Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குப் பிரதமர் சென்றார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, டாக்டர் கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குச் வருவது மிகவும் சிறப்பான அனுபவம்.

பரம் பூஜ்ய டாக்டர் சஹாபின் ஜெயந்தியான வர்ஷா பிரதிபத அன்று இங்கு வந்திருப்பது இன்றைய பயணத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது.

பரம பூஜ்ய டாக்டர் சாஹப், பூஜ்ய குருஜி ஆகியோரின் சிந்தனைகளிலிருந்து என்னைப் போன்ற எண்ணற்ற மக்கள் உத்வேகத்தையும், வலிமையையும் பெறுகிறோம். வலுவான, வளமான, கலாச்சார ரீதியான பெருமைமிக்க பாரதத்தை கற்பனை செய்த இந்த இரண்டு பெரியவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது பெரிய மரியாதை ஆகும்”

***

PLM/KV