Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 17.7.2017 அன்று தொடர்வதை முன்னிட்டு பிரதமர் அளித்த அறிக்கையின் தமிழாக்கம்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடர்கிறது. கோடைகாலத்திற்கு பிறகு வந்துள்ள முதல் மழை மண்ணில் இருந்து புதிய நறுமணத்தை எழுப்பும். அதேபோல், ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பிறகு நடக்கும் இந்த மழைக்கால கூட்டத் தொடர் புது உத்வேகத்தை ஏற்படுத்தும். எப்போதெல்லாம் அரசியல் கட்சிகளும் அரசும் சேர்ந்து நாட்டின் நலனை மனதில் கொண்டு ஒரு முடிவை எடுக்கின்றனவோ அப்போதெல்லாம் மக்களின் நலனுக்கான அவர்களின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக அமலாக்கத்திற்கு வந்தது இதனை உறுதி செய்கிறது. ஜி.எஸ்.டி. ஆதரவு உணர்வு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இந்த ஜி.எஸ்.டி. உத்வேகம் இந்த கூட்டத் தொடரில் நிலைக்கும் என்று நான் நம்புகிறேன். பல்வேறு விஷயங்களுக்கு இந்த மழைக்கால கூட்டத்தொடர் முக்கியமானதாகும். 15.08.2017 அன்றோடு நமது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் முடிகிறது. 09.08.2017 அன்றோடு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்று 75 ஆண்டுகள் முடிகிறது. இந்த கூட்டத்தொடரில், நமது நாட்டிற்கு குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.  ஒருவகையில், இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நமது நாடு காணும். அதானால், இயற்கையாக இந்த மழைக்கால கூட்டத்தொடரின் மீது மக்களின் கவனம் அதிகமாக இருக்கும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் தங்களது கடின உழைப்பு மூலம் நமது நாட்டில் உணவு பாதுகாப்பினை உறதி செய்து வரும் விவசாயிகளுக்கு நாம் தலை வணங்குவோம். நமது நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க இந்த மழைக்கால கூட்டத்தொடர் வாய்ப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அனைவருக்கும் மிக்க நன்றி.

*****