Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்தில் உள்ள வான்சோய் கிராம மக்களுக்கு பிரதமர் பாராட்டு


முற்போக்கான பாலின சமத்துவக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக நாகாலாந்தில் உள்ள வான்சோய் கிராம மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினர் திருமதி. பாங்கினோன் கொன்யாக் (S. Phangnon Konyak) வான்சோயின் பெண்கள் இதுவரை தங்களுக்கு அனுமதி இல்லாத அவர்களின் பாரம்பரிய கல்விக்கூடமான மோருங்கிற்குள் நுழைந்து இசைக்கருவிகளை வாசித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், “மிக முக்கியமான நடவடிக்கை, இது பெண்களின் கண்ணியம் மற்றும் அதிகாரமளிப்புக்கு ஊக்கமளிக்கும். வான்சோய் கிராம மக்களுக்கு பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.”

****

AD/CJL/DL