Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாக்பூரில் பிரதமர்

நாக்பூரில் பிரதமர்

நாக்பூரில் பிரதமர்

நாக்பூரில் பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் டாக்டர். பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமிக்கு சென்று அங்கு மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.

பிரதமர் கோரடி அனல் மின் நிலையத்திற்கு வருகை தந்து, அதன் துவக்கத்தை குறிக்கும் கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் அவர், மின்நிலையத்தின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறைக்கும் சென்றார்.

மங்காபூர் உள்விளையாட்டு வளாகத்தில், அவர் நாக்பூரில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ். அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதை குறிக்கும் டிஜிட்டல் கல்வெட்டுக்களை திறந்து வைத்தார்.

டாக்டர். பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் தீக்ஷாபூமியை குறிக்கும் நினைவு தபால்தலையை பிரதமர் வெளியிட்டார். அவர், மாபெரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட லக்கி கிரஹக் யோஜனா மற்றும் டிஜி-தன் வியாபர் யோஜனா ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கட்டை விரலை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காணும் அடிப்படையிலான ரொக்கமற்ற கட்டண முறையான பீம் ஆதாரை பிரதமர், தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. நரேந்திர மோடி, அம்பேத்கர் பிறந்த நாளன்று நாக்பூரில் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். தீக்ஷாபூமியில் பிரார்த்தனை செய்ய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன்னுள் எவ்வித கசப்பின்மையோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ கொண்டிருக்கவில்லை என்றார். இதுவே பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்களின் தனிச்சிறப்பாகும் என பிரதமர் கூறினார்

கோரடி அனல் மின் நிலையம் குறித்து பிரதமர், 21-ம் நூற்றாண்டில் மின் சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அரசு அர்ப்பணிக்கத்தக்க முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுவதாகவும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைவதற்காக மக்கள் புரிந்த தியாகங்களை நினைவுகூர்ந்த பிரதமர், அனைத்து இந்தியர்களும் மின்வசதி, தண்ணீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்களுக்கு சொந்தமான இல்லத்தை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பீம் செயலி, நாடு முழுவதும் பலரின் வாழ்க்கைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், ஊழல் அச்சுறுத்தல்களை எதிர்த்து தூய்மைப்படுத்தும் இயக்கமாக டிஜி-தன் இயக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

****