மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களே, குடியரசுத் துணைத்தலைவர் அவர்களே, மக்களவைத் தலைவர் அவர்களே, குலாம் நபி அவர்களே, நரேந்திர சிங் அவர்களே அடல் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே, அடல் அவர்களின் ஆர்வலர்களே.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய வடிவில் அடல் அவர்கள் நமக்கு தொடர்ந்து ஆசிகளை வழங்குவார். நமக்கு ஈர்ப்பு சக்தியாகத் தொடர்வார். அடல்அவர்களின் வாழ்க்கைச் சிறப்புகளை பல்வேறு அம்சங்களாக எவரும் மேற்கோள் காட்ட முடியும். பல மணி நேரம் இதுபற்றி நாம் பேச முடியும். உயர்ந்த மனிதர்களை வர்ணிக்க வெறும் வார்த்தைகள் மட்டுமே போதுமானவையாக இருக்காது. அவரைப் போல் ஒரு சில ஆளுமைகள் மட்டுமே உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகாலம் செலவிட்ட பின், அதிகாரத்தில் இல்லாமல் பல ஆண்டுகாலம் அவர் இருந்திருக்கிறார். இருப்பினும், சாமானிய மக்களுக்குத் தொடர்ச்சியாக அவர் சேவை செய்துள்ளார். உறுதியேற்றப் பாதையில் சாமானிய மக்களுக்காகத் தொடர்ந்து அவர் குரல்எழுப்பியிருக்கிறார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அவர் ஒரு போதும் தனது பாதையிலிருந்து விலகியதில்லை. பொதுமக்களின் சேவகர்களாகிய நாம் இவற்றை எல்லாம் அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அரசியலில் ஏற்ற இறக்கங்களும் வெற்றி தோல்விகளும் இருக்கும். ஆனால், நமது சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இலக்குகளை நோக்கி நாம் தொடர்ந்து சென்றால் சாதகமான முடிவுகளைப் பெற முடியும் என்பதை அடல் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் காணமுடியும். அவரது உரைகள் மிகவும் ஈர்ப்புடையவை, அவற்றைப் பற்றி நிறைய பேசியுள்ளனர். இருப்பினும், இவை குறித்து எதிர்காலத்தில் விரிவான உளவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் அவரது உரையைவிட பல தருணங்களில் அவரது மவுனமே மாபெரும் பலமாக இருப்பது தெரியவரும். பொதுக்கூட்டத்தில் ஒரு சில வார்த்தைகள் பேசிய பின், அவர் அமைதியாக இருக்கும் போது கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் கடைசி நபராக இருப்பவர் கூட, அந்த மவுனத்தின் மூலம் தகவலை அறிந்து கொள்வார். அவரிடம் அளப்பரிய தகவல் வெளிப்பாட்டுத்திறன் இருந்தது. எப்போது பேசவேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் தமது வாழ்க்கையில் இதனைப் பயன்படுத்தினார் அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கவில்லை என்றாலும், அவரது கண்கள் பெரும்பாலும் மூடியே இருக்கும் என்பதை நாம் கண்டிருப்போம். அவர் ஒரு போதும் அதிகம் பேசியதில்லை. அவருடைய தனித்திறன் என்பது விவாதிப்பதும், நல்ல விவாதங்களை முன் வைப்பதும்தான். இருப்பினும், கட்சிக் கூட்டங்களில் பல நேரங்களில் விஷயங்கள் சூடாகும் போது அவர் பயன்படுத்தும் ஒரு சில வார்த்தைகள் நிலைமையை லகுவாக்கிவிடும். நிலைமையை அவர் அளவிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார். இத்தகைய ஆளுமை ஜனநாயகத்தின் பலமாகும். ஜனநாயகத்தில் எவரும் எதிரிகள் இல்லை. ஜனநாயத்தில் போட்டியும், எதிர்ப்பும் மட்டுமே உண்டு. ஒருவரது மதிப்பையும், கவுரவத்தையும், பராமரிப்பது போன்ற சிலவற்றை நமது புதிய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நபரிடமிருந்து போட்டியோ கடுமையான விமர்சனமோ வந்த போதும், அந்த நபரை எவ்வாறு மதிப்பது என்ற விஷயத்தை அடல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய இந்த நிகழ்வு அடல் அவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். எனது தரப்பிலும், இந்த அவையின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும், நான் மாண்புமிகு அடல் அவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துகிறேன்.
——-
Now on, Atal Ji will be forever in the Parliament's Central Hall, inspiring us and blessing us.
— PMO India (@PMOIndia) February 12, 2019
If we start talking about the goodness of Atal Ji, it will take hours and hours: PM @narendramodi speaking at the programme marking the unveiling of Atal Ji's portrait at Central Hall
Atal Ji had a long political career, a large part of that career was spent in Opposition.
— PMO India (@PMOIndia) February 12, 2019
Yet, he continued raising issues of public interest and never ever deviated from his ideology: PM @narendramodi
There was power in Atal Ji's speech and there was equal power in Atal Ji's silence.
— PMO India (@PMOIndia) February 12, 2019
His communication skills were unparalleled. He had a great sense of humour: PM @narendramodi