ஹரே கிருஷ்ணா – ஹரே கிருஷ்ணா!
ஹரே கிருஷ்ணா – ஹரே கிருஷ்ணா!
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, முதல்வர் திரு தேவ பாவ் அவர்களே, துணை முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மரியாதைக்குரிய குரு பிரசாத் சுவாமி அவர்களே, ஹேம மாலினி அவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, பக்தர்களே, சகோதர, சகோதரிகளே.
அறிவும் பக்தியும் நிறைந்த இந்த மகத்தான பூமியில், இஸ்கான் நிறுவனத்தின் முயற்சியால் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன் மோகன்ஜி ஆலயம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட தெய்வீக நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டமாகும். மரியாதைக்குரிய அனைத்து ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் பாதங்களை வணங்குகிறேன். இந்தக் கோயிலின் பின்னணியில் உள்ள எண்ணமும் அதன் வடிவமும் ஆன்மீகம் மற்றும் அறிவின் முழு பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. புதிய தலைமுறையினரின் ஆர்வத்திற்கும் ஈர்ப்புக்கும் ஏற்ப, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட அருங்காட்சியகமும் இங்கு கட்டப்பட்டு வருகிறது. விருந்தாவனத்தின் 12 காடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தோட்டமும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகமானது நம்பிக்கையுடன் இந்தியாவின் பிரக்ஞையை வளப்படுத்தும் புனித மையமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நமது அரசு நாட்டு மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்படுகிறது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை கட்டுதல், ஒவ்வொரு ஏழைப் பெண்ணுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் வழி குடிநீர் வசதி, ஒவ்வொரு ஏழைக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவம், 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவரையும் இத்திட்டத்திற்கான வரம்பிற்குள் கொண்டு வருதல், வீடற்ற ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்குதல் ஆகியன சேவை மனப்பான்மையுடன் மேற்கொண்ட பணிகளாகும். இந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படும் பணிகள் தான், எனக்கு நமது சிறந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரசாதமாக இருக்கும். இந்த சேவை மனப்பான்மை உண்மையான சமூக நீதியைக் கொண்டுவருகிறது, மேலும் இது உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமாகும்.
நண்பர்களே,
நமது அரசு கிருஷ்ணா சர்க்யூட் என்ற சுற்றுப்பாதை சுற்றுலா மூலம் நாட்டின் பல்வேறு புனித யாத்திரைகள் மற்றும் மத ஸ்தலங்களை இணைக்கிறது. இந்த இணைப்பு குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா வரை பரவியுள்ளது. இந்த இடங்கள் ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் யோஜனா மூலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கோயில்களில் கிருஷ்ணரின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் அவர் குழந்தை வடிவில் காணப்படுகிறார், மற்ற இடங்களில் ராதையும் அவருடன் வழிபடப்படுகிறார். சில கோயில்களில் அவரது கர்மயோகி வடிவம் காணப்படுகிறது, மற்ற இடங்களில் அவர் ஒரு அரசராக வணங்கப்படுகிறார். கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு இடங்களுக்குச் செல்வதையும், கோயில்களுக்குச் செல்வதையும் எளிதாக்குவதே நமது நோக்கம். இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
நண்பர்களே,
கடந்த தசாப்தத்தில், நாட்டில் வளர்ச்சியும் பாரம்பரியமும் ஒன்றாக வேகம் பெற்றுள்ளன. பாரம்பரியத்தின் மூலம் இந்த வளர்ச்சிக்கான நோக்கம் இஸ்கான் போன்ற நிறுவனங்களின் முக்கிய ஆதரவைப் பெறுகிறது. நமது கோயில்கள் அல்லது மத ஸ்தலங்கள், பல நூற்றாண்டுகளாக சமூக உணர்வின் மையங்களாக இருந்து வருகின்றன. கல்வி மற்றும் திறன் வளர்ச்சியை மேம்படுத்துவதில் நமது குருகுலங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. ஆன்மிகத்தை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற இஸ்கான் இளைஞர்களை அதன் திட்டங்கள் மூலம் ஊக்குவிக்கிறது.
இன்றைய சமூகம் எவ்வளவு நவீனமாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு அதற்கு உணர்திறன் தேவை என்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். உணர்திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும். மனித விழுமியங்களுடன் முன்னேறும் சமூகம். சொந்தம் என்ற உணர்வு பரவும் சமூகம். இஸ்கான் போன்ற ஒரு நிறுவனம் தனது பக்திவேதாந்தத்தின் மூலம் உலகின் உணர்திறனுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்க முடியும். உலகெங்கிலும் மனித விழுமியங்களைப் பரப்ப உங்கள் நிறுவனம் அதன் திறன்களைப் பயன்படுத்தலாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் மிக்க நன்றி.
ஹரே கிருஷ்ணா – ஹரே கிருஷ்ணா!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093159
***********
TS/BR/KV
Speaking at the inauguration of Sri Sri Radha Madanmohanji Temple in Navi Mumbai. https://t.co/ysYXd8PLxz
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
दुनियाभर में फैले इस्कॉन के अनुयायी भगवान श्रीकृष्ण की भक्ति के डोर से बंधे हैं।
— PMO India (@PMOIndia) January 15, 2025
उन सबको एक-दूसरे से कनेक्ट रखने वाला एक और सूत्र है, जो चौबीसों घंटे हर भक्त को दिशा दिखाता रहता है।
ये श्रील प्रभुपाद स्वामी के विचारों का सूत्र है: PM @narendramodi
भारत केवल भौगोलिक सीमाओं में बंधा भूमि का एक टुकड़ा मात्र नहीं है।
— PMO India (@PMOIndia) January 15, 2025
भारत एक जीवंत धरती है, एक जीवंत संस्कृति है।
और, इस संस्कृति की चेतना है- यहाँ का आध्यात्म!
इसलिए, यदि भारत को समझना है, तो हमें पहले आध्यात्म को आत्मसात करना होता है: PM @narendramodi
हमारी आध्यात्मिक संस्कृति की नींव का प्रमुख आधार सेवा भाव है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 15, 2025
नवी मुंबई में इस्कॉन के दिव्य-भव्य श्री श्री राधा मदनमोहन जी मंदिर में दर्शन-पूजन कर मन को अत्यंत प्रसन्नता हुई है। pic.twitter.com/3WlVpgeEnY
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
भगवान श्रीकृष्ण के संदेश को दुनिया के कोने-कोने में पहुंचाने वाले श्रील प्रभुपाद स्वामी जी के प्रयास आज भी सभी देशवासियों को प्रेरित करने वाले हैं। pic.twitter.com/JDN2bVLVQA
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
श्रील प्रभुपाद जी ने इस्कॉन के माध्यम से गीता को लोकप्रिय बनाया। अलग-अलग कालखंड में जन्मे कई और संतों ने भी भक्ति के प्रकाश से समाज को नई दिशा दी है। pic.twitter.com/WwgfApsmtO
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
हमारे सभी धार्मिक ग्रंथों और शास्त्रों के मूल में सेवा भावना ही है। मुझे संतोष है कि हमारी सरकार भी इसी सेवा भावना के साथ लगातार देशवासियों के हित में काम कर रही है। pic.twitter.com/m9Q1wekk9k
— Narendra Modi (@narendramodi) January 15, 2025