Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சிறப்பு அம்சங்கள்


 

இந்த அவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளையும் நான் வலியுறுத்துகிறேன்.

 

சில உறுப்பினர்களால் எதிர்மறைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதை தேசம் இன்று பார்த்திருக்கிறது. வளர்ச்சியை  எவ்வளவு ஆழமாக சிலர் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தியா பார்த்துள்ளது. 

 

விவாதத்திற்கு நீங்கள் தயாராக இல்லையென்றால், ஏன் தீர்மானத்தைக் கொண்டு வந்தீர்கள்? தீர்மானத்தைத் தாமதப்படுத்த ஏன் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்?

 

அவர்களிடம் சொல்வதற்கு ஒன்று மட்டும்தான் இருக்கிறது-மோடியை நீக்குங்கள்.

 

எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நம்மால் பார்க்க முடிந்தது என்னவென்றால், வெறும் அராஜகம்தான்.

 

இவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்தான், நாம் இங்கே வந்திருக்கிறோம்.

 

அதிகாரத்திற்கு வர அவருக்கு என்ன அவசரம்? 

 

இன்று காலை வாக்கெடுப்பு நடத்தப்படாதபோது, விவாதம்கூட முடியாதபோது, ஒரு உறுப்பினர் என்னிடம் ஓடிவந்து கூறுகிறார்-எழுந்து கொள்ளுங்கள், எழுந்து கொள்ளுங்கள், எழுந்து கொள்ளுங்கள். . . .

 

ஒரு மோடியை நீக்குவதற்கு அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் பாருங்கள்.

 

சுயநலத்திற்காக நாங்கள் இங்கே வந்திருக்கவில்லை.

 

125 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் காரணமாகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

 

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன் தேசத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம்.

 

பெரும்பாலான கிராமங்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளன.

 

எழுபது ஆண்டுகளாக இருளில் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க பணியாற்றியது குறித்து எமது அரசு பெருமிதம் கொள்கிறது.

 

ஒரு சாதனை அளவாக இந்தியா முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

 

உஜ்வாலா திட்டத்தின் காரணமாக பெண்கள் புகையிலிருந்து விடுபட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

 

ஏழை மக்களுக்கு எமது அரசு வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளது. ஏற்கனவே வங்கிகளின் கதவுகள் ஒருபோதும் ஏழைகளுக்குத் திறந்ததில்லை.

 

ஏழைகளுக்கு முதல்தரமான ஆரோக்கியத்தை வழங்க ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.

 

வேம்பு கலக்கப்பட்ட யூரியா தயாரிப்பு என்ற முடிவு இந்திய விவசாயிகளுக்கு உதவி செய்துள்ளது. 

 

சூழல் பாதுகாப்பு முறையில் இந்தியா ஒரு சாதனையை உருவாக்கியுள்ளது.

 

ஏராளமான இளைஞர்களின் கனவுகளை முத்ரா திட்டம் நனவாக்கியுள்ளது.

 

இந்தியப் பொருளாதாரம் வலுவடைத்திருக்கிறது. உலகப் பொருளாதாரத்தையும் இந்தியா வலுப்படுத்தியிருக்கிறது.

 

கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக பல எதிரிகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதை நான் அறிவேன். ஆனால்,  காங்கிரசிற்கு ஈசிஐ, நீதித்துறை, ஆர்பிஐ, சர்வதேச முகமைகள் ஆகியவற்றின்மீது நம்பிக்கையில்லை. அவர்களுக்கு எதன்மீதும் நம்பிக்கையில்லை.

 

இதனால் நாம் எந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்? சிறுபிள்ளைத்தனமான நடத்தைக்கு எந்த மதிப்பும் இருக்காது.

 

டோக்லாம் பற்றி தலைவர்களில் ஒருவர் பேசினார். இதே தலைவர் நமது படைகள் பற்றி சீனத் தூதர் பேசியதை நம்புகிறார்.

 

ரஃபேல் குறித்து இந்த அவையில் பொறுப்பில்லாமல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால், இருநாடுகளும் அறிக்கைகள் வெளியிட வேண்டியதாயிற்று.

 

காங்கிரஸ் கட்சிக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தேசப் பாதுகாப்பில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம்.

 

நமது ராணுவத்திற்கு இத்தகைய அவமதிப்பை நான் சகித்துக் கொள்ளமாட்டேன்.

 

உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அந்த அளவிற்கு என்னை நீங்கள் அவமதிக்கலாம். இந்தியாவின்  வீரர்களை அவமதிப்பதை நிறுத்துங்கள்.

 

துல்லிய தாக்குதலை நீங்கள் போலித் தாக்குதல் என்று கூறுகிறீர்கள்.

 

1999-ல் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே நின்று அவர் கூறியதை நான் நினைவுபடுத்துகிறேன் – எங்களுக்கு 272 உறுப்பினர்கள் பலம் உள்ளது. மேலும் பலர் எங்களுடன் சேர்கிறார்கள். அவர் அடல் அவர்களின் அரசை சீர்குலைத்தார்கள். அவராகவே ஒரு அரசை அமைக்க முடியவில்லை. 

 

“எங்களுக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்று யார் சொன்னது” – ஒருவர் சொன்னதாக நான் படித்தேன்.

 

சரண்சிங் அவர்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது, சந்திரசேகர் அவர்களுக்கு, அவர்கள் என்ன செய்தார்கள், தேவகவுடா அவர்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். ஐ.கே. குஜ்ரால் அவர்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்.

 

பணபலத்தைக் கொண்டு, வாக்குகளை வாங்குவதில் காங்கிரஸ் இரண்டுமுறை ஈடுபட்டுள்ளது.

 

அந்த கண்கள் இன்று செய்ததை ஒட்டுமொத்த தேசமே பார்த்தது. அனைவர் முன்பாகவும் அது தெளிவானது.

 

ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரஸ் பிரித்தது. அப்போது அவர்களின் செயல்பாடு அவமானகரமானதாக இருந்தது.

 

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது.

 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் உங்களுக்குள்ள அரசியல் காரணமாக, இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு நான் சொல்லியிருக்கிறேன்.

 

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், ஆந்திரப் பிரதேச வளர்ச்சிக்கு சாத்தியமான அனைத்தையும் நாங்கள் செய்வோம். அதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தங்களின் சேவகர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கடன் கிடைக்கும். ஆனால், தேசம் பாதிக்கப்பட்டது.

 

வாராக்கடன் பிரச்சினை குறித்து உங்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இணைய வங்கிச் சேவை அளிப்பதற்கு முன், காங்கிரஸ் கட்சி தொலைபேசி வங்கிச் சேவையை கண்டுபிடித்தது. இதுவே வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணமானது. 

 

நீதியைத் தேடும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த அரசு ஆதரவாக நிற்கிறது.

 

எந்தவகையான வன்முறையும் தேசத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருகிறது. வன்முறையில் ஈடுபடுவோரைத் தண்டிக்குமாறு மாநில அரசுகளை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

 

சாலைகள் அமைப்பதில், கிராமங்கள் இணைக்கப்படுவதில், நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுவதில், ரயில்வே மேம்பாட்டில் ஏற்பட்டுவரும் சாதனைகளை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

——–