Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.


      நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் இன்று பிரதமர் திரு நரேந்திரமோடி கலந்து கொண்டார். நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

     இந்த விழாவில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், மாவீரன் சிவாஜி மகராஜ் ஜெயந்திக்கு ஒருநாள் முன்னதாக, தாம் மகாராஷ்டிர மாநிலம் வந்திருப்பதை  சுட்டிக்காட்டினார்.

     நமது காலத்தில் உலகமயம் எதார்த்தமாகியுள்ளது என்றும், உலகமயம் காரணமாக, ஏற்பட்டுள்ள வேகத்தைப் பராமரிக்க உயர்தரமான அடிப்படைக் கட்டமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். சாகர்மாலா திட்டம் துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்வது மட்டுமின்றி, துறைமுகம் சார்ந்த மேம்பாட்டுக்கும் உதவி செய்கிறது என்று அவர் கூறினார். நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

            நவி மும்பை விமான நிலையத் திட்டம் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். காலதாமதமாகும் திட்டங்கள், பல பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன என்றும், பிரகதி எனும் முன்முயற்சி நடவடிக்கைகளால், இத்தகைய திட்டங்களைப் பூர்த்திசெய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

     இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும், விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, தரமான அடிப்படைக் கட்டமைப்பு வசதி, விமானப் போக்குவரத்துத் துறையில் முதன்மை முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு விமானப் போக்குவரத்துக் கொள்கையைக் கொண்டுவந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். வலுவான விமானப் போக்குவரத்துத்துறை அதிக அளவிலான பொருளாதார வாய்ப்புகளையும் வழங்குவதாக அவர் கூறினார். மிகச் சிறந்த பயணத் தொடர்புகள் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

——