Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்குமாறு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்


தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.    நமது மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குவதற்கு கூட்டாக பணியாற்றுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சகத்தின் ட்விட்டரை மேற்கோள்காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்க ஆர்வமுள்ள தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நமது மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத சூழலை நாம் கூட்டாக பணியாற்றுவோம். #PPC2023”  

**************

SM/SMB/PK/KRS