Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமோ பாரத் ரயிலில் மாணவர்கள், ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

நமோ பாரத் ரயிலில் மாணவர்கள், ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சாஹிபாபாத் துரித ரயில் போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் துரித ரயில் போக்குவரத்து நிலையம் வரை நமோ பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது இளம் நண்பர்களுடன் அவர் அன்புடன் உரையாடினார். அவர்கள் பிரதமருக்கு ஓவியங்களையும், கலைப் படைப்புகளையும் பரிசளித்தனர்.

பிரதமர் பற்றியும் வளர்ந்து வரும் புதிய இந்தியா பற்றியும் கவிதை வாசித்த இளம்பெண்ணுடன் கலந்துரையாடிய திரு மோடி, அவரைப் பாராட்டினார். ஒரு வீட்டின் பயனாளியான சிறுவனுடன் திரு மோடி கலந்துரையாடினார். அவர் பிரதமருக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார். புது வீட்டின் முன்னேற்றம் குறித்து சிறுவனிடம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார். மற்றொரு இளம்பெண்ணும் பிரதமரைப் பற்றி ஒரு கவிதை வாசித்தார். அதற்காக அவர் அவரைப் பாராட்டினார்.

பெண் ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அவர்கள் தங்களது பணி குறித்து மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்தனர். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுமாறு அவர்களை வலியுறுத்திய பிரதமர், அவர்களின் புதிய வேலைகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார்.

***

(Release ID: 2090405)
TS/SMB/RR/KR