Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தோல் மற்றும் காலணித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய தொகுப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோல் மற்றும் காலணித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி “இந்திய காலணி, தோல் மற்றும் உபகரண மேம்பாட்டுத் திட்டம்” என்ற மத்திய தொழில் திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக 2017-18ஆம் நிதியாண்டு முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரையில் மொத்தம் ரூ. 2,600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதான விளைவு:

இத்திட்டம் தோல் தொழிலில் கட்டுமானத்தை மேம்படுத்த துணை புரியும். குறிப்பாக, தோல்தொழிலினால் நேரும் சுற்றுச்சூழல் பாதிப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க வகை செய்யப்படும். கூடுதல் முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழியமைக்கும். உற்பத்தியை அதிகரிக்கும். வரிச் சலுகைகளை உயர்த்துவதால், இத்தொழிலில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும். இயற்கைப் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் நலச் சட்டம் சீர்திருத்தப்படும். இவற்றால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தோல் தொழில், காலணி உற்பத்தி, அவற்றுக்கான கருவிகள் உற்பத்தித் தொழிலில் ஒட்டுமொத்த விளைவை ஏற்படுத்துவதால், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் முறைப்படுத்தவும் இத்திட்டம் துணை புரியும்.

இந்திய காலணித் தொழில், தோல் தொழில், அவற்றுக்கான கருவிகள்

உற்பத்தித் தொழில் குறித்த விவரங்கள்:

 

  1. மனித ஆற்றல் மேம்பாடு (HRD) துணைத் திட்டம்: HRD துணைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோருக்கு நபருக்கு ரூ. 15 ஆயிரம் என்ற வகையில் வேலைவாய்ப்பு சார்ந்த திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். வேலையில் இருப்போருக்கு நபருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் திறன் உயர்வுப் பயிற்சி அளிக்கப்படும். இவற்றுடன் நபருக்கு ரூ.2 லட்சம் என்ற அளவில் பயிற்சி அளிப்போர் பயிற்சி பெற வகை செய்யப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக உதவி பெறும் நிறுவனம் பயிற்சி பெற்றோரில் 75 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்க வேண்டும். இந்த துணைத் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலையில்லாத 4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சியும், வேலையில் உள்ள 75 ஆயிரம் பேருக்கு திறனை உயர்வுப் பயிற்சியும் பயிற்சி அளிக்கும் 150 பேருக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். இதற்கான உத்தேச தொகை ரூ. 696 கோடியாகும்.
  2. தோல் தொழிலில் ஒருங்கிணைந்த மேம்பாடுப் பிரிவு (IDLS): இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பிரிவுக்கான துணைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிப்பது உட்பட முதலீடு செய்வோருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை கிடைக்க வகை செய்யப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSMEs) புதிய ஆலை அல்லது உபகரணத்துக்கான செலவில் 30 சதவீதம் மானியம் அல்லது சலுகை அளிக்கப்படும். இதர தொழில்நிறுவனங்கள் தங்களது ஆலையை நவீனமயமாக்குவதற்கோ, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கோ, புதிய ஆலைகளை அமைப்பதற்கோ 20 சதவீத மானியம் அல்லது சலுகை வழங்கப்படும். இத்துணைத் திட்டத்தின்கீழ் மூன்று ஆண்டுகளில் தோல், காலணி, கருவிகள், உபகரணங்கள் தொழில் துறையின் 1000 நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 425 கோடியாகும்.

 

  1. நிறுவனங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தும் துணைத் திட்டம்: இத் துணைத் திட்டத்தின் கீழ் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (Footwear Design & Development InstituteFDDI) உதவி அளிக்கப்படும். தற்போது நாடு முழுதும் உள்ள வளாகங்களில் சிலவற்றை “மேம்பட்ட திறன் மையங்கள்” (Centres of Excellence) என்று நிலை உயர்த்த வகை செய்யப்படும். அத்துடன் மூன்று சகல வசதிகள் கொண்ட திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். அத்துடன், மாபெரும் தோல்தொழில் உற்பத்தி தொகுப்பு மையங்கள் அமைக்கப்படும். மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்படும் இத் துணைத் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 147 கோடி ஒதுக்கப்படும்.

 

  1. மாபெரும் தோல், காலணி மற்றும் கருவிகளுக்கான தொகுப்பு மையம் (Mega Leather, Footwear and Accessories ClusterMLFAC) துணைத் திட்டம்: இந்த மையத்துக்கான துணைத் திட்டத்தின் கீழ் மாபெரும் தோல், காலணி மற்றும் கருவிகளுக்கான தொகுப்பு மையம் அமைத்து தோல், காலணி மற்றும் உபகரணத் தொழில்களுக்கு கட்டுமான வசதிகள் அளிக்கப்படும். தேவைக்கு ஏற்ப நிலத்துக்கான மதிப்பு உள்பட திட்டச் செலவில் அதிகமாக 50 சதவீதம் வரையில் சீராக உதவி அளிக்கப்படும். அதற்கான மொத்தம் ரூ.125 கோடி அளவுக்கு உதவி அளிக்கப்படும். இதன்படி 3 முதல் 4 தொகுப்பு மையங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  1. தோல் தொழில்நுட்பம், புதுமையாக்கம், சூழல் பிரச்சினைகள் துணைத் திட்டம் (Leather Technology, Innovation and Environmental Issues sub-scheme): இத் துணைத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் பொதுவான கழிவு சுத்திகரிப்பு பிரிவுகளை (CETPs) அமைக்கவும், மேம்படுத்தவும் திட்டச் செலவில் 70 சதவீதம் அளவுக்கு சலுகை அளிக்கப்படும். தேசிய அளவிலான தொழில் கவுன்சில்கள், சங்கங்களுக்கு உதவி செய்ய வகை செய்யப்படும். அத்துடன், தோல்தொழில், உபகரணத் தொழில் துறைகளுக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கும் இந்தத் துணைத் திட்டம் உதவும். இதற்கான மூன்று ஆண்டுகால திட்ட மதிப்பீடு  ரூ. 782 கோடியாகும்.

 

  1. தோல், காலணி, உபகரணத் தொழில் உற்பத்திப் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான துணைத் திட்டம்: பிரபலப்படுத்துவதற்கான ஒப்புதல் பெறும் தகுதியான இந்தியத் தயாரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் அதற்கான செலவில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரையில் மானியம் பெறலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் இந்தச் சலுகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் 10 இந்தியத் தயாரிப்புகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிரபலப்படுத்தப்படும். இதற்கான திட்டச் செலவு ரூ. 90 கோடி. 
  1. தோல், காலணி மற்றும் கருவிகள் தொழில்களில் கூடுதல் வேலைவாய்ப்பு அளிப்பதற்கான சலுகை அளிக்கும் துணைத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில், அனைத்து ஊழியர்களுக்கும் தொழில்நிறுவனங்கள் 3.67 சதவீதம் பங்களிப்பு செலுத்தவேண்டும். இதற்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் (EPFO) சேரும் ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இது அளிக்கப்படும். மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியம் பெறும் ஊழியர்கள் இச்சலுகை பெறத் தகுதியானவர்கள். இத்திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதற்கான மதிப்பீடு ரூ. 100 கோடியாகும்.

 

இந்தச் சிறப்புத் திட்டம் தொழிலாளர் நலச் சட்டங்களையும் எளிமைப்படுத்த உதவும். மேலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக தொழில்நிறுவனங்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் சலுகைகள் வழங்கப்படும்.

 

  1. வருமான வரிச் சட்டத்தில் 80JJAA பிரிவின் கீழ் வாய்ப்புகளை அதிகரித்தல்: உற்பத்தியைப் பெருக்குவதற்காக தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்கும் இந்திய நிறுவனங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80JJAA பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கு ஊழியர்கள் ஆண்டில் 240 நாள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதைத் தோல், காலணி, உபகரணத் தொழில் நிறுவனங்களில் தளர்த்தி சூழ்நிலைக்கு ஏற்ப 150 நாட்களாகக் குறைக்கப்படும். இது மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

 

  1. வேலைவாய்ப்புக்கு நிரந்தர கால நிர்ணயம் அறிமுகம்: உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலன் சார்ந்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக தோல், காலணி, உபகரணத் தொழில்களின் பருவ இயற்கையின் அடிப்படையில் தொழில்வேலைவாய்ப்பு (நிலை ஆணை) சட்டம் (1946) 15வது பிரிவின் துணை விதியின் (1) கீழ் நிரந்தர கால வேலைவாய்ப்பு அறிமுகம் செய்யப்படுகிறது.

 

*****