Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழிற்சாலைப் பகுதிகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கென தில்லி, மும்பை தொழிற்சாலைப் பகுதிகள் திட்ட அமலாக்க அறக்கட்டளை நிதியத்தின் வரம்புகளை விரிவாக்கி அதனை தேசிய தொழிற்சாலைப்பகுதி மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளை என்று பெயர்மாற்றம் செய்தல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தொழிற்சாலைப் பகுதிகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கென தில்லி, மும்பை தொழிற்சாலைப் பகுதிகள் திட்ட அமலாக்க அறக்கட்டளை நிதியத்தின் (DMIC-PITF) வரம்புகளை விரிவாக்கி அதனை தேசிய தொழிற்சாலைப்பகுதி மேம்பாடு மற்றும் அமலாக்க அகறக்கட்டளை (NICDIT) என்று பெயர்மாற்றம் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கென ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதி உதவியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியுடன் 2022 மார்ச் 31 வரையிலான விரிவாக்கப்பட்ட காலத்துக்கு கூடுதலாக ரூ 1,584 கோடியை அனுமதித்தும் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிதியத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ 18,500 கோடியில் செலவழிக்கப்படாமல் நிலுவையிலுள்ளதும் DMIC-PITF –க்கு இன்னும் விடுவிக்கப்படாமலும் உள்ள தொகை புதிதாக பெயரிடப்பட்டுள்ள NICDIT – ஆல் பயன்படுத்திக் கொள்ளப்படும். மேலும் ரூ 1,584 கோடி தொகை கூடுதலான நான்கு தொழிற்சாலைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கும் NICDIT –யின் 31.03.2022 வரையிலான நிர்வாகச் செலவினங்களுக்கும் என வழங்கப்படுகிறது.

தற்போதுள்ள 5 தொழிற்சாலைப் பகுதிகள் கீழ்க்கண்ட மாநிலங்களில் அமைந்துள்ளன. பஞ்சாப். ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு.

தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் வரும் NICDIT நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலைப் பகுதிகள் ஒருங்கினைந்த மேம்பாட்டுக்கென செயல்படும் உயர் அமைப்பாகும். இந்த நிறுவனம் மத்திய அரசின் நிதியையும் நிறுவனங்கள் நிதியையும் நெறிப்படுத்தி வழங்கும். தொழிலியல் மற்றும் நகர மேம்பாடு பற்றிய விரிவான தேசிய நோக்கங்களை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சாலைப் பகுதிகள் சரியாக திட்டமிடப்பட்டு அமல்படுத்தப்படுவதை இந்த அமைப்பு உறுதி செய்யும். திட்ட மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதுடன் இந்த அமைப்பு திட்டங்களின் மதிப்பீடு அனுமதி ஒப்புதல் பணிகளையும் மேற்கொள்ளும் தொழிற்சாலைப் பகுதி திட்டங்கள் மேம்பாட்டில் மத்திய அரசின் முயற்சிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும். அவற்றின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.

தில்லி, மும்பைத் தொழிற்சாலைகள் பகுதி மேம்பாட்டுக் கழகம் (DMICDC), NICDIT – யின் அறிவுசார் கூட்டாளியாக செயல்படும் இந்தக்கழகம் ஏற்கனவே உள்ள தில்லி, மும்பைத் தொழிற்சாலைப் பகுதி திட்டப்பணிகளுக்கும் கூடுதலாக இந்தப் பணியை இதர தொழிற்சாலைப் பகுதிகளுக்கு அறிவார் கூட்டாளி ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளும்.

NICDIT – யின் செயல்பாடுகளை முறையாக ஆய்வு செய்யவும் திட்ட அமலாக்க முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் நிதி அமைச்சர் தலைமையில் உயர்நிலை கண்காணிப்பு ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையத்தில் வர்த்தகத் தொழில்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர், நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

NICDIT – யின் அறங்காவலர்கள் வாரியத்தில் கீழ்க்கண்டோர் இடம் பெறுவார்கள். (i) தலைவர் – தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் (ii) செலவினத்துறையின் செயலாளர் (iii) பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் (iv) சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் (v) கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் (vi) ரயில்வே வாரியத் தலைவர் (vii) நித்தி ஆயோக்கின் முதன்மைச் செயல் அலுவலர் (viii) NICDIT – யின் முழுநேர முதன்மை நிர்வாக அலுவலராகவும் செயல்படும் உறுப்பினர் செயலாளர்.

NICDIT – யின் அமைக்கப்பட்டிருப்பது இந்திய நாடெங்கும் தொழிற்சாலைப் பகுதிகள் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு பல்வேறு வகைகளில் உதவும். முழுமையான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அணுகுமுறைகளைக் கொண்டுவருதல், தொழிற்சாலைப் பகுதிகள் மேம்பாட்டில் கற்றதைப் பகிர்ந்து கொள்ளுதல், அதன் மூலம் திட்டமிடல், வடிவமைப்பு மேம்பாடு மற்றும் இத்தகைய திட்டங்களுக்கு நிதி அமைத்தல் ஆகியவற்றில் புதுமையைப் புகுத்துதல் ஆகியவற்றில் இந்த அமைப்பு உதவும். இதனால் நாட்டில் உற்பத்தித்துறையின் பங்கு அதிகரிக்கும். உற்பத்தி மற்றும் சேவை தொழில்துறைகளில் கூடுதலான முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன் மூலம் நாட்டின் பணியாளர்களிடையே திறன் மேம்பாடு ஏற்பட்டு வேலைவாய்ப்புக்களும் பெருகும்.

தற்போது நடைபெற்றுவரும் திட்டங்களின் விவரங்களும் முன்னேற்றமும்

(i) தில்லி, மும்பை தொழிற்சாலைகள் பகுதி (DMIC) இந்த வகையில் முதலாவதாகும். 2011 – ம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் ரூ 17,500 கோடி திட்ட அமலாக்க நிதியத்துடன் அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கூடுதல் தொகுப்பு நிதயாக ரூ 1,000 கோடி திட்ட மேம்பாட்டு செயல்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முதல் கட்டத்தில் ஏழு தொழிலியல் நகரங்களில் 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். DMIC திட்டங்களுக்கு முதல் கட்டத்தில் ஜப்பான அரசு 450 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டைச் செய்ய உறுதி அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே தொலேரா சிறப்பு முதலீட்டு மண்டல திட்டம், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே ஷேன்ட்ரா – பிட்கின் தொழிலியல் பூங்கா, உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் ஒருங்கிணைந்த தொழிலியல் டவுன்ஷிப் திட்டம், மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி அருகே டவுன்ஷிப் விலாம் உத்தியோக்புரி திட்டம் ஆகிய நான்கு திட்டங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. DMIC –யின் கீழ் இதர திட்டங்களின் பணிகள் திட்டமிடல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகளில் உள்ளன.

(ii) சென்னை- பெங்களூரு தொழிற்சாலைகள் பகுதி (CBIC) தொடக்கநிலை விரிவான திட்டத்தின் கீழ் தும்கூர் (கர்நாடகா) கிருஷ்ணாம்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்), பொன்னேரி (தமிழ்நாடு) ஆகியன மேம்பாட்டுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன.

(iii) பெங்களூரு, மும்பை பொருளாதாரப்பகுதி (DMEC) கர்நாடக மாநில அரசு மேம்பாட்டுக்கென தார்வாடு பகுதியை தெரிவு செய்துள்ளது. மகாராஷ்ட்டிர மாநில அரசு சாங்கிலி அல்லது சோலாப்பூர் மாவட்டங்களில் ஒரு பகுதியை மேம்படுத்துவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

(iv) அமிர்தசரஸ் – கொல்கத்தா தொழிற்சாலைப்பகுதி (AKIC) இந்த்திட்டம் ரயில்வேயின் கிழக்கத்திய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரயில்போக்குவரத்து பகுதியை (EDFC) முக்கிய போக்குவரத்து வழியாக பயன்படுத்தும். தற்போதுள்ள நெடுஞ்சாலைகளையும் அது பயன்படுத்திக் கொள்ளும். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 7 பங்கேற்கும் மாநிலங்களில் ஒருங்கிணைந்த உற்பத்தி தொகுப்புகள் அமைப்பதற்கு ஏதுவாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

BMEC மற்றும் AKIC திட்டப் பணிகள் தொடக்க நிலைகளில் உள்ளன.
வைசாக், சென்னை தொழிற்சாலைப்பகுதி (VCIC): 2014 – ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு அளித்துள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை VCIC திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஆய்வுப் பணியை ஆசிய மேம்பாட்டு வங்கி மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி VCIC தொடர்பான அடிப்படை மேம்பாட்டுத் திட்டத்தின் இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்படி விசாகபட்டினம், மச்சிலிப்பட்டினம், தோனாகொண்டா, ஸ்ரீ காளஹஸ்தி-எர்பேடு ஆகிய ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 மையங்கள் தொடர்பான பெருந்திட்டம் தயாரிப்புப் பணிகள் 2016 மார்ச் மாதம் தொடங்கி உள்ளது. 2017 மார்ச் மாத வாக்கில் இது நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

உற்பத்திதுறை வளர்ச்சியை விரைவுபடுத்தவும் அறிவியல் பூர்வ திட்டமிட்ட நகரமயமாதலை உறுதி செய்யவும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த தொழிற்சாலைப் பகுதி மேம்பாட்டு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இதில் உற்பத்திதுறை முக்கியக் கவனம் பெறுகிறது. தில்லி, மும்பை தொழிற்சாலைப்பகுதி (DMIC) சென்னை, பெங்களூரு தொழிற்சாலைப் பகுதி (CBIC), அமிர்தசரஸ், கொல்கத்தா தொழிற்சாலைப்பகுதி (AKIC), பெங்களூரு, மும்பை பொருளாதாரப்பகுதி (DMEC),

(v) வைசாக், சென்னை தொழிற்சாலைப்பகுதி (VCIC) ஆகிய 5 திட்டங்கள் மத்திய அரசின் மேம்பாட்டுக்கென திட்டமிடப்பட்டுள்ளன.