Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள்: பிரதமர்


தேர்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வான தேர்வு குறித்த விவாதம் 2025-ன் சிறப்பு அத்தியாயம் 2025 பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதில் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும்,  பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த இளம் தேர்வு வீரர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு தொடர்பான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் கடந்து வந்த அவர்களின் அனுபவங்கள், உத்திகள், நுண்ணறிவுகள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் வெளிப்படுத்தும்.

இந்த சிறப்பு அத்தியாயம் குறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது;

சிறந்த நிபுணர்களிடமிருந்து அனுபவங்களைக் கேளுங்கள்… இவர்கள் தேர்வு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்கள். நாளைய ‘தேர்வு குறித்த விவாதத்தில் எனது இளம் நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.”

—-

SMB/PLM/KPG/DL