Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நர்மதா உத்கம் ஸ்தலத்தில் பிரதமர் வழிபாடு : நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்திரை நிறைவை ஒட்டி அமர்கண்டக்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்

நர்மதா உத்கம் ஸ்தலத்தில் பிரதமர் வழிபாடு : நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்திரை நிறைவை ஒட்டி அமர்கண்டக்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்

நர்மதா உத்கம் ஸ்தலத்தில் பிரதமர் வழிபாடு : நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்திரை நிறைவை ஒட்டி அமர்கண்டக்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்

நர்மதா உத்கம் ஸ்தலத்தில் பிரதமர் வழிபாடு : நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்திரை நிறைவை ஒட்டி அமர்கண்டக்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்


நர்மதா நதி உற்பத்தியாகும் நர்மதா உத்கம் ஸ்தலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். மத்தியப் பிரதேச மாநிலம் அமர்கண்டக்கில் “நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்திரை” நிறைவு நிகழ்ச்சியில் கூடியிருந்த ஏராளமான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய சுவாமி அவ்தேஷானந்தா ஜி, பிரதமரை ஒரு “விகாஸ் அவதாரம்” என வர்ணித்தார். தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களிடம் ஆழமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் உத்வேகம் அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், மக்கள் பங்கேற்புடன் உலகில் மிகவும் சுத்தமான நதியாக நர்மதா நதி மாற்றப்படும் என்று தெரிவித்தார். நர்மதா நதியின் கரையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து 18 நகரங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த இயக்கம் இத்துடன் நிற்காது என்றும், மற்ற நதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு. மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகில் முன்னோடியான நாடாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை நிறைவு செய்வதை ஒட்டி பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

நர்மதா பிரவாகம் – நர்மதா நதிக்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நர்மதா சேவா யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு தலை வணங்குவதாகக் கூறினார். இந்தியாவுக்கு பலனளிக்கும் வகையில் அவர்களுடைய முயற்சிகள் பலனளித்து, பரம ஏழைகள் பயன் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரமாக நர்மதா நதி இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், சமீப காலங்களாக மிக மோசமாக நர்மதா நதி மாசுபடுத்தப்படுவதாகக் கூறினார். அதுதான் நர்மதா சேவா யாத்திரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டார். நமது நதிகளை பாதுகாத்து, பேணாமல் போனால் மனிதகுலம் இழப்பை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

சுமார் 150 நாட்கள் நடைபெற்ற நர்மதா சேவா யாத்திரை, உலகளாவிய தரத்திலும்கூட மிகவும் தனிச் சிறப்புடையது என்று பிரதமர் கூறினார். பனியில் இருந்து நர்மதா நதி உருவாகவில்லை, மரங்களில் இருந்து உருவாகிறது என்று தெரிவித்த பிரதமர், மத்தியப் பிரதேச அரசு பெரிய அளவில் மேற்கொள்ளும் மரக்கன்றுகள் நடும் திட்டம் மனித குலத்துக்கான மகத்தான சேவையாக அமையும் என்றும் கூறினார்.

நர்மதா நதியால் பயன்பெறக் கூடிய குஜராத் மற்றும் மகாராஷ்டிர மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக, நர்மதா சேவா யாத்திரைக்காக மத்தியப் பிரதேச அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தூய்மையான பாரதம் திட்டத்தில் செயல்பாட்டுக்காக மத்தியப் பிரதேச அரசை பிரதமர் பாராட்டினார். தரவரிசையில் முதல் 100 நகரங்களில் 22 நகரங்கள் மத்தியப் பிரதேசத்தில் இடம் பெறும் அளவுக்கு திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

மாநில அரசால் உருவாக்கப்பட்ட நர்மதா சேவா திட்டம் குறித்த ஆவணம், எதிர்கால சிந்தனைகள் கொண்டதாக, இயற்கை வளங்களைப் பாதுகாக்க பொருத்தமான தொலைநோக்கு கொண்டதாக உள்ளது என்று பிரதமர் விவரித்தார்.

விவசாயிகளின் வருமானங்களை இரட்டிப்பாக்குவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வகையில் மத்தியப் பிரதேசம் நல்ல தொலைநோக்கான ஆவணத்தை தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு ஆக்கபூர்வ பங்களிப்பு செய்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

புகழ்ந்து பேசியது மற்றும் பாராட்டு தெரிவித்தமைக்காக சுவாமி அவ்தேஷானந்தாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நிறைவாக, நர்மதா நதிக்காக பங்களிப்பு மற்றும் தியாகம் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். யாத்திரை நிறைவு பெற்றுவிட்டாலும் யாகம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று அவர் கூறினார்.

***