பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கான நிதியங்களின் நிதியத்தை (FFS) உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியம் இந்தியா சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (SIDBI) யில் உருவாக்கப்படும். இதன் வழியாக இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்று முதலீட்டு நிதியங்களுக்கு பங்களிக்கப்பட்டு அவற்றின் மூலம் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். 2016 – ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கிய தொடங்கிடு இந்தியா செயல் திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FFS –ன் மொத்த நிதியம் ரூ. 10,000 கோடி. இந்த நிதியம் 14 –வது, 15 –வது நிதி ஆணைய சுற்றுக்களின் போது உருவாக்கப்படும். அதுவும் திட்டங்களின் முன்னேற்றம் நிதி கிடைக்கும் தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு உருவாக்கப்படும். FFS நிதியத்துக்கு 2015- 16 ம் ஆண்டு ஏற்கனவே ரூ 500 கோடித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2016-17 ம் ஆண்டுக்கு ரூ 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியம் 18 லட்சம் பேருக்கு முழு நிலையிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாடு துறையின் மொத்த் பட்ஜெட் ஆதரவின் மூலம் மேலும் உதவிக்கான வழி வகை செய்யப்படும். இந்தத் துறை தொடங்கிடு இந்தியா செயல் திட்டத்தின் விதிகளின் படி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணித்து ஆய்வு செய்யும்.
FFS தொடங்கிடு இந்தியா செயல் திட்டத்திலிருந்து உருவாகின்றது. இந்தச் செயல் திட்டம் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் முயற்சியில் அமைந்ததாகும். SIDBI- யின் அனுபவம் இந்த நிதியத்தின் அன்றாட செயல்பாட்டை நிர்வகிக்க பயன்படுத்தப்படும். கண்காணிப்பு மற்றும் செயல் திறன் ஆய்வு தொடங்கிடு இந்தியா செயல் திட்டத்தின் அமலாக்கத்துடன் இணைக்கப்பட்டு தொழில் திட்டங்கள் கால இலக்குகளில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்.
தொடக்க நிறுவன நிதியான ரூ. 10,000 கோடி ரூ. 60,000 கோடி அளவிற்கான பங்கு மூலதனத்தையும் இதைப்போல இரண்டு மடங்கு கடன் மூலதனத்தையும் பெறும் திறன் வாய்ந்ததாக அமையும். இதன் மூலம் நிலையான எதிர்காலத்தில் நிர்ணயிக்கக் கூடிய நிதி ஆதாரங்களை தொடக்க நிலை நிறுவனங்களுக்கு வழங்க முடியும். இதனால் மிகப்பெரிய அளவு வேலைவாய்ப்புக்கள் உருவாக வசதி ஏற்படுகிறது.
பின்னணி:
புதுமை படைக்கும் ஆற்றலால் இயக்கப்படும் தொழில் முனைவுத் திறனை விரைவு படுத்துதல், தொடக்க நிலை நிறுவனங்கள் மூலம் வர்த்தகம் உருவாக்குதல் ஆகியன பெரிய அளவு வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு முக்கியமானவை. துணிகர முதலீடு தொடர்பான நிபுணர்குழு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. “இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 2500 மிக அதிக அளவு நிலை உயர்த்தக் கூடிய வர்த்தகத்தை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. தொழில்முனைவு ஆற்றல் வெற்றி பெறும் சாத்தியக்கூறை அடுத்து 10,000 தொடக்கநிலை நிறுவனங்கள் தொடங்கப்பட்டால்தான் 2500 மிகப் பெரிய அளவு வர்த்தகங்களை உருவாக்கப்படும்”.
தொடக்க நிலை நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்கி உள்ளன. உள்நாட்டு அபாய மூலதனம் அளவாக கிடைப்பது, வளமையான வங்கி நிதி கிடைப்பதில் இடர்பாடுகள், ஒருமைப்படாத தகவல்கள், நம்பத்தகுந்த முகமைகளில் இருந்து கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஆதரவின்மை ஆகியன இந்தச் சவால்கள். பெரும் எண்ணிக்கையிலான வெற்றிகரமான தொடக்க நிலை நிறுவனங்கள் வெளிநாட்டு துணிகர நிதியிலிருந்து நிதி உதவி பெற்றுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் இத்தகைய நிதியைப் பெறுவதற்காக நாட்டிற்கு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.
நிதியத்தின் நிதிய செயல்பாடுகளை நடத்துதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய நிதியம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும். மேலும் புதுமை அடிப்படையிலான தொடக்க நிலை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து அவை முழு அளவிலான வர்த்தக நிறுவனங்களாக மாற உதவும். இதற்கு விதைநிலை, முன்பருவ நிலை, வளர்ச்சிநிலை ஆகியவற்றில் ஆதரவு தேவை. தனி நிதியத்துக்கான இலக்கு தொகுப்பு நிதியத்துக்கு அரசின் பங்கு பெரிய அளவு தனியார் மூலதன பங்கேற்புக்கு ஊக்குவிப்பாக அமையும். இவ்வாறு மிகப்பெரிய அளவு ஆதாரங்களைத் திரட்ட உந்து விசையாக அமையும்.