Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அமைப்பு ரீதியான பணித்திறமைகளை நினைவு கூர்ந்த பிரதமர், இதழியல் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

பிஜேபியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான பிரபாத் ஜாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது வேலைத் திறனும், நிறுவனத்தை வலுப்படுத்துவதில் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளேன். அவர் தனது பொது சேவைப் பணிகளுடன், பத்திரிகை மற்றும் எழுத்துத் துறையிலும் விலைமதிப்பற்ற பங்களிப்பை  வழங்கியுள்ளார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நேயர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”

***

(Release ID: 2037330)

MM/RS/KR