन्द्र प्रसाद जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। संविधान सभा के अध्यक्ष के रूप में भारतीय लोकतंत्र की सशक्त नींव रखने में उन्होंने अमूल्य योगदान दिया। आज जब हम सभी देशवासी संविधान के 75 वर्ष का उत्सव मना रहे हैं, तब उनका जीवन… pic.twitter.com/ZFyYucqFgv
— Narendra Modi (@narendramodi) December 3, 2024