Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பிரதமருடன் சந்திப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பிரதமருடன் சந்திப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பிரதமருடன் சந்திப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பிரதமருடன் சந்திப்பு


அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பிற ஊக்கத் தொகைகள் உயர்த்தப்பட்டதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (19.09.2018) பிரதமர்

திரு. நரேந்திர மோடியை சந்தித்து மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தனர்.
அங்கன்வாடி பணியாளர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட பிரதமர், தம்மை சந்திப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்ததற்காக தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் உருவாகியுள்ள சிறப்பான தருணத்தை விட்டு விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். நிலையான கவனம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்கு ஊட்டச்சத்து தேவை என்றும் அதனை அங்கன்வாடி பணியாளர்கள் வழங்கி வருவதையும் பிரதமர் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து உதவிகள் நியாயமான முறையில் பயன்படுவதை உறுதி செய்வதற்காக அங்கன்வாடி பணியாளர்களை பிரதமர் பாராட்டினார்.

அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தைகள் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அவர் கூறினார். அங்கன்வாடிகளிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படுவதையும், அங்கன்வாடி பணியாளர்களிடையே ஊட்டச்சத்து பற்றிய சிறப்பான கவனிப்பு உணர்வு ஏற்படுவதையும் ஊக்குவித்தார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தியும் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.

***