Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தோன்யி போலோ விமான நிலையம் திறந்ததையடுத்து அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா அதிகரிக்கும் என பிரதமர் நம்பிக்கை


இடா நகரில் தோன்யி போலோ விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா உத்வேகம் பெறும் என பிரதமர் திரு நரேந்திர மோடி, நம்பிக்கை  தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பகிர்ந்துள்ள வீடியோவை பிரதமர் பாராட்டியுள்ளார்.

அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பதிவிட்டுள்ள ட்விட்டரை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:

“அருமையான காட்சி! புதிய விமான நிலையத்தில் விமானங்கள் அதிகமாக வந்து செல்வதால் அருணாச்சலப்பிரதேசத்திற்கு மேலும் அதிக மக்கள் எளிதாக வந்து செல்லமுடியும் என்பதுடன், அங்கு அளிக்கப்படும் அன்பான விருந்தோம்பலையும் அனுபவிக்க முடியும்”

**************

(Release ID: 1879986)

SM/PKV/KPG/KRS