Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது முன்னாள் படை வீரர்கள் நாயகர்களாகவும், தேசபக்தியின் நிலைத்த அடையாளங்களாகவும் உள்ளனர்: பிரதமர்


நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான ஆண், பெண் வீரர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இன்று முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு, நமது முன்னாள் வீரர்கள், நாயகர்கள் என்றும், தேசபக்தியின் நீடித்த அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினத்தில், நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான பெண், ஆண் வீரர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகங்கள், தைரியம், கடமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை முன்மாதிரியானவை. நமது முன்னாள் வீரர்கள் நாயகர்கள், தேசபக்தியின் நீடித்த நிலைத்த அடையாளங்கள். முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக எப்போதும் எங்கள் அரசு பணியாற்றுகிறது. வரும் காலங்களிலும் நாங்கள் அதைத் தொடர்வோம்.”

***

PLM/DL