Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்ட 123 – வது திருத்த மசோதா மற்றும் 2017ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய திரும்ப பெறும் மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேசிய ஆணையத்திற்கு பதவிகளையும் அலுவலக இடங்களையும் தொடர்ந்து வைத்து கொள்ளவும் அனுமதி

நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்ட 123-வது திருத்த மசோதா மற்றும் 2017ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய திரும்ப பெறும் மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது. மேலும் தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் பதவிகள் / அதிகாரிகள் மற்றும் அலுவலக இடம் ஆகியவற்றை உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதியையும் மத்திய அமைச்சரவை வழங்கியது.

2017ம் ஆண்டு 123 – வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா என்ற அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு ஆனது இந்த அனுமதி இதன்படி:

a) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் என்ற பெயரில் சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 338பி -யின் ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

b) அரசியல் சட்ட பிரிவு 366 ன் கீழ் 26சி என்ற புதிய ஷரத்து சேர்க்கப்படும். இதன்படி “சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினர்” என்பது அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 342 ஏ-யின் படி கருத்தில் கொள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பொருள்படும்.

2. கீழ்க்கண்டவற்றுக்கு என மசோதா தாக்கல் செய்யப்படும்

a) 1993ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய சட்டம் திரும்ப பெறப்படும். இதனுடன் கூட இதற்கு வகை செய்யும் 2017ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் பாதுகாப்பு பிரிவும் திரும்ப பெறப்படும்

b) மத்திய அரசு குறிப்பிடும் தேதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் கலைக்கப்படுவதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து மேலே குறிப்பிட்ட சட்டத்தின் 3வது பிரிவு 1-வது துணைப்பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் கலைக்கப்பட்டுவிடும்.

3. a) தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் 52 பதவி இடங்களும் அவற்றில் பணியாற்றி வரும் அதிகாரிகளும் 338 பி அரசியல் அமைப்பு சட்டப் பிரிவின் கீழ் அமைய உள்ள உத்தேச பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு ஒதுக்கப்படுவார்கள்.

b) தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய அலுவலகம் அமைந்துள்ள புது தில்லி -110066, பிகாஜி காமா பிளேஸ், டிரைகட்-1 என்ற வளாகம் 338 – பி அரசியல் அமைப்பு சட்டப்பிரிவின் படி அமைக்கப்பட உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மேற்கண்ட முடிவுகள் சமூக மற்றும் கல்வி ரீதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒட்டுமொத்த நலனுக்கு உதவியாக அமையும்.

அரசியல் அமைப்பு சட்டம் 338-பி பிரிவு சேர்க்கப்பட்டு அதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு சட்டத்தை திரும்பப் பெறும் சட்டம் அவசியமாகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 338-பி பிரிவின் படி அமைய உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் செயல்படுவதில் தொடர்ச்சி நிலை நிலவுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது.