Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழில்நுட்பம், தேர்வுகளின் போது கையடக்க சாதனங்களின் பங்கு, அதிக நேரம் கணினி உள்ளிட்ட திரைகளை மாணவர்கள் பார்ப்பது ஆகியவை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலைகளில் சில: பிரதமர்


தொழில்நுட்பம், தேர்வுகளின் போது கையடக்க சாதனங்களின் பங்கு, அதிக நேரம் கணினி உள்ளிட்ட திரைகளை மாணவர்கள் பார்ப்பது ஆகியவை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலைகளில் சிலவாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நாளை தேர்வு குறித்த கலந்துரையாடலின் 3-வது அத்தியாயத்தைப் பார்க்குமாறு அனைவரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“தொழில்நுட்பம்…. தேர்வுகளின் போது கையடக்க சாதனங்களின் பங்கு… மாணவர்கள் திரையை அதிக   நேரம் பார்த்தல் ஆகியன

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலைகளில் சிலவாகும். நாளை, பிப்ரவரி 13-ம் தேதி, தொழில்நுட்ப குருஜி, ராதிகா குப்தா ஆகியோர் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தில் இந்த அம்சங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். பாருங்கள்.”

***

(Release ID: 2102195)
TS/PKV/RR/KR