Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நகர சமையல் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்ததையொட்டி பிரதமர் பாராட்டு


நகர சமையல் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பதிவில், நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு வசதி எளிதாக மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு மிகப்பெரிய அளவில் முயற்சியெடுத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 66-மாவட்டங்களில் வழங்கப்பட்டு வந்த நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு வசதி, 2023-ம் ஆண்டில் 630 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். அதாவது 2014-ம் ஆண்டில் சமையல் எரிவாயு விநியோகம் 25.40 லட்சம் எண்ணிக்கையிலிருந்து தற்போது 103.93 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த ட்விட்டர் பதிவிற்கு, பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

இந்த எண்ணிக்கை சிறப்பானதாகும். பல வருடங்களாக தங்களது கடின உழைப்பின் மூலம் இத்தகைய விநியோக வசதி மேம்பட்டுள்ளது.”

****

AP/GS/RJ/KPG