Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு வீரர்கள் கலை விழாவுக்குப் பிரதமர் பாராட்டு


தேர்வு தொடர்பான மன அழுத்தத்திலிருந்து கலை நிகழ்ச்சிகள் மீண்டும் மூலம் மீள்வதற்கான தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்ஸ்) கலை விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

 தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்ஸ்) கலை விழா 2025 ஜனவரி 04 அன்று புது தில்லியின் சாந்திபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும், 30 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

இந்தக் கலை விழா குறித்து தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்ஸ்) எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளுக்கு பதில்  அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆக்கப்பூர்வமான படைப்பாற்றல் மூலம் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை வெல்வது தொடர்பான நடைமுறை இதுவாகும்!

பல இளைஞர்கள் ஒன்றிணைந்து, மன அழுத்தம் இல்லாத வகையில், தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பான சக்திவாய்ந்த செய்தியை வெளிப்படுத்த கலையின் சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.”

***

TS/PLM/RS/DL