Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கத்தின்போது நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடையே பிரதமர் வெளியிட்ட அறிக்கை

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கத்தின்போது நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடையே பிரதமர் வெளியிட்ட அறிக்கை


அனைவருக்கும் வணக்கம்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இப்போது துவங்கவுள்ளது. நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடர் சரக்கு-சேவை வரி மீதான முக்கியமான முடிவை எடுத்தது. ஒரு நாடு ஒரே வரி என்ற கனவை நனவாக்குவதில் முக்கியமானதொரு பங்களிப்பை நாடாளுமன்றம் வழங்கியது.

அந்த நாளில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது நன்றியை நான் அப்போது தெரிவித்தேன்.

நாட்டின் பெரும்பாலான நலன்களுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, சாதகமான விளைவுகளும், பயன்களும் உருவாகின்றன. இந்தக் கூட்டத்தொடரலும் சில நல்ல முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் நல்ல விவாதங்களை அது எதிர்நோக்கும் என்றே நான் நம்புகிறேன். இச்சமயத்தில் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் என்பதும் கூட உண்மைதான்.

மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் குறித்தும் நாங்கள் பேசவிருக்கிறோம்.

அதுபோக, அரசின் சிந்தனைப்போக்கும் அவற்றில் பிரதிபலிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் நல்ல, தெளிவான விவாதங்களின் மூலம் சிறப்பான பங்களிப்பையே நான் எதிர்பார்க்கிறேன்.

அரசைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தின் செயல்திட்ட்த்தை நிறைவேற்றுவதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

சரக்கு-சேவை வரி தொடர்பான வேலைகளை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசுகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். இந்தக் கூட்டத்தொடருக்கு முன்பாகவும் கூட இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தன. எந்தவொரு விஷயம் குறித்தும் வெளிப்படையான விவாதம் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. குறிப்பிடத்தக்க, பயனுள்ள முடிவுகளை எட்டுவதற்குத் தேவையான சூழலை இந்த விவாதங்கள் உருவாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.