Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழில்துறை சொத்துரிமைத் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (15-12-2023) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான இயக்குநரகம், இத்தாலிய காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் நன்மைகள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பினரிடையே இத்துறையுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையை ஊக்குவிக்கும்.   

பின்னணி:

தேசிய மற்றும் சர்வதேச ஐபிஆர் அமைப்புகளை அணுகுவதற்கும் பங்கேற்பதற்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐபிஆர் விண்ணப்பங்களை செயலாக்குதல், ஐபி விழிப்புணர்வை ஊக்குவித்தல், ஐபிஆர் வணிகமயமாக்கல் மற்றும் அமலாக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்த முயலும்.

*******

ANU/PKV/PLM/DL