Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும்  520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவு அடைந்ததையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் தொடங்கி வைத்தார்.

 

இது குறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

 

“சிறந்த, தரமான உள்கட்டமைப்பு வசதிகளை  வழங்குவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், நாக்பூருக்கும், ஷிரடிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலைத் திட்டம்  அமைந்துள்ளது. இந்த நவீன நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், நெடுஞ்சாலையிலும் பயணித்தேன். மகாராஷ்டிராவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த சாலை அமையும் என்று நான் நம்புகிறேன்.”

என்று தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  மகாராஷ்டிரா மாநில முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் உடன் சென்றனர்.

 

பின்னணி

 

நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும்  520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவு அடைந்ததையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் தொடங்கி வைத்தார்.

 

சம்ருத்தி மகாமார்க் அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் கம்யூனிகேஷன் எக்ஸ்பிரஸ்வே திட்டம், நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட இணைப்புச்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்த 701 கிமீ அதிவேக நெடுஞ்சாலை, சுமார் ரூ 55,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த விரைவுச்சாலை மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்கள் மற்றும் அமராவதி, அவுரங்காபாத் மற்றும் நாசிக் ஆகிய முக்கிய நகர்ப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. மேலும் இந்த விரைவுச் சாலையானது அருகிலுள்ள 14 மாவட்டங்களின் இணைப்பை மேம்படுத்தவும் உதவும்.  இதனால் விதர்பா, மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகள் உட்பட மாநிலத்தின் சுமார் 24 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

 

பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் விதமாக சம்ரித்தி நெடுஞ்சாலை தில்லி மும்பை விரைவுச் சாலை, ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள், ஷீரடி, வெருல், லோனார் போன்ற சுற்றுலா இடங்களுடன் இணைக்கப்படும். மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு சம்ருத்தி நெடுஞ்சாலைத்திட்டம் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும். 

******

SRI / GS / DL