குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஹமீது அன்சாரி மாநிலங்களவையின் தலைவராக 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்ட போது அவரது ஆற்றல், பொறுமை மற்றும் மதிநுட்பம் வெளிப்பட்டதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார். அங்கு ஒருவர் எல்லா நிலையிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் திரு. ஹமீது அன்சாரிக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர், தனது நீண்ட பொதுவாழ்க்கையின் போது எவ்வித சர்ச்சைக்கும் ஆளாகாதவர் திரு. அன்சாரி என்று பிரதமர் குறிப்பிட்டார்.
திரு. அன்சாரியின் குடும்பம் பல தலைமுறையாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் குடும்பம். 1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது நாட்டைக்காக்க தன்னுயிரை ஈந்த பிரிகேடியர் உஸ்மானின் தியாகத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
மாநிலங்களவையை நடத்திச் செல்வதில் திரு. அன்சாரியின் நீண்ட அனுபவம் குறித்து திரு. அன்சாரி தன் எண்ணங்களை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், மேலவையை திறனுள்ளதாக ஆக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் குறிப்பிட வேண்டும் என்றார் பிரதமர்.
Joined the farewell programme for Vice President Shri Hamid Ansari. pic.twitter.com/q7ruIVTYDn
— Narendra Modi (@narendramodi) August 10, 2017