Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடுமுழுவதும் 10,000 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளை பிரதமர் 29 ம் தேதி தொடங்கி வைக்கிறார்


 

பிரதமர் கிசான் பயனாளிகளுக்கு கிசான் திட்ட கடன் அட்டைகளை வழங்கும் இயக்கத்தையும் தொடங்கி வைக்கிறார்

உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட்டில் பிரதமர் கிசான் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்பு

                                  

 

சித்ரகூட்டில் பிப்ரவரி 29 ஆம் தேதி நாடுமுழுவதும் 10,000 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

நாட்டில்  சுமார் 86 சதவீத விவசாயிகள் 1.1 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் நடுத்தர வேளாண் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  இத்தகைய சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகள் சாகுபடியின் போது, தொழில்நுட்பம், தரமான விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான நிதித் தேவை உட்பட ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடுகிறது.  பொருளாதார வலிமைக் குறைவு காரணமாக, தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் அவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றனர். 

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு இந்த விவசாயிகள்  உற்பத்தி அமைப்புகள், பெருமளவுக்கு உதவ முடியும்.  விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், இடுபொருட்கள், நிதியுதவி, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் உதவுவதுடன், விவசாயிகளுக்கு விரைந்து வருமானம் கிடைக்க வழி செய்வார்கள். 

பிரதமர் கிசான் திட்டத்தின் ஓராண்டு நிறைவு

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது. 

விவசாயிகள் தங்களது தொழிலுடன், அதுசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குடும்ப செலவுக்கு தேவையான வருமானத்தை பெறுவதற்கு ஆதாரவாக, பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை மோடி அரசு தொடங்கியது. 

இத்திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பணப் பயன் கிட்டுகிறது.  இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.  நேரடி பணமாற்றம் மூலமாக, தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. 

இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது.  இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் இத்திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 

பிரதமர் மோடியின் இரண்டாவது அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

கிசான் கடன் அட்டைகளுடன் பிரதமர் கிசான் பயனாளிகளை கண்டறியும் சிறப்பு இயக்கம்

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் அனைத்துப் பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்குவதற்கான செறிவூட்டும் இயக்கம் ஒன்றையும் பிப்ரவரி 29 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் சுமார் 8.5 கோடி பயனாளிகளில் 6.5 கோடிக்கும் மேற்பட்டோர்  கிசான் கடன் அட்டைகளை வைத்திருக்கின்றனர்.  

எஞ்சிய இரண்டு கோடி பயனாளிகளுக்கும் கிசான் கடன் அட்டைகளை வழங்குவதை இந்த சிறப்பு இயக்கம் உறுதி செய்யும். 

பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி முடிய அனைத்து பிரதமர் கிசான் பயனாளிகளுக்கும் கடன் பெறுவதற்கான வகை செய்யும் 15 நாள் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இதில் வங்கிக் கணக்கு எண், நில ஆவண விவரங்கள் ஆகியவற்றை எளிமையான ஒருபக்க படிவத்தில் நிரப்பி, தற்போது இந்தத் திட்டத்தின் பயனாளி அல்ல என்பதற்கு எளிய உத்தரவாதம் வழங்கினால் போதும்.

பிப்ரவரி 26 ஆம் தேதி முடிய விண்ணப்பம் அளித்துள்ள அனைத்து பயனாளிகளும் 29 ஆம் தேதி வங்கிக் கிளைகளுக்கு வரவழைக்கப்பட்டு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படும்.

*************