பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோல் மற்றும் காலணித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி “இந்திய காலணி, தோல் மற்றும் உபகரண மேம்பாட்டுத் திட்டம்” என்ற மத்திய தொழில் திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக 2017-18ஆம் நிதியாண்டு முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரையில் மொத்தம் ரூ. 2,600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதான விளைவு:
இத்திட்டம் தோல் தொழிலில் கட்டுமானத்தை மேம்படுத்த துணை புரியும். குறிப்பாக, தோல்தொழிலினால் நேரும் சுற்றுச்சூழல் பாதிப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க வகை செய்யப்படும். கூடுதல் முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழியமைக்கும். உற்பத்தியை அதிகரிக்கும். வரிச் சலுகைகளை உயர்த்துவதால், இத்தொழிலில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும். இயற்கைப் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் நலச் சட்டம் சீர்திருத்தப்படும். இவற்றால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தோல் தொழில், காலணி உற்பத்தி, அவற்றுக்கான கருவிகள் உற்பத்தித் தொழிலில் ஒட்டுமொத்த விளைவை ஏற்படுத்துவதால், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் முறைப்படுத்தவும் இத்திட்டம் துணை புரியும்.
இந்திய காலணித் தொழில், தோல் தொழில், அவற்றுக்கான கருவிகள்
உற்பத்தித் தொழில் குறித்த விவரங்கள்:
இந்தச் சிறப்புத் திட்டம் தொழிலாளர் நலச் சட்டங்களையும் எளிமைப்படுத்த உதவும். மேலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக தொழில்நிறுவனங்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் சலுகைகள் வழங்கப்படும்.
*****