Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்த பிரதமர்


 தேவர் ஜெயந்தி தினத்தில், புகழ்பெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை  பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்;

“தேவர் ஜெயந்தி நன்னாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை நான் நினைவு கூர்கிறேன். துணிச்சல் மிக்க  மற்றும் கனிவான குணம் கொண்ட அவர், பொது நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக  பல முயற்சிகளை மேற்கொண்டவர் அவர்என்றும் தெரிவித்துள்ளார்.

***