மாணவர்: தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பங்கேற்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்!
குஷி: இன்று நான் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன்.
வைபவ்: இந்த நிகழ்விற்கு பல குழந்தைகள் செய்திருந்தனர், அவர்களில் நாங்களும் இருப்பது.ஒரு பெரிய பாக்கியம்
சாய் சாஷ்டிரா: முன்பு ஒரு அரங்கில் நடைபெற்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இந்த முறையும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணினேன்.
ஐரா ஷர்மா: ஆனால் இந்த முறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது, வடிவம் முற்றிலும் மாறிவிட்டது.
அக்ஷரா: இந்த ஆண்டு, சுந்தர் நர்சரி என்ற திறந்தவெளியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அட்ரியல் குருங்: நான் உற்சாகமாக இருக்கிறேன்! நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்!
அத்விதியா சாதுகான்: பிரதமரை நேருக்கு நேர் சந்திப்பது பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நாள் இறுதியாக வந்துவிட்டது!
அட்ரியல் குருங்: இன்று நான் இங்கு கலந்துரையாட வந்திருப்பது-
லோபோங்ஷாய் லவாய்: இந்தியப் பிரதமர் உடன்!
அக்ஷரா ஜே. நாயர்: பிரதமர் மோடி அவர்கள் வந்தபோது, எல்லோரும் நேர்மறையாக உணர்ந்தார்கள்.
அனைத்து மாணவர்களும்: வணக்கம், ஐயா!
பிரதமர்: வணக்கம்! நீங்கள் அனைவரும் தனித்தனியாக அமர்ந்திருக்கிறீர்களா?
மாணவர்: இல்லை, ஐயா!
ரிதுராஜ் நாத்: நாங்கள் அவரைப் பார்த்த கணத்தில், அனைவருக்கும் நேர்மறை ஆற்றலின் எழுச்சி ஏற்பட்டது.
பிரதமர்: இவர்களில் எத்தனை பேரை உங்களுக்கு அடையாளம் தெரியும்?
மாணவர்: ஐயா, கிட்டத்தட்ட எல்லோரும்!
பிரதமர்: அப்படியானால், அவர்கள் அனைவரையும் உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்களா?
மாணவர்: ஐயா, கண்டிப்பாக அனைவரையும் அழைப்பேன்!
பிரதமர்: ஓ, செய்வீர்களா? நீங்கள் முன்பே அழைத்திருக்க வேண்டும்!
அகன்ஷா அசோக்: அவர் நம்பமுடியாத வகையில் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தார்!
பிரதமர்: மகர சங்கராந்தி அன்று என்ன சாப்பிடுவீர்கள்?
அனைத்து மாணவர்களும்: (தில்-குட்) எள்ளும் வெல்லமும்!
பிரதமர்: உங்களிடம் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை, பிடித்திருந்தால் அவர்கள் விரும்பும் அளவுக்கு அனுபவிக்கலாம்!
மாணவர்: பிரதமர் ஐயா, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ‘எள்ளு லட்டு‘ கொடுத்தபோது, நான் மகிழ்ச்சியடைந்தேன்!
பிரதமர்: அது என்ன வாக்கியம்? தில் குட் க்யா, நீ காட்-காட் போலா!
மாணவர்: தில் குட் கியா, நீ காட்-காட் போலா!
பிரதமர்: அருமை!
அனன்யா யு: ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்தால், நாம் அவருக்கு சாப்பிட கொடுக்கிறோம். அதே வழியில், அவர் எங்களுக்கு (எள்ளு லட்டு) வழங்கினார்!
பிரதமர்: கேரளாவில் இதற்கு என்ன பெயர்?
மாணவர்: இது டில் லட்டு என்று அழைக்கப்படுகிறது.
பிரதமர்: எனவே, அதை டில் லட்டு என்று அழைக்கிறார்கள்.
மாணவர்: அங்கு கிடைப்பது அரிது.
பிரதமர்: உங்களுக்கு அடிக்கடி கிடைக்காதா?
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: சரி!
மாணவர்: யாரோ நம்மைப் பற்றி நினைப்பது போல் உணர்ந்தேன்.
பிரதமர்: வேறொருவருக்காக சிலவற்றை எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்களா?
மாணவர்: ஐயா, ஒன்று அல்லது இரண்டு!
பிரதமர்: அது மிகவும் சிந்தனைக்குரியது.
மாணவர்: எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா !
பிரதமர்: நல்லது! உங்கள் இருக்கையில் அமருங்கள். இப்போது சொல்லுங்கள்—எள் மற்றும் வெல்லம், சாப்பிடுவதற்கு எந்த பருவத்தில் சிறந்தது?
மாணவர்: குளிர்காலம்!
பிரதமர்: அதை ஏன் சாப்பிடுகிறீர்கள்?
மாணவர்: இது உடலை சூடாக வைத்திருக்கும்.
பிரதமர்: அது சரி! இது உடலை சூடாக வைத்திருக்கும், ஊட்டச்சத்து பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
மாணவர்: ஐயா, உடலுக்கு பல்வேறு அத்தியாவசிய தாதுக்கள் தேவைப்படுகின்றன
பிரதமர்: ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்?
மாணவர்: உண்மையில், இந்தியா சிறுதானியங்களை ஊக்குவிக்கிறது, ஏனெனில் அவை அதிக சத்துள்ளவை.
பிரதமர்: உங்களில் எத்தனை பேர் சிறுதானியத்தை சாப்பிட்டிருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், கிட்டத்தட்ட அனைவரும் ஒரு வகையில் சாப்பிட்டு இருப்போம்.
மாணவர்: பஜ்ரா, ராகி, ஜோவர் போன்ற சிறுதானியங்கள்!
பிரதமர்: எல்லோரும் அவற்றை உட்கொள்கிறார்கள். கம்புக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் என்ன தெரியுமா?
மாணவர்: இந்தியா தான் சிறுதானியங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் .
பிரதமர்: சரிதான்! 2023 ஆம் ஆண்டை, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து உலகளவில் விளம்பரப்படுத்தியது. இது பாரதத்தின் முன்மொழிவு. சரியான ஊட்டச்சத்தின் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் என்பதால், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசு கடுமையாக வலியுறுத்துகிறது. சிறுதானியங்கள், சிறந்த உணவு என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, உங்களில் எத்தனை பேர் ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு வகையான சிறுதானியங்களை வைத்திருக்கிறீர்கள்?
மாணவர்: ஐயா, கோதுமை, ஜவ்வரிசி மற்றும் பஜ்ராவை மாவில் சேர்க்கிறோம்!
பிரதமர்: நமது பாரம்பரியங்களில் சில சடங்குகளை இணைத்திருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? புதிய பருவத்தின் புதிய பழங்கள் முதலில் கடவுளுக்கு வழங்கப்படுகின்றன.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நாம் அதை கொண்டாடுகிறோம், இல்லையா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இது எல்லா இடங்களிலும் நடக்கும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: பின்னர் அதை பிரசாதமாக உட்கொள்கிறோம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அதாவது கடவுள் கூட பருவகால பழங்களை முதலில் உட்கொள்கிறார், எனவே மனிதர்களாகிய நாமும் பருவகால பழங்களை சாப்பிட வேண்டாமா?
மாணவர்: ஆமாம் ஐயா ! நாம் அதை சாப்பிட வேண்டும்!
பிரதமர்: இந்த பருவகாலத்தில் உங்களில் எத்தனை பேர் கேரட்டை பச்சையாக சாப்பிடுகிறீர்கள்? நீங்கள் அனைவரும் கேரட் அல்வாவை விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நீங்கள் கேரட் சாறும் அருந்த வேண்டும். நல்ல ஊட்டச்சத்துக்கு சில உணவுகளை சாப்பிடுவது முக்கியம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: சில உணவுகளைத் தவிர்ப்பதும் முக்கியம் என்று நினைக்கிறீர்களா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: எதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?
மாணவர்:சத்து இல்லாத உணவு!
பிரதமர்: :சத்து இல்லாத உணவு!
மாணவர்: எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அடிப்படையிலான உணவுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.
பிரதமர்: ஆம்! சரி, சமயங்களில் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று நமக்குத் தெரியும், ஆனால் எப்படிச் சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தெரியுமா? நமக்கு எத்தனை பற்கள் உள்ளன?
மாணவர்: 32!
பிரதமர்: 32! பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி சொல்வார்கள், வீட்டில் உள்ள பெற்றோர்கள் நமக்கு 32 பற்கள் இருப்பதால், உணவை குறைந்தது 32 முறையாவது மென்று சாப்பிட வேண்டும் என்று நினைவூட்டுகிறார்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா ! அதை சரியாக மென்று சாப்பிட வேண்டும்.
பிரதமர்: எனவே, எப்படி சாப்பிடுவது என்பது முக்கியம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இப்போது, உங்களில் எத்தனை பேர் உங்கள் உணவைக் கவனிக்காமல்-அஞ்சல் அலுவலகத்தில் ஒரு கடிதத்தை அனுப்புவது போல் அதை விழுங்கிக்கொண்டு சாப்பிடுகிறீர்கள்? அல்லது, உங்கள் நண்பர் உங்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ‘அவர் என்னைவிட அதிகமாகச் சாப்பிட்டால் என்ன செய்வது?’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
மாணவர்: உண்மைதான்! சரி ஐயா !
பிரதமர்: உங்களில் எத்தனை பேர் தண்ணீரை அருந்தும்போது உண்மையில் சுவைத்திருப்பீர்கள்? அதாவது, நான் உண்மையிலேயே அதன் சுவையை ரசித்து பருகினேன். உங்களில் எத்தனை பேர் இதைச் செய்கிறீர்கள்?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஆனால் உங்களில் பெரும்பாலோர் அவ்வாறு செய்வதில்லை! பள்ளிக்குச் செல்வதில் நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள்.
மாணவர்: இல்லை, ஐயா! இல்லை, ஐயா!
பிரதமர்: இல்லை, நேர்மையாக இருங்கள் – இங்கே உண்மையைச் சொல்லுங்கள்.
மாணவர்: உண்மையாக, ஐயா !
பிரதமர்: நாம் தேநீரை சிறிது சிறிதாக உறிஞ்சு, ருசிப்பது போல், தண்ணீரையும் குடிக்க முயற்சிக்க வேண்டும். நாம் உண்மையிலேயே சுவைக்க வேண்டும். எனவே, எப்படி சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று விவாதித்தோம். மூன்றாவது முக்கியமான விஷயம் எப்போது சாப்பிட வேண்டும் என்பது.
மாணவர்: ஐயா, மாலையில் ஊறுகாய் அல்லது சாலட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலையில் சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மாணவர்: இரவு 7 மணிக்கு முன் நாம் உணவை உண்ண வேண்டும். இந்த நடைமுறை ஜெயின் சமூகத்திலும் பரவலாக பின்பற்றப்படுகிறது, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது.
பிரதமர்: நம் நாட்டில் விவசாயிகள் எப்போது சாப்பிடுவார்கள்?
மாணவர்: மதியம் ஐயா !
பிரதமர்: எனக்குத் தெரிந்தவரை, விவசாயிகள் வயல்களுக்குச் செல்வதற்கு முன் காலை 8 அல்லது 8:30 மணிக்கு ஒரு வேளை உணவை சாப்பிடுவார்கள். அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள், அவர்கள் பசியாக உணர்ந்தால், அவர்கள் வயல்களில் கிடைக்கும் அனைத்தையும் சாப்பிடுகிறார்கள். மாலை 5 அல்லது 6 மணிக்கு வீடு திரும்பும் அவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை சாப்பிடுவார்கள்.
ஆனால் நீங்கள் அனைவரும், “நான் இப்போது விளையாடச் செல்ல வேண்டும் அல்லது நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் அல்லது எனது தொலைபேசியைப் பார்க்க வேண்டும்!” என்று கூறுவீர்கள். நீங்கள் உங்கள் அம்மாவிடம், “இப்போது இல்லை, அம்மா! எனக்கு இன்னும் பசி எடுக்கவில்லை!” என்று சொல்வீர்கள்.
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: நினைவில் கொள்ளுங்கள், நோய் இல்லாமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது அர்த்தமல்ல. நல்வாழ்வு என்ற அளவில் நமது நல்வாழ்வை மதிப்பிட வேண்டும். நமக்கு போதுமான தூக்கம் கிடைக்கிறதா அல்லது சில நேரங்களில், அதிகமாக இருக்கிறதா போன்ற
நமது தூக்க முறைகளும் நமது ஊட்டச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்: ஐயா, தேர்வுகளின் போது, குறிப்பாக அவற்றிற்குத தயாராகும் போது, நாம் தூக்கத்தை உணர்கிறோம்.
பிரதமர்: அப்படியானால், அந்த நேரத்தில் உங்களுக்கு தூக்கம் வருகிறதா?
மாணவர்: ஆமாம் ஐயா ! தேர்வுகள் முடிந்ததும் தூக்கம் முற்றிலும் மறைந்துவிடும்!
பிரதமர்: ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதி ஆகியவற்றில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் எவ்வளவு நன்றாக தூங்குகிறார், எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்கிறார் என்பது குறித்து மருத்துவ அறிவியல் துறை முழுவதும் இப்போது தூக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. ஆனால், ‘பிரதமர் ஏன் நம்மைத் தூங்கச் சொல்கிறார்?’ என்று உங்களில் பலர் நினைத்திருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன்.
உங்களில் எத்தனை பேர் தினமும் வெயிலில் சென்று இயற்கையான சூரிய ஒளியைப் பெறுகிறீர்கள்?
மாணவர்: ஐயா, பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது சூரிய ஒளி எங்கள் மீது படுகிறது
பிரதமர்: அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யாரேனும் ஏதாவது தெரிவிக்க வேண்டுமா?
மாணவர்: அருணாச்சலப் பிரதேசம், சூரியன் உதிக்கும் பூமி, அதனால் தினமும் காலை சூரிய ஒளியில் நனைகிறோம்!
பிரதமர்: அதிகாலையில் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் – எந்த நேரமும் வசதியானது – 2, 5 அல்லது 7 நிமிடங்கள் கூட சூரிய ஒளியில் முடிந்தவரை உடலை வெளிப்படுத்துங்கள். பள்ளிக்குச் செல்லும் வழியில் சூரியனைப் பார்ப்பது மட்டுமல்ல; இது வேண்டுமென்றே மற்றும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்.
உங்களில் எத்தனை பேர் ஒரு மரத்தடியில் நின்று சூரிய உதயத்திற்குப் பிறகு குறைந்தது 10 ஆழ்ந்த சுவாசங்களை எடுக்க முயற்சித்திருக்கிறீர்கள்? உங்களால் முடிந்தவரை ஆழமாக சுவாசிக்க யாராவது தொடர்ந்து பயிற்சி செய்கிறீர்களா?
மாணவர்: ஐயா, ஆழமாக சுவாசிக்கவில்லை, ஆனால் அது மிகவும் நிதானமாக இருக்கிறது.
பிரதமர்: நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ஊட்டச்சத்து அவசியம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள், ஏன் சாப்பிடுகிறீர்கள் – இவை அனைத்தும் முக்கியம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நான் ஒரு குடும்பத்தைச் சந்தித்து உணவு அருந்தியது எனக்கு நினைவிருக்கிறது. அவர்களது மகன்களில் ஒருவர் கோதுமை அல்லது சிறுதானியம் சாப்பிட மறுத்துவிட்டார். சிறுதானியம் அல்லது கோதுமை ரொட்டி சாப்பிட்டால், அவரது தோல் நிறம் கருமையாகிவிடும் என்று ஒரு ஆசிரியர் அவரிடம் ஒருமுறை சொல்லியிருக்கலாம் – அல்லது எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம். அதனால், சோறு மட்டுமே சாப்பிட்டார்.
ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது—தினமும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் ‘கூகுள் குரு’வை நம்பியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: நீங்கள் அதைச் செய்யவில்லை, இல்லையா?
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: சரி, நான் வெகு நேரமாகப் பேசி வருகிறேன். நீங்கள் அனைவரும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மாணவர்: வணக்கம், ஐயா! என் பெயர் அகன்ஷா, நான் கேரளாவில் இருந்து வருகிறேன். என்னுடைய கேள்வி…
பிரதமர்: நீங்கள் சரளமாக இந்தி பேசுகிறீர்கள்! அது எப்படி?
மாணவர்: எனக்கு இந்தி பிடிக்கும் என்பதால், ஐயா!
பிரதமர்: நீங்கள் ஏன் இந்தி மொழியை மிகவும் ரசிக்கிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
மாணவர்: இல்லை, ஆனால் நான் கவிதை எழுதி இருக்கிறேன்.
பிரதமர்: ஆஹா! அப்படியானால், உங்கள் கவிதைகளில் ஒன்றை நான் முதலில் கேட்க வேண்டும்.
மாணவர்: நான் ஒன்றை நினைவில் வைத்திருந்தால், அதை உங்களுக்குப் படிப்பேன்.
பிரதமர்: அது பரவாயில்லை! நீங்கள் எதை நினைவில் வைத்திருக்கிறீர்களோ அதை நீங்கள் சொல்லலாம். பொதுவாக எனக்கு எதுவும் நினைவில் இருக்காது.
மாணவர்: “இந்த சந்தைகளில் மிகவும் சத்தம் உள்ளது,
இந்த தெருக்களில் சத்தம் அதிகம்.
நீங்கள் ஏன் உங்கள் பேனாவுடன் அமர்ந்து கஜல் எழுதுகிறீர்கள்?
அந்த புத்தகத்தின் பக்கங்களில் என்ன எழுத விரும்புகிறீர்கள்?
முடிவில்லாத கேள்விகள் நிறைந்த உங்கள் மனதை என்ன எண்ணங்கள் நிரப்புகின்றன?
ஒருவேளை மை தான் பதில்களை எழுதுகிறது.
பிறகு ஏன் வானத்தைப் பார்க்கிறீர்கள்?
இந்த நட்சத்திரங்களில் நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?
உங்கள் எண்ணங்களில் என்ன இருக்கிறது?”
பிரதமர்: ஆஹா! ஆஹா! ஆச்சரியமாக உள்ளது!
மாணவர்: உரையாடல் மிகவும் இதமாகவும், நட்பாகவும் உணரப்பட்டது – இது எங்கள் வீட்டு பெரியவர்களுடன் பேசுவது போல் இருந்தது.
பிரதமர்: அப்படியானால், உங்களுக்கு என்ன கவலை?
மாணவர்: தேர்வுகளின் அழுத்தம், ஐயா .நாம் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், நாம் நன்றாகப் படிக்க வேண்டும், இல்லையென்றால் நமது எதிர்காலம் பாழாகிவிடும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம்.
பிரதமர்: அதற்கு என்ன பதில் என்று நினைக்கிறீர்கள்?
மாணவர்: மதிப்பெண்கள் நம் எதிர்காலத்தை வரையறுக்காது ஐயா !
பிரதமர்: அப்படியானால், மதிப்பெண்கள் முக்கியமில்லையா?
மாணவர்: அறிவுதான் உண்மையாக முக்கியமானது.
பிரதமர்: ஓ, அப்படியானால் நீங்கள் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அர்த்தமற்றது என்று சொல்கிறீர்களா?
மாணவர்: இல்லை, ஐயா! தேர்வுகள் நமது பயணத்தின் ஒரு பகுதிதான், நமது இலக்கு அல்ல என்று நான் நம்புகிறேன்.
பிரதமர்: ஆனால் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் அனைவரும் இதைப் புரிந்துகொண்டாலும், உங்கள் குடும்பத்தினர் இதை எப்போதும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை.
பிரதமர்: அப்படியானால், அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
மாணவர்: ஐயா, கடின உழைப்பில் கவனம் செலுத்தி, மீதியை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.
பிரதமர்: அகன்ஷா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. துரதிர்ஷ்டவசமாக, ஒரு மாணவர் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெறவில்லை என்றால், அவர்களின் 10 அல்லது 12 வது வகுப்பு தேர்வுகளில் நன்றாகப் படிக்கவில்லை என்றால், அது அவர்களின் முழு வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்துவது போல் உணர்கிறது என்ற எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இதன் காரணமாக, வீட்டில் அழுத்தம், குடும்பத்தில் அழுத்தம் – நிலையான பதற்றம்!
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அப்படியானால், உங்கள் பெற்றோருக்குப் புரிய வைக்க முடியாது என்கிறீர்களா? உங்கள் தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன, உங்கல் அம்மா உங்களுக்கு அறிவுரை சொல்ல தொடங்கினால், ‘அம்மா, இன்னொரு பிரசங்கம் வேண்டாம்!‘ என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அப்படி சொல்ல முடியாது அல்லவா? உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் பொருள் உங்கள் மீது அழுத்தம் உள்ளது, உங்களைச் சுற்றியுள்ள அனைவரும், இதைச் செய்யுங்கள்! அதை செய்யுங்கள்! என்று கூறுவது போல் அப்படி உணர்கிறீர்களா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: உங்களில் எத்தனை பேர் போட்டி நடக்கும்போதெல்லாம் தொலைக்காட்சியில்கிரிக்கெட் பார்க்கிறார்கள்? உங்களில் எத்தனை பேர்?
மாணவர்: ஐயா, நாங்கள் அனைவரும்! ஆம், ஐயா!
பிரதமர்: ஒரு போட்டி நடக்கும்போதெல்லாம் மைதானம் சத்தத்துடன் வெடிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: என்ன சத்தம் கேட்கிறது?
மாணவர்: ஐயா, மொத்த கூட்டமும் ஆரவாரம் செய்யும்!
பிரதமர்: சிலர் சிக்ஸர்! சிக்ஸர்! மற்றவர்கள் நான்கு என்று அழைக்கும் போது!
மாணவர்: ஆமாம் ஐயா ! சிலர் ஆறு ரன்களுக்கு அழைக்கிறார்கள்!
பிரதமர்: இப்போது சொல்லுங்கள், பேட்ஸ்மேன் என்ன செய்கிறார்? அவர் கூட்டத்தைக் கேட்கிறாரா, அல்லது பந்தில் கவனம் செலுத்துகிறாரா?
மாணவர்: அவர் பந்தில் கவனம் செலுத்துகிறார்.
பிரதமர்: சரி! ‘ஐயோ, அவர்கள் சிக்ஸருக்குக் கத்துகிறார்கள், நான் சிக்ஸர் அடிக்க வேண்டும்!‘ என்று அவர் நினைக்க ஆரம்பித்தால் – என்ன நடக்கும்?
மாணவர்: அவர் தனது விக்கெட்டை இழப்பார்!
பிரதமர்: அது சரி! அதாவது, பேட்ஸ்மேன் அழுத்தம் அவரைப் பாதிக்க விடமாட்டார்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அவரது முழு கவனமும் பந்தில்தான் உள்ளது. அதேபோல, நீங்கள் அழுத்தத்தை அனுமதிக்காமல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் – ‘இன்று, நான் இவ்வளவு படிக்க முடிவு செய்துள்ளேன், அதைக் கடைப்பிடிப்பேன்!‘ என்று தீர்மானித்தால், அப்போது நீங்கள் அந்த அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.
மாணவர்: ஐயா எங்கள் கேள்விகளுக்கு நன்றாக பதிலளித்தார்! பரீட்சை அழுத்தத்தை எவ்வாறு எடுக்கக்கூடாது என்பதை அவர் எங்களுக்கு விளக்கினார் மற்றும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்.
மாணவர்: உங்கள் இலக்கைப் பற்றி நீங்கள் தெளிவாக இருந்தால், எந்த கவனச்சிதறல்களும் தடைகளும் உங்களைத் தடுக்க முடியாது. நீங்கள் எப்போதும் சுய ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.
மாணவர்: மன அழுத்தம் எதுவாக இருந்தாலும், அதை வெளிப்படையாகத் தழுவுங்கள்-ஆனால் அதில் தங்க வேண்டாம், என்று அவர் சொன்னார்!
பிரதமர்: ஒருவர் எப்போதும் பொறுப்புக்கூற வேண்டும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஒருவர் தனக்குத் தானே சவால் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: கடந்த முறை 30 மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இந்த முறை 35 மதிப்பெண்கள் பெறுங்கள். உங்களை நீங்களே சவால் விடுங்கள்! பலர் தங்களுக்கே சவால் விடுப்பதில்லை. நீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த பிரச்சினைகளில்போராட உங்கள் மனதை உருவாக்கியுள்ளீர்களா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: உங்களை நீங்களே சவால் செய்ய விரும்பினால், முதலில் உங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: “வாழ்க்கையில் நான் என்ன ஆக முடியும்? என்னால் என்ன செய்ய முடியும்? உண்மையில் எனக்கு திருப்தியைத் தருவது எது?” என்று நீங்களே எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இந்த கேள்விகளை நீங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு நாள் காலையில் செய்தித்தாளில் எதையாவது படித்து முடிவெடுப்பது போல இருக்கக்கூடாது, ஓ, இது சுவாரஸ்யமாகத் தெரிகிறது!என்று கூறிவிட்டு -அதன்பிறகு மறுநாள், தொலைக்காட்சியில் எதையாவது பார்த்துவிட்டு, அதுவும் நன்றாக இருக்கிறது என்று தோன்றக்கூடாது. நீங்கள் படிப்படியாக உங்கள் மனதை ஒரு இலக்கில் நிலைநிறுத்த வேண்டும்.
பெரும்பாலான மக்கள் எளிதில் திசைதிருப்பப்படுவார்கள், மேலும் அவர்களின் மனம் அலைந்து கொண்டே இருக்கும்.
மாணவர்: அது அழிவுக்கு வழிவகுக்கும்.
பிரதமர்: சரி! உங்களுக்கு தெளிவு இருந்தால் தான் அடுத்து என்ன சவாலை எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய முடியும். முயற்சி செய்வீர்களா?
மாணவர்: ஆமாம் ஐயா !
மாணவர்: பிரதமர் ஐயா, உங்களிடம் ஒரு கேள்வி! நீங்கள் ஒரு முக்கிய உலகளாவிய தலைவர், நீங்கள் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளீர்கள். நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது குழந்தைகளான எங்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்கும் இரண்டு அல்லது மூன்று தலைமைத்துவப் பாடங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
பிரதமர்: விராஜ்!
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: பீகாரைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அரசியல் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பது சாத்தியமில்லை! பீகாரைச் சேர்ந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள். தலைமை என்ற தலைப்பைப் பற்றி வேறு யாராவது சிந்திக்கிறார்களா?
மாணவர்: ஆமாம் ஐயா ! நானும் யோசிக்கிறேன். ஆனால் அதை எப்படி விளக்குவது?
பிரதமர்: நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அதை விளக்குங்கள்.
மாணவர்: சில நேரங்களில், ஆசிரியர் எங்களை வகுப்பு கண்காணிப்பாளராக நியமிக்கும்போது அல்லது ஒழுக்கத்தை பராமரிக்க எங்களை நியமிக்கும்போது, மாணவர்கள் எப்போதும் கேட்பதில்லை. அவர்களுக்குப் புரிய வைக்க வழி இருக்க வேண்டும். நாம் அவர்களை உட்காருமாறு உத்தரவிட முடியாது! அல்லது அவர்களின் பெயர்களை எழுதிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். அது அவர்களை இன்னும் சத்தமடையச் செய்யும். எனவே, அவர்கள் கேட்கவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் சிறந்த வழி இருக்கிறதா?
பிரதமர்: நீங்கள் ஹரியானாவைச் சேர்ந்தவரா?
மாணவர்: இல்லை, ஐயா! நான் பஞ்சாப்-சண்டிகரை சேர்ந்தவன்!
பிரதமர்: சண்டிகர்!
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: தலைமைத்துவம் என்பது குர்தா-பைஜாமா அணிந்துகொண்டும், ஜாக்கெட் போட்டுக்கொண்டும், பெரிய மேடைகளில் பிரமாண்டமான உரைகளை ஆற்றுவதும் அல்ல. உங்களைப் போன்ற ஒரு குழுவில், உங்களில் சிலர் இயல்பாகவே தலைவர்களாக வெளிப்படுவார்கள். யாரும் முறையாக அவர்களை நியமிக்கவில்லை, ஆனால் அவர்கள் ‘போகலாம்‘ என்று சொன்னால், மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். தலைமை இயல்பாகவே நடக்கும்.
இது மற்றவர்களைத் திருத்துவது பற்றியது அல்ல – அது உங்களையே முன்மாதிரியாக வைப்பது.
உதாரணமாக, நீங்கள் ஒரு தலைவராக இருந்து, நீங்கள் தாமதமாக வந்தாலும், மற்றவர்கள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்று எதிர்பார்த்தால், அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்களா?
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: வீட்டுப்பாடம் முடிக்கப்பட வேண்டும் மற்றும் வகுப்பு தலைவர் ஏற்கனவே தங்கள் வேலையைச் செய்துவிட்டால், மற்றவர்கள் உந்துதல் பெறுவார்கள். தலைவர் ஒரு வகுப்பு தோழனிடம் ‘நீங்கள் வீட்டுப்பாடம் முடிக்கவில்லையா? சரி, நான் உங்களுக்கு உதவுகிறேன்-வாருங்கள்!‘, என்று சொன்னால், இது ஒரு சிறந்த உதாரணமாக அமைகிறது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஆசிரியர் யாரையாவது திட்டுவதற்குப் பதிலாக, தலையிட்டு உதவி செய்யுங்கள்.நீங்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் யாரிடமாவது ‘நீங்கள் இன்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? நேற்றிரவு நீங்கள் சரியாகத் தூங்கவில்லையா?’ என்று கேட்கும்போது, வெறுமனே விதிகளை அமல்படுத்துவதை விட மானிட்டர் உண்மையிலேயே தங்கள் மீது அக்கறை காட்டுகிறார் என்று அவர்கள் உணரத் தொடங்குகிறார்கள்.
மரியாதையை கேட்க முடியாது…
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: …கட்டளையிடப்பட வேண்டும்!
மாணவர்: ஆமாம் ஐயா ! ஆம், ஐயா!
பிரதமர்: ஆனால் அதை எப்படி அடைவது?
மாணவர்: முதலில் தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம்!
பிரதமர்: கண்டிப்பாக! நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாணவர்: நமது நடத்தை மூலம் மக்கள் அதை அடையாளம் கண்டுகொள்வார்கள்.
பிரதமர்: சரிதான்! உங்கள் நடத்தை இயல்பாகவே மற்றவர்களை பாதிக்கும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: தலைமைத்துவத்தை திணிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்களா? நீங்கள் அவர்களை வெறும் அறிவால் தாக்கினால், அவர்கள் செய்ய மாட்டார்கள். உங்கள் வார்த்தைகள் மட்டுமல்ல, உங்கள் செயல்களின் அடிப்படையிலும் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
உதாரணமாக, நீங்கள் தூய்மை பற்றி பேசினால், அதை நீங்களே பயிற்சி செய்யாமல் இருந்தால்…
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்:…அப்படியானால் நீங்கள் தலைவராக முடியாது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஒரு தலைவராக இருக்க, நீங்கள் குழுப்பணியைக் கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமை அவசியம். பெரும்பாலும், நாம் ஒரு பணியை ஒப்படைத்து, யாராவது அதை முடிக்கத் தவறினால், உடனடியாக கடுமையாக நடந்துகொள்கிறோம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நாங்கள் அவர்களிடம் கேள்விகளை முடிக்கிறோம்-நீங்கள் ஏன் அதை செய்யவில்லை? என்று. அவ்வாறு செயல்படுவது தலைமைத்துவம் அல்ல
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: யாரேனும் ஒரு பணியில் சிரமப்பட்டால், அவர்களின் சிரமங்களை புரிந்து கொள்ளுங்கள். எங்காவது வளங்கள் குறைவாக இருந்தால், தேவையான இடங்களில் அவை வழங்கப்படுவதை உண்மையான தலைவர் உறுதி செய்கிறார்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஒரு தலைவராக நீங்கள் எப்போதும் உங்கள் அணிக்காக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டால், நீங்கள் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இறுதியில், அவர்கள் அதை தாங்களாகவே செய்ததாக உணருவார்கள்-உண்மையில், நீங்கள் அவர்களுக்கு 80% உதவி செய்திருந்தாலும் கூட.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஆனால் ‘நான் அதைச் செய்தேன்‘ என்ற அந்த உணர்வு அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும், மேலும் இந்த நம்பிக்கை உங்கள் தலைமையை பலப்படுத்துகிறது.
இந்த சிறுவயது கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் – ஒரு குழந்தையும் அவனது தந்தையும் ஒரு கண்காட்சியில் இருந்தனர். தந்தை குழந்தையிடம், என் கையைப் பிடி என்று கூறுவர். ஆனால் குழந்தை பதிலளித்தது, இல்லை, நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!
முதலில், ஒருவர் நினைக்கலாம், இது என்ன வகையான மகன், தனது தந்தையை வேறு வழியில் செல்லாமல் அவரது கையைப் பிடிக்கச் சொல்கிறார்? ஆனால் பின்னர் குழந்தை விளக்குகிறது:
அப்பா, நான் உங்கள் கையைப் பிடித்தால், அது எந்த நிமிஷத்திலும் நழுவிப் போகலாம்… ஆனால் நீ என்னுடையதைப் பிடித்துக் கொண்டால், நீ ஒருபோதும் விடமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அந்த நம்பிக்கை-அந்த அசைக்க முடியாத நம்பிக்கை-தலைமையின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, இல்லையா?
மாணவர்: நான் பிரிதம் தாஸ், திரிபுராவின் பி,எம்,சி ஆர்யா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்.
பிரதமர்: எங்கிருந்து?
மாணவர்: பெலோனியா, தெற்கு திரிபுரா மாவட்டம்!
பிரதமர்: அப்படியானால், நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?
மாணவர்: இது என் விருப்பம், ஐயா . நான் உங்களைச் சந்திக்க விரும்பினேன், எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும், எதையாவது புரிந்து கொள்ள வேண்டும் – அவ்வளவுதான்!
பிரதமர்: நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்? லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்ததா?
மாணவர்: இல்லை, ஐயா!
பிரதமர்: பிறகு எப்படி நடந்தது?
மாணவர்: ஐயா, திரிபுராவில் லஞ்சம் வேலை செய்யாது.
பிரதமர்: அது இல்லையா?
மாணவர்: எனது மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், எனது எண்ணங்களை உங்களிடம் தெரிவிக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.
பிரதமர்: சரி, என் மனதில் இருப்பதை நான் பகிர்ந்து கொள்கிறேன், நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து பேசலாம்.
மாணவர்: ஐயா, உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது. 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு படிக்கும் போது, நடனம், தோட்டக்கலை, ஓவியம் வரைதல் போன்ற பொழுதுபோக்குகள் அல்லது பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும், எங்கள் குடும்பங்கள் பெரும்பாலும் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை. இந்த முயற்சிகளால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். பொதுத் தேர்வுகளுக்குப் பிறகும், படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த நடவடிக்கைகளில் எதிர்காலம் இல்லை என்றும், வெற்றிக்கான ஒரே வழி கல்வியாளர்களால் மட்டுமே என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
பிரதமர்: அப்படியானால், உங்களுக்கு நடனமாடத் தெரியுமா?
மாணவர்: ஆமாம் ஐயா ! இருப்பினும், குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு கற்பிக்கப்படவில்லை, ஏனென்றால் எங்கள் கிராமத்தில், சிறுவர்கள் நடனமாடும்போது, மக்கள் அதை வித்தியாசமாக கருதுகிறார்கள்.
பிரதமர்: அது எப்படி என்று எனக்குக் காட்டு!
மாணவர்: இப்படி…..! பெங்காலி ‘துனுச்சி‘ நடனமும் உள்ளது, இது இப்படிச் செல்கிறது… பின்னர் இது போன்ற மற்றொரு நடனம்.
பிரதமர்: சரி, நீங்கள் நடனமாடும்போது எப்படி உணர்கிறீர்கள்?
மாணவர்: இது எனக்கு உள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது.
பிரதமர்: பிறகு நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா அல்லது உங்கள் சோர்வைப் போக்குகிறதா?
மாணவர்: இல்லை ஐயா , சோர்வு மறையும்.
பிரதமர்: அப்படியென்றால், உங்கள் பெற்றோரிடம் நீங்கள் விளக்கி, நாள் முழுவதும் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களுக்கு நல்ல நாளாக இருக்குமா? என்று கேளுங்கள்
மாணவர்: இல்லை ஐயா .
பிரதமர்: நாம் ஓய்வெடுக்க சிறிது நேரம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? உங்கள் வீட்டில் ஒரு செல்ல நாய் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள் – நீங்கள் மிகவும் நேசிக்கும் மற்றும் குழந்தை பருவத்திலிருந்தே வளர்த்து வருகிறீர்கள். இப்போது, நீங்கள் 10 ஆம் வகுப்பை அடையும்போது, உங்கள் பெற்றோர் திடீரென்று உங்களிடம், இனி நாயுடன் நேரத்தை செலவிட வேண்டாம் என்று கூறுகிறார்கள். நாங்கள் அதை கவனித்துக்கொள்வோம், நீங்கள் உங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இது உங்களுக்கு படிப்பை எளிதாக்குமா அல்லது அது உங்களை அமைதியின்றி விடுமா?
மாணவர்: அது எனக்கு அமைதியற்றதாக இருக்கும்.
பிரதமர்: மிகச் சரி! எனவே, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி – நாம் ரோபோக்களைப் போல வாழ முடியாது என்பதை விளக்க வேண்டும். நாம் மனிதர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஏன் படிக்கிறோம்? வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நமது ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிலையிலும் படிக்கிறோம். நீங்கள் சிஷு மந்திரில் இருந்தபோது, உங்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில், நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம், அவர்கள் ஏன் எங்களை இவ்வளவு கடினமாக உழைக்கச் செய்கிறார்கள்? அவர்கள் ஏன் பூக்களைப் பற்றி கற்பிக்கிறார்கள்? நான் தோட்டக்காரனாக ஆக விரும்பவில்லை!
அதனால்தான் மாணவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும், ஆசிரியர்களிடமும் நான் எப்போதும் சொல்வேன், குழந்தைகளை நான்கு சுவர்களுக்குள் அடைத்து, புத்தகங்களுக்குள் சிறை வைத்தால், அவர்கள் ஒருபோதும் வளர மாட்டார்கள். அவர்களுக்கு திறந்த வானம் தேவை. அவர்களின் நலன்களை ஆராய அவர்களுக்கு இடம் தேவை. அவர்கள் தங்கள் விருப்பங்களை முழு மனதுடன் தொடர்ந்தால், அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.
தேர்வுகளே வாழ்க்கை இல்லை. அந்த எண்ணத்துடன் வாழக்கூடாது. இதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஆசிரியர்களையும் கூட உங்களால் நம்ப வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
பிரதமர்: வைபவ், உங்கள் அனுபவம் என்ன?
மாணவர்: ஐயா, நீங்கள் சொல்வது சரிதான். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மக்கள் ஆர்வத்தை இழக்கிறார்கள். ஆனால் நம்மில்…
பிரதமர்:நம்மில்?
மாணவர்: நீங்கள் புத்தகப் புழுவாக மாறினால், நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை அனுபவிக்க மாட்டீர்கள்!
பிரதமர்: அப்படியானால், புத்தகங்களை மட்டும் தாண்டி நாம் செல்ல வேண்டுமா?
மாணவர்: நாம் புத்தகங்களைப் படிக்க வேண்டும், ஏனென்றால் அவை பரந்த அறிவைக் கொண்டிருக்கின்றன, ஆனால் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
பிரதமர்: புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. மாறாக, ஒருவர் விரிவாகப் படித்து முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும். இருப்பினும், தேர்வுகள் மட்டுமே இல்லை. அறிவும் தேர்வும் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்:அவை வெவ்வேறானவை.
மாணவர்: அவர் எங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தார். பரீட்சை அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது, அழுத்தத்தை எவ்வாறு பேணுவது மற்றும் சரியான மனநிலையுடன் தேர்வுகளை எவ்வாறு அணுகுவது என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார். இந்த எல்லா அம்சங்களிலும் அவர் நம்மை வழிநடத்தினார்.
மாணவர்: அவர் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாக இருக்கிறார், மேலும் அவர் அந்த நேர்மறையை நமக்குள்ளும் விதைத்துள்ளார்.
மாணவர்: அவர் ஒவ்வொரு தலைமுறையையும் மேம்படுத்துகிறார்.
மாணவர்: இன்று அவர் எங்களிடம் சொன்ன அனைத்தையும் – அதை என் வாழ்க்கையில் பயன்படுத்த நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்!
பிரதமர்: உட்காருங்கள்! ஆம், ஆம் – அடுத்த மாணவர் முன் வந்து அவர்களின் கேள்வியைக் கேட்கட்டும்.
மாணவர்: வணக்கம், ஐயா! என் பெயர் ப்ரீத்தி பிஸ்வால். எனது வகுப்பில் மிகவும் திறமையான மற்றும் கடின உழைப்பாளிகள் பல மாணவர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் தகுதியான வெற்றியை அடையவில்லை. அவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?
பிரதமர்: அறிவுரைகளை வெறுமனே வழங்கக்கூடாது – தயவுசெய்து உட்காருங்கள்!
பிரதமர்: நான் உங்களுக்கு அறிவுரை கூறினால், “அவர் ஏன் என்னிடம் இதைச் சொன்னார்? அவர் என்ன சொன்னார்? அவர் என்னிடத்தில் குறை காண்கிறாரா?” என்று நீங்கள் உடனடியாக நினைக்கலாம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இதன் பொருள் ஒரு நபரின் மனநிலை ‘கடினமானதாக‘ மாறுகிறது, இது ஒரு கூட்டாளருக்கு உண்மையாக ஆதரவளிப்பதை கடினமாக்குகிறது. மாறாக, குறைபாடுகளில் கவனம் செலுத்துவதை விட, அவற்றில் உள்ள நல்ல குணங்களை அடையாளம் காண்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீங்கள் ஒருவரைக் கவனித்தால், நீங்கள் நிச்சயமாக நேர்மறையான ஒன்றைக் கவனிப்பீர்கள்-ஒருவேளை அவர்கள் நன்றாகப் பாடுவார்கள், நேர்த்தியாக உடை அணிவார்கள் அல்லது வேறு சில போற்றத்தக்க பண்புகளைக் கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறிந்தவுடன், அதைப் பற்றிய உரையாடலைத் தொடங்கவும். அவர்களின் பலத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளும்போது, நீங்கள் உண்மையாகவே அவர்கள் மீது அக்கறை காட்டுவதாகவும் அவர்களின் திறமைகளைப் பாராட்டுவதாகவும் அவர்கள் உணருவார்கள்.
பிறகு, “என் நண்பரே, நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள், ஆனால் தேர்வின் போது என்ன நடக்கிறது? நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்?” என்று நீங்கள் கூறினால், “எனக்கு அது நன்றாக வருவதில்லை. அது ஏன் நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் பதிலளிக்கலாம்.
அந்த நேரத்தில், நீங்கள் அவர்களை ஊக்குவிக்கலாம்: “என் வீட்டிற்கு வாருங்கள்; ஒன்றாகப் படிப்போம்“.
மேலும், பெரும்பாலான ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் கற்பிப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும், ஆனால் தேர்வு நேரம் நெருங்கும்போது, கேள்வி-பதில் தொகுப்புகளை எழுதுமாறு மாணவர்களிடம் கூறுவார்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: எந்த வயதினராக இருந்தாலும் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது நம்பிக்கை. கவிதைகளை எழுதுபவர்கள், விராஜ் மற்றும் அகான்க்ஷா தங்கள் கவிதைகளை எப்படி வாசித்தார்களோ, அது போலவே, உண்மையில் அவர்களின் எண்ணங்களைப் படம்பிடித்து கட்டமைக்கிறார்கள். அகமதாபாத்தில் சில பள்ளி அதிகாரிகளை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு குழந்தையின் பெற்றோர் எனக்குக் கடிதம் எழுதி, தங்கள் குழந்தையைப் பள்ளியில் இருந்து வெளியேற்றுவதாகக் கூறினர். நான் அவர்களிடம், “ஏன் அவரை வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்டேன். குழந்தை கவனிக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர். சுவாரஸ்யமாக, பள்ளி பின்னர் டிங்கரிங் ஆய்வகத்தைத் தொடங்கியது, மேலும் ஆச்சரியப்படும் விதமாக, அதே குழந்தை தனது பெரும்பாலான நேரத்தை டிங்கரிங் ஆய்வகத்தில் கழித்தது. ரோபோட்டிக்ஸ் போட்டி நடந்தது, பள்ளி அணி முதலிடம் பெற்றது. ஏன்? ஏனென்றால் அந்தக் குழந்தைதான் ரோபோவை உருவாக்கியது! அவர்கள் வெளியேற்றவிருந்த குழந்தையே ரோபோட்டிக்ஸில் சிறந்ததாக மாறியது. இதன் பொருள் அவருக்கு ஒரு சிறப்பு திறமை இருந்தது. அந்தத் திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதே ஆசிரியரின் பணி. நான் உங்களுடன் ஒரு பரிசோதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்—நிச்சயமாக இன்று அதைச் செய்வீர்களா?
மாணவர்கள்: ஆம், நாங்கள் செய்வோம்! கண்டிப்பாக!
பிரதமர்: சிறுவயது முதல் இப்போது வரை உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றி யோசித்துப் பாருங்கள் – அவர்களில் 25 முதல் 30 பேர் வரை. அவர்களின் தந்தையின் பெயர்கள் உட்பட அவர்களின் முழுப் பெயர்களையும் எழுத முயற்சிக்கவும். ஒருவேளை உங்களால் 10ஐ நினைவு கூர முடியும். பிறகு, அவர்களின் தந்தைகள், தாய்மார்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எழுதுங்கள். எண்ணிக்கை இன்னும் சிறியதாக இருப்பதை நீங்கள் உணரலாம். நீங்கள் நல்ல நண்பர்களாகக் கருதுபவர்களுடன் கூட, அவர்களைப் பற்றி உங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்பதை இது காட்டுகிறது. எல்லாம் வெறும் மேலோட்டமானது. இப்போது ஒரு முக்கியமான கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் வைபவுடன் மூன்று நாட்களாக இருந்தேன், ஆனால் அவரைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட நல்ல தரத்தை என்னால் பட்டியலிட முடியுமா?” இந்த பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால், இயற்கையாகவே எல்லாவற்றிலும் நேர்மறையான அம்சங்களைக் கண்டறியத் தொடங்குவீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மாணவர்: ஐயா, எனது கேள்வி இதுதான்: தேர்வுகள் நெருங்கும் போது, மாணவர்கள் முடிந்தவரை படித்து, சிறந்ததைச் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை உணரத் தொடங்குகிறார்கள். அந்த கட்டத்தில், உணவு, உறக்கம் மற்றும் தினசரி நடைமுறைகள் தொந்தரவு செய்யப்படுகின்றன. ஐயா, நீங்கள் உங்கள் நாளை மிகவும் பயனுள்ளதாக நிர்வகிக்கிறீர்கள். ஐயா, மாணவர்கள் தங்கள் முழு நாளையும், படிப்பையும் திறம்பட நிர்வகிக்க என்ன அறிவுரை வழங்குவீர்கள்?
பிரதமர்: முதலில், அனைவருக்கும் 24 மணிநேரம் இருக்கிறது, இல்லையா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அது உங்களுக்குத் தெரியும், இல்லையா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: சிலர் 24 மணி நேரத்திற்குள் அற்புதமான வேலையைச் செய்கிறார்கள், மற்றவர்கள் நாள் முழுவதும் செலவழித்தாலும் எதையும் சாதிக்கவில்லை என்று நினைக்கிறார்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: முக்கியப் பிரச்சினை என்னவென்றால், அவர்களுக்கு சரியான நிர்வாகமும், நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய புரிதலும் இல்லை.
மாணவர்: சரி!
பிரதமர்: ஒரு நண்பர் வந்தால், அவர்கள் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கிறார்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால், தங்கள் நேரத்தை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்துவது என்று எந்த யோசனையும் இல்லாமல் அவர்கள் அதில் மூழ்கி விடுகிறார்கள். முதலில் செய்ய வேண்டியது, நமது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் – அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும்? நான் எப்பொழுதும் என் நேரத்தைப் பற்றி விழிப்புடன் இருக்கிறேன், அதை ஒருபோதும் வீணடிக்க விடமாட்டேன். நான் ஒரு பணியிலிருந்து அடுத்த பணிக்கு தொடர்ந்து ஓடுகிறேன் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நான் எனது பணிகளை நேர மேலாண்மைக்கு ஏற்ப காகிதத்தில் திட்டமிடுகிறேன், பின்னர் நான் அவற்றைச் செய்தேனா இல்லையா என்பதை மதிப்பாய்வு செய்கிறேன். நீங்கள் நாளை முடிக்க விரும்பும் மூன்று விஷயங்களைப் பட்டியலிடுங்கள்—அந்த மூன்று விஷயங்களை எதுவாக இருந்தாலும் செய்யுங்கள். பின்னர், அடுத்த நாள், நீங்கள் அவற்றைச் செய்தீர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். நமக்குப் பிடித்த பாடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதும், பிடிக்காதவற்றை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும்தான் பெரும்பாலும் நடக்கும்.
மாணவர்: ஆமாம் ஐயா ! உண்மைதான்!
பிரதமர்: முதலில், இந்த அணுகுமுறையை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாணவர்: சரி ஐயா !
பிரதமர்: நீங்களே சவால் விடுங்கள். “இந்த புவியியல் என்ன? ஏன் எனக்கு கடினமாக இருக்கிறது? நான் அதை தோற்கடிப்பேன்” என்று சிந்தியுங்கள். அதை வெல்வதற்கான உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். அது கணிதமாக இருக்கட்டும் – “அதை நேருக்கு நேர் எதிர் கொள்வேன்” என்று வெற்றிபெறும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் – ஒருபோதும் கைவிடாதீர்கள் அல்லது பணிந்துவிடாதீர்கள்.
மாணவர்: அனைவருக்கும் 24 மணிநேரம் உள்ளது, ஆனால் சிலர் மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறார்கள், மற்றவர்கள் நீங்கள் சொன்னது போல் அரட்டை அடித்து வீணடிக்கிறார்கள். எனவே சரியான நேரத்தில் பணிகளை முடிக்கவும், நாள் முழுவதும் பலனளிக்கவும் சரியான நேர மேலாண்மை தேவை.
மாணவர்: ஐயா, முதலில், நீங்கள் ஒரு சிறந்த பதிலைச் சொன்னதால், நாங்கள் உங்களுக்காக கைதட்ட விரும்புகிறோம், ஆனால் “மலர் கைதட்டல்” என்று ஒரு திருப்பத்துடன்.
பிரதமர்: ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?
மாணவர்: ஐயா, இது காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கானது.
பிரதமர்: உடனே கைகளை அசைத்து இப்படி பாராட்டுகிறார்கள்.
மாணவர்: ஐயா, நம் மனதில் பல யோசனைகள், சாத்தியங்கள் மற்றும் கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். இவை தேர்வின் போது கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. அப்படியானால் ஐயா, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் எப்படி மனதை அமைதிப்படுத்துவது?
பிரதமர்:உங்கள் கவனம் சிதறுவதாக நான் நம்பவில்லை.
மாணவர்: ஐயா , கொஞ்சம் நடக்கும், ஏனென்றால்…
பிரதமர்: நீங்கள் உண்மையிலேயே கவனம் சிதறுவதில்லை என்று நினைக்கிறேன்.
மாணவர்: ஐயா , கவனச்சிதறல்கள் கொஞ்சம் நடக்கும்.
பிரதமர்: உங்கள் நம்பிக்கையை என்னால் பார்க்க முடிகிறது. இன்று காலை நான் உங்களை கவனித்ததிலிருந்து, உங்களுடைய நம்பிக்கை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
மாணவர்: ஆனாலும், ஐயா, ஒன்று மட்டும் நிச்சயம் தேர்வுகள் கடினமாக இருக்கும்…
பிரதமர்: உங்களை நீங்கள் முழுமையாக அறியவில்லை என்று அர்த்தம். நண்பர்களுக்கு முன்னால், “ஆமாம், இது கடினமானது” என்று சொல்வது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அடிக்கடி இப்படி ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள் – “நேற்று என்னால் படிக்க முடியவில்லை, எனக்கு தூக்கம் வந்தது” அல்லது “நேற்று என் மனநிலை சரியில்லை“, என்று கூறுவார்கள். நண்பர்களிடம் தொலைபேசியிலும் கூட இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள்.
மாணவர்: ஆமாம்!
பிரதமர்: பிறகு எப்படி கவனம் செலுத்துவீர்கள்?
பிரதமர்: மிகவும் மதிப்புமிக்க விஷயம் எது?
மாணவர்: இப்போது, தற்போதைய தருணம்!
பிரதமர்: நிகழ்காலம் கடந்தால், அது கடந்த காலமாக மாறும், அது உங்கள் கையில் இல்லை. ஆனால் நீங்கள் உண்மையாக வாழ்ந்தால்…
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும். ஆனால் நீங்கள் எப்போது வாழ முடியும்? இப்போது தென்றல் நன்றாக வீசுகிறது. ஆனால் நீங்கள் அதை கவனித்தீர்களா? அழகான நீரூற்றும் உள்ளது. நான் அதைக் குறிப்பிடும்போது, ”ஓ ஆமாம்…” என்று நீங்கள் திடீரென்று உணரலாம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: தென்றல் முன்பும் இருந்தது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஆனால் நீங்கள் அதை கவனிக்கவில்லை.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: உங்கள் மனம் வேறு எங்கோ இருந்தது.
மாணவர்: ஆமாம் ஐயா !
மாணவர்: என் கேள்வி என்னவென்றால், ஐயா, இந்த நாட்களில் மாணவர்கள் படிக்கும் போது அடிக்கடி மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை அனுபவிக்கிறார்கள். இதை எப்படி சமாளிப்பது ஐயா?
பிரதமர்: இந்தப் பிரச்சனை எங்கிருந்து தொடங்குகிறது? படிப்படியாக, நீங்கள் மாற்றங்களைக் கவனிப்பீர்கள் – நீங்கள் வீட்டில் உரையாடல்களை ரசிக்க மாட்டீர்கள். முன்பு, நீங்கள் உங்கள் தம்பியுடன் நிறைய அரட்டை அடித்தீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இப்போது அவர் உங்களைத் தொந்தரவு செய்வது போல் தெரிகிறது – “போய் விடு, என்னை விட்டுவிடு“, என்று கூறுவீர்கள். முன்னதாக, நீங்கள் பள்ளியிலிருந்து ஓடி வந்து, பள்ளியில் நடந்த அனைத்தையும் உங்கள் அம்மாவிடம் உற்சாகமாகச் சொல்வீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இப்போது நீங்கள் உங்கள் அம்மாவுடன் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை – அதை நிராகரிக்கிறீர்கள்,வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டு பிறகு விட்டு விடுகிறீர்கள்.. இத்தகைய நடத்தை படிப்படியாக உங்களை தனிமைப்படுத்துகிறது. மெதுவாக, நீங்கள் உங்களுக்குள் சுருங்குகிறீர்கள், இறுதியில், இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். உங்கள் மனதில் உள்ள சந்தேகங்களையோ அல்லது சங்கடங்களையோ தயக்கமின்றி வெளிப்படையாகப் பகிர முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவற்றை வெளிப்படுத்தாமல், எல்லாவற்றையும் உள்ளே அடைத்து வைத்தால், அது இறுதியில் ஒரு பெரிய வெடிப்புக்கு வழிவகுக்கும். முன்னதாக, நமது சமூக அமைப்பில் பெரும் நன்மை இருந்தது. குடும்பமே பல்கலைக்கழகம் போல இருந்தது. சில சமயங்களில் நீங்கள் உங்கள் தாத்தாவிடம், சில சமயம் உங்கள் பாட்டியிடம், சில சமயம் உங்கள் மாமா, அத்தை, மூத்த உடன்பிறப்புகள் அல்லது ஒரு மைத்துனர் ஆகியோரிடம் வெளிப்படையாகப் பேசுவீர்கள் – எப்போதும் பகிர்ந்து கொள்ள யாராவது இருப்பார்கள். பிரஷர் குக்கரின் விசில் சத்தம் போல…
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: பிரஷர் குக்கர் வெடிக்கவில்லை.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அதேபோல, இது நீங்கள் உணரும் அழுத்தம் போன்றது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: பின்னர், சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, உங்கள் தாத்தா, “இல்லை மகனே, அப்படிச் செய்யாதே” என்று சொல்வார்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: நாம் நன்றாக உணர்ந்து, “ஆம், நான் அதை செய்ய மாட்டேன்” என்று நினைப்போம். அப்போது உங்கள் தாத்தா அல்லது மாமா, “ஜாக்கிரதை, நீ விழுந்து விடப் போகிறாய்” என்று சொல்லலாம், அது நிம்மதியாக இருந்தது.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: கவனிப்பையும் அக்கறையையும் தேடுவது மனித இயல்பு. நான் இங்கு வந்து நீண்ட உரை நிகழ்த்தினால், “இந்தப் பிரதமர் யாரென்று நினைக்கிறார்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, உங்கள் பாடல்களையும், உங்கள் எண்ணங்களையும் கேட்கவும், உங்கள் கிராமத்தைப் பற்றி அறியவும் நான் உண்மையிலேயே விரும்புகிறேன். “அவரும் நம்மைப் போலவே இருக்கிறார். பேசலாம்” என்று உணர வைக்கிறது. பின்னர் எந்த அழுத்தமும் இல்லை, இல்லையா? மனச்சோர்வின் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உண்மையான கவனிப்பு இல்லாதது. இரண்டாவதாக, முந்தைய காலங்களில், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அதிக நேரத்தை செலவு செய்தனர். நான் மாணவனாக இருந்தபோது, என் கையெழுத்து மோசமாக இருந்தாலும், என் ஆசிரியர்கள் எனக்காக மிகவும் கடினமாக உழைத்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதை மேம்படுத்த அவர்கள் உண்மையாகவே முயன்றனர். என்னுடைய கையெழுத்தை விட அவர்கள் தங்கள் கையெழுத்தை மேம்படுத்தியிருக்கலாம்! (சிரிக்கிறார்) ஆனால் அவர்களின் முயற்சிகள் என் இதயத்தைத் தொட்டன – அவர்கள் உண்மையிலேயே அக்கறை காட்டினார்கள்.
மாணவர்: ஐயா, என்னிடம் கடைசியாக ஒரு கேள்வி உள்ளது.
பிரதமர்: ஆம், செல்லுங்கள்!
மாணவர்: பெற்றோரின் அழுத்தம் காரணமாக, பல மாணவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத தொழில் அல்லது பிரிவுகளில் தள்ளப்படுகிறார்கள். அத்தகைய மாணவர்கள் தங்கள் பெற்றோரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் எப்படி தங்கள் ஆர்வத்தைத் தொடர முடியும்?
பிரதமர்: பெற்றோருக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும், ஆனால் அது நிறைவேறவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் நம்பிக்கைகள் பொதுவாக தங்கள் குழந்தை சிறந்து விளங்குவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறது. சில நேரங்களில், அது அவர்களின் சொந்த எண்ணங்கள் கூட இல்லை – அவர்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள். உதாரணமாக, “என் மருமகன் இவ்வளவு சாதித்துவிட்டான்; என் குழந்தை ஏன் அதைச் செய்யவில்லை?”
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: அவர்களின் சமூக அந்தஸ்து பெரும்பாலும் அவர்களுக்கு தடையாக இருக்கும்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: எனவே, பெற்றோருக்கு எனது அறிவுரை இதுதான்—தயவுசெய்து உங்கள் குழந்தையை எல்லா இடங்களிலும் காண்பிக்கும் மாதிரியாக மாற்றாதீர்கள். உங்கள் குழந்தையை அவர்கள் யார் என்பதற்காக நேசித்து அவர்களின் தனித்துவமான பலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகில் திறமை இல்லாத மனிதர் இல்லை. நான் முன்பே குறிப்பிட்டது போல, பள்ளியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்ட குழந்தை ரோபோக்களை உருவாக்குவதில் முதலிடம் பிடித்தது. சில குழந்தைகள் கல்வியை விட விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். கிரிக்கெட்டின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள். படிப்பில் தனக்கு விருப்பமில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் அவருடைய திறனை உணர்ந்துகொண்டனர், அது அவருடைய வாழ்க்கையை மாற்றியது. ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், “நீங்கள் பிரதமராகவோ, அல்லது அமைச்சராகவோ இல்லாமல் இருந்திருந்து, ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நீங்கள் எதை விரும்புவீர்கள்?” “நான் திறன் மேம்பாட்டுத் துறையைத் தேர்ந்தெடுப்பேன்” என்று பதிலளித்தேன்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: திறமைகளுக்கு அபார சக்தி உண்டு. திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தை படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு துறையிலும் வலிமை இருக்கும். என்பதை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கேற்ப குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும். அது தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கும்.
மாணவர்: குழந்தைகளை வற்புறுத்த வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி ஒரு முக்கிய செய்தியையும் கொடுத்துள்ளார். குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும்.
பிரதமர்: அருகில் செல்லலாம்; நீங்கள் அனைவரும் வெகு தொலைவில் அமர்ந்திருக்கிறீர்கள். கொஞ்சம் தியானம் செய்வோம்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: எளிமையான வார்த்தைகளில், தியானத்தை நம் மொழியில் என்ன அழைப்பீர்கள்?
மாணவர்: மனதை ஒருமுகப்படுத்துதல்.
பிரதமர்: மிகச் சரி. இப்போது அந்த நீரூற்றின் சத்தத்தை ஒரு கணம் கேளுங்கள். இதில் ஏதேனும் மெல்லிசை கேட்க முடியுமா?
மாணவர்: பிரதமர் ஐயா எங்களை தியானத்தின் மூலம் வழிநடத்தியது, குறிப்பாக நீரூற்றைக் கவனித்து எங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்படி அவர் எங்களைக் கேட்டது என்னை மிகவும் பாதித்தது. அது உண்மையிலேயே நுண்ணறிவு சார்ந்ததாக இருந்தது.
பிரதமர்: பறவைகளின் சத்தம் கேட்டதா?
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: எப்படி உணர்ந்தீர்கள்?
மாணவர்: ஆச்சரியமாக இருந்தது, ஐயா!
பிரதமர்: ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறு ஒலிகள் இருந்திருக்க வேண்டும். எந்த சத்தம் எங்கிருந்து, எந்த பறவையிலிருந்து வந்தது என்பதை நீங்கள் எப்போதாவது அடையாளம் காண முயற்சித்தீர்களா? அப்படிச் செய்தால், உங்கள் கவனம் இயல்பாகவே கூர்மையாகிவிடும். அந்த ஒலிகளின் வலிமையுடன் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். பதட்டம் பற்றி வைபவ் என்னிடம் முன்பே கேட்டது போல்-என்ன தீர்வு? சுவாசம்!
மாணவர்: ஐயா , பிராணாயாமம்!
பிரதமர்: சரி!
பிரதமர்: ஆம், பிராணாயாமம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வேறு வகையான ஆற்றலை உருவாக்குகிறது. நீங்கள் சுவாசிக்கும்போது, குளிர்ந்த காற்று உங்கள் உடலுக்குள் நுழைவதையும், சூடான காற்று வெளியேறுவதையும் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எந்த நாசி வழியாக சுவாசிக்கிறீர்கள் என்று எப்போதாவது சோதித்திருக்கிறீர்களா?
மாணவர்: ஆமாம்!
பிரதமர்: இரண்டு நாசிகளும் ஒரே நேரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. ஒருவர் விட்டுவிட்டதாக உணரலாம்! நீங்கள் வலது நாசியிலிருந்து இடதுபுறமாக மாற விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் – அதை மாற்றும்படி கட்டளையிட முடியுமா?
மாணவர்: இல்லை!
பிரதமர்: அதற்கு ஒரு நுட்பம் இருக்கிறது. உங்கள் வலது நாசி சுறுசுறுப்பாக இருந்தால், உங்கள் இடது பக்கத்தில் சிறிது கடிக்கவும், உங்கள் விரலால் உங்கள் வலது கன்னத்தில் மெதுவாக அழுத்தவும். படிப்படியாக, சுவாசம் இடது நாசிக்கு மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: ஐந்து வினாடிகளுக்குள், உங்கள் உடலின் கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: இரண்டு நாசியும் சமநிலையில் இருக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் உங்கள் கைகளை மடக்கி சரியாக உட்காரச் சொன்னாலும், இதைச் செய்து சுவாசிக்க முயற்சி செய்யுங்கள் – இரு நாசியும் சுறுசுறுப்பாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
மாணவர்: ஆமாம் ஐயா ! முற்றிலும்!
பிரதமர்: இது வேலை செய்கிறது என்று நான் சொல்கிறேன், நீங்கள் அதை உண்மையாக அனுபவிக்கிறீர்கள்!
மாணவர்: ஆம், ஐயா, அது உண்மையாகவே வேலை செய்கிறது!
மாணவர்: ஐயா தியானம் செய்வது மற்றும் நமது சுவாசத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். நாங்கள் மிகவும் நன்றாக உணர்ந்தோம், எங்கள் மன அழுத்தம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது.
மாணவர்: தியானம் செய்வது எப்படி என்று அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இதன் விளைவாக, நம் மனதை அழுத்தமில்லாமல் வைத்திருக்கிறோம். நம் சுவாசத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் அவர் எங்களிடம் கூறினார். நாம் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது, நமக்கு எந்த மன அழுத்தம் இருந்தாலும், அதைப் பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
பிரதமர்: நன்றாக இருக்கிறது! அனைவரும் நெருங்கி வாருங்கள்! இன்று இது நமது சொந்த குருகுலம்!
மாணவர்: ஐயா , காலையில சிரிப்பு தெரபியும் பண்ணினோம்.
பிரதமர்: ஆஹா! யார் அதிகம் சிரித்தார்கள்?
மாணவர்: ஐயா, நாங்கள் அனைவரும்!
பிரதமர்: என்ன கற்பித்தார்கள்? நீங்கள் அதை எப்படி செய்தீர்கள் என்று எனக்குக் காட்டுங்கள்!
மாணவர்: ஹா-ஹா! ஹோ-ஹோ! ஹா-ஹா! ஹோ-ஹோ! ஹா-ஹா! ஹோ-ஹோ! ஹா-ஹா! ஹோ-ஹோ!
பிரதமர்: நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தினரை இதைச் செய்யச் சொல்லும்போது, அவர்கள் என்ன சொல்வார்கள் – இங்கு வந்த பிறகு உங்களுக்கு பித்து பிடித்து விட்டது என்று! ஆனால் ஒரு காரியத்தைச் செய்யுங்கள் – அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை ஒன்றாகச் செய்யச் செய்யுங்கள். இந்த மகிழ்ச்சியில் ஒரு தனித்துவமான சக்தி இருக்கிறது. மூன்றே நாட்களில் வித்தியாசத்தைக் காண்பீர்கள்; வீட்டில் உள்ள சூழல் முழுவதும் மாறும்.
மாணவர்: கடந்த முறை பிரதமர் ஐயா மேடையில் இருப்பார், மற்றவர்கள் கீழே அமர்ந்திருப்பார் என்று நினைத்தோம். ஆனால் இன்று அது அப்படி இல்லை. நண்பனைப் போலவே பேசிக் கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இங்கு இருப்பது போல் நாங்கள் உணரவில்லை.
மாணவர்: என் பெயர் யுக்தா முகி, ஐயா!
பிரதமர்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
மாணவர்: சத்தீஸ்கர்!
பிரதமர்: சத்தீஸ்கர்!
மாணவர்: ஐயா, சிறு வெற்றிகளில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கேட்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் பற்றி மிகவும் எதிர்மறையாக மாற முனைகிறேன்.
பிரதமர்: உங்களை நீங்களே எதிர்மறையாக நினைப்பதாலா அல்லது மற்றவர்கள் உங்களை அப்படி உணர வைப்பதா?
மாணவர்: எனது 10 ஆம் வகுப்பு தேர்வில் 95% எதிர்பார்த்தேன் ஆனால் 93% கிடைத்தது. அந்த 2% மதிப்பெண்களுக்காக நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன்.
பிரதமர்: நான் அதை ஒரு வெற்றியாகக் கருதுகிறேன். உங்கள் இலக்கு எட்டக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும், ஆனால் உங்கள் பிடிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். முதலில், உங்கள் உண்மையான மதிப்பெண்ணை விட 2 புள்ளிகள் அதிகமாக இலக்கை நிர்ணயித்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன். அது ஒரு மோசமான விஷயம் அல்ல. அடுத்த முறை 97 இலக்கு நிர்ணயித்து 95 எடுத்தால் பெருமைப்பட வேண்டும். முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த இலக்கை 97, 99 அல்லது 100க்கு பதிலாக 95 இல் அமைப்பதன் மூலம் நீங்கள் உங்களை நம்புகிறீர்கள். அதே சூழ்நிலையை வித்தியாசமாகவும் நேர்மறையாகவும் பார்க்க நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்.
மாணவர்: ஐயா, தேர்வு நேரத்தில், பல மாணவர்கள் பொதுத் தேர்வுகளைக் கண்டு பயப்படுவார்கள், பின்னர் அவர்கள் தங்கள் உடல்நிலையைக் கவனிப்பதில்லை.
பிரதமர்: இந்த பிரச்சனைக்கு மாணவர்களை விட அவர்களது குடும்பத்தாரே அதிக காரணிகளாக உள்ளனர். ஓவியம் வரைவதில் வல்லவர் என்பதால் ஒரு குழந்தை கலைஞராக விரும்பலாம், ஆனால் அவர் பொறியியலாளராகவோ அல்லது மருத்துவராகவோ ஆக வேண்டும் என்று குடும்பம் வலியுறுத்துகிறது.
மாணவர்: ஆமாம் ஐயா .
பிரதமர்: இது குழந்தையை தொடர்ந்து மன அழுத்தத்தில் வைத்திருக்கும். பெற்றோர்களுக்கு எனது முதல் வேண்டுகோள் என்னவென்றால், அவர்களின் குழந்தைகள், அவர்களின் ஆர்வங்கள் மற்றும் திறன்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும். முடிந்தால், அவர்களை ஆதரிக்கவும். உங்கள் பிள்ளை விளையாட்டில் ஆர்வம் காட்டினால், விளையாட்டைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்; அவர் உந்துதல் பெறுவார். இரண்டாவதாக, ஆசிரியர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் சிறந்த மாணவர்கள் மட்டுமே கவனத்தையும் பாராட்டையும் பெறும் சூழலை உருவாக்குகிறார்கள். மீதமுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது பின்னால் உட்காரச் சொல்கிறார்கள், இது அவர்களை மனச்சோர்வடையச் செய்கிறது. மாணவர்களிடையே ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும் என்பதே ஆசிரியர்களுக்கு எனது வேண்டுகோள். மாணவர்கள் மத்தியில் அவரை விமர்சிக்காதீர்கள். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால், அவரை ஒதுக்கி வைக்கவும். நேர்மறையான வலுவூட்டலுடன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஊக்குவிக்கவும். “நீங்க ரொம்ப நல்லவர். நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.” மாணவர்களும் சிந்திக்க வேண்டும், “நான் கடினமாக உழைக்கிறேன், எனது முடிவுகளை மேம்படுத்துவேன், கடந்த முறையை விட சிறப்பாக செயல்படுவேன். எனது நண்பர்களை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.” ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை இல்லை.
மாணவர்: எனது பள்ளியில் மூத்த மாணவனாக, எனது இளையவர்களை அவர்களின் தேர்வுகள் அல்லது கலாச்சார மற்றும் இலக்கியப் போட்டிகளுக்கு நான் அடிக்கடி ஊக்குவிக்கிறேன். ஆனால் சில சமயங்களில், என்னால் என்னை ஊக்குவிக்க முடியவில்லை.
பிரதமர்: உங்களை ஒருபோதும் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள் அல்லது அளவுக்கு மீறி சிந்திக்காதீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதாகவும், ஆனால் உங்கள் உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் தோன்றுகிறது. உங்களை ஊக்குவிக்க யாரோ ஒருவர் தேவை—ஒருவேளை குடும்ப உறுப்பினர் அல்லது மூத்தவராக இருக்கலாம். மேலும், சிறிய இலக்குகளுடன் உங்களுக்கு சவால் விடுங்கள். உதாரணமாக, இன்று 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட முடிவு செய்தேன். அருணாச்சலப் பிரதேசத்தின் மலைகள் வழியாகச் சென்றாலும், அதை முடித்தவுடன், “இன்று நான் இதை நிறைவேற்றிவிட்டேன்” என்ற எண்ணத்தில் முழு நாளையும் செலவிடுங்கள். தன்னம்பிக்கையை வளர்க்க இதுபோன்ற சிறிய பரிசோதனைகள் உதவுகின்றன. உங்கள் கடந்த காலத்தை தோற்கடிப்பதில் எப்பொழுதும் வேலை செய்யுங்கள் – நிகழ்காலத்தில் முழுமையாக வாழுங்கள், உங்கள் கடந்த காலம் கடந்துவிட்டதாக உணருங்கள்.
மாணவர்: சுய இலக்குகளை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். நீங்கள் உத்வேகத்துடன் இருக்க வேண்டும், அதைச் செய்ய பல வழிகள் உள்ளன. உதாரணமாக, உங்களுக்காக சிறிய, அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும், அவற்றை நீங்கள் அடையும்போது, எப்போதும் உங்களுக்கு வெகுமதி அளிக்கவும். இந்த அணுகுமுறை என்னை பல வழிகளில் தூண்டியது.
மாணவர்: ஐயா, உங்களை ஊக்குவிப்பவர் யார்?
பிரதமர்: என்னை ஊக்குவிப்பவர்கள் நீங்கள் அனைவரும். உதாரணமாக, தேர்வு குறித்த கலந்துரையாடல் பற்றி அஜய் ஒரு பாடலை எழுதினார். நான் புத்தகம் எழுதியிருந்தாலும், அஜய் போன்ற ஒருவர், அவருடைய கிராமத்தில் உட்கார்ந்து, கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார். அது என்னை மேலும் மேலும் செய்ய தூண்டுகிறது. நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தால், உந்துதலின் பல ஆதாரங்கள் உள்ளன.
மாணவர்: இது ஆழமான பிரதிபலிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது – எதையாவது கேட்பது, அதைப் புரிந்துகொள்வது மற்றும் உண்மையிலேயே உள்வாங்குவது. எனினும் என்னால் அதைச் செய்ய இயலவில்லை.
பிரதமர்: நீங்கள் எதையாவது கேட்டீர்கள், பின்னர் அதைப் பற்றி யோசித்தீர்கள் – நீங்கள் சரியாக எதைப் பற்றி சிந்தித்தீர்கள்? அவர்களின் வார்த்தைகளில், அவர்களின் செய்தி? உதாரணமாக, அதிகாலையில் எழுந்திருக்குமாறு யாராவது உங்களுக்கு அறிவுறுத்தினால், சீக்கிரம் எழுந்திருப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். ஆனால், அதைச் செயல்படுத்தாமல் மீண்டும் உறங்கச் சென்றால், அறிவுரையை உண்மையாக உள்வாங்கிக் கொண்டீர்களா? நீங்கள் உங்களை ஒரு ஆய்வகம் போலக் கருதி, உங்கள் பழக்கங்களை மறுவடிவமைக்க முயலும்போதுதான் அகமயமாக்கல் நிகழ்கிறது. பெரும்பாலான மக்கள் அவர்களுடன் போட்டியிட மாட்டார்கள், அவர்கள் மற்றவர்களுடன் போட்டியிடுகிறார்கள், பெரும்பாலும் தங்களை விட பலவீனமானவர்கள், மற்றும் தவறான திருப்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள், “பாருங்கள், அவர் 30 மதிப்பெண்கள் எடுத்தார்; அவர் கடினமாக உழைத்தார், எனக்கு 35 கிடைத்தது! ஆனால் தன்னுடன் போட்டியிடுபவர்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
மாணவர்: உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கிய ஒருவர் இருக்கிறார். தனது போராட்டங்களை வலிமையாக மாற்றி, மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக இரவும் பகலும் அயராது உழைக்கும் ஒருவர் உண்டு. நமது பிரதமராக, நம்மை ஊக்குவிக்கும், அறிவுரை வழங்கி, தனது தொடர்புகளின் மூலம் நம்மை மகிழ்ச்சியில் நிரப்பும் ஒரு நபர் இருக்கிறார். அந்த அன்புக்குரியவர் வேறு யாருமல்ல, திரு நரேந்திர மோடி திரு அவர்கள்தான். நன்றி, ஐயா!
பிரதமர்: நன்றி, மிக்க! நன்றி!
மாணவர்: ஐயா, என் கேள்வி என்னவென்றால், நான் தேர்வு எழுதச் செல்லும் போதெல்லாம், நான் தோல்வியடைந்தால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று நான் எப்போதும் கவலைப்படுவேன்? தோல்வி பயத்தை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
பிரதமர்: பள்ளியில், 10 அல்லது 12ம் வகுப்பில், 30-40% மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கும்?
மாணவர்: அவர்கள் மீண்டும் முயற்சி செய்கிறார்கள்.
பிரதமர்: மீண்டும் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
பிரதமர்: பாருங்கள், வாழ்க்கை அங்கு நின்றுவிடாது. தேர்வில் மட்டும் வெற்றி பெற வேண்டுமா அல்லது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வழி, உங்கள் தோல்விகளை உங்கள் ஆசானாக மாற்றுவது. கிரிக்கெட் மேட்ச்களில், வீரர்கள் நாள் முழுவதையும் சரிபார்த்து, அவர்களின் தவறுகளைப் பார்த்து, என்னென்ன மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் தெரியுமா? உங்கள் தோல்விகளிலும் அதையே செய்து அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? இரண்டாவதாக, வாழ்க்கை என்பது தேர்வுகள் மட்டுமல்ல. அதை மொத்தமாகப் பார்க்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனியுங்கள். கடவுள் அவர்களுக்கு சில விஷயங்களைக் கொடுக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்களின் பலமாக மாறும் அசாதாரண திறன்களை வழங்குவதன் மூலம் கடவுள் பெரும்பாலும் ஈடுசெய்கிறார். அதுபோலவே, நம் அனைவருக்குள்ளும், கடவுள் குறைபாடுகள் மற்றும் தனித்துவமான குணங்கள் இரண்டையும் வைத்திருக்கிறார்.
மாணவர்: ஆமாம் ஐயா !
பிரதமர்: உங்களுக்குள் இருக்கும் அந்த தனித்துவமான குணங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துங்கள். அப்போது, உங்கள் பட்டம், எங்கு படித்தீர்கள், பத்தாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள். என்ன முக்கியம் என்றால்- உங்கள் மதிப்பெண்கள் பேசுகிறதா அல்லது உங்கள் வாழ்க்கை பேசுகிறதா?
மாணவர்: வாழ்க்கை ஐயா !
பிரதமர்: எனவே, வாழ்க்கை பேச வேண்டும்.
மாணவர்: நான் அரோஹி மாடல் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த அஜய். இந்த நாட்களில் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, ஆனால் சில நேரங்களில் நாம் அதை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஐயா, தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான உங்கள் வழிகாட்டுதலை நான் விரும்புகிறேன்.
பிரதமர்: முதலில், நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள், குறிப்பாக நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் தொழில்நுட்பம் மிகவும் பரவலாகவும், தாக்கமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் ஒரு காலகட்டத்தில் நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். தொழில்நுட்பத்தை விட்டு ஓட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், நீங்கள் முடிவு செய்ய வேண்டும் — நீங்கள் திசையில்லாமல் முடிவில்லாத ரீல்களைப் பார்க்கிறீர்களா அல்லது ஏதாவது ஒன்றில் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியானால், அதை ஆழமாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யுங்கள். அப்போது தொழில்நுட்பம் பலமாக மாறும், அஞ்சுவதற்கு புயலாக அல்ல. இது உங்களை வேரோடு பிடுங்கும் புயல் அல்ல. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைச் செய்யும் நபர்களைப் பற்றி சிந்தியுங்கள் – அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக வேலை செய்கிறார்கள். தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், கற்றுக்கொள்வதும், சிறந்த முறையில் பயன்படுத்துவதும் நமது இலக்காக இருக்க வேண்டும்.
மாணவர்: ஐயா, எனக்கு ஒரு கேள்வி உள்ளது. எந்த ஒரு பணிக்கும் நம்மால் முடிந்ததை எப்படி கொடுக்க முடியும்?
பிரதமர்: நம்மால் முடிந்ததைச் செய்ய நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும், நேற்றையதை விட சிறப்பாகச் செய்வதே நமது சிறந்ததைக் கொடுப்பதற்கான முதல் விதி.
மாணவர்: ஐயா, எந்த பிரிவைத் தேர்வு செய்வது அல்லது எதைப் பின்பற்றுவது போன்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்று எங்கள் குடும்பத்தினர் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். அவர்களின் அறிவுரைகளை நாம் பின்பற்ற வேண்டுமா அல்லது நம்மையே கேட்க வேண்டுமா?
பிரதமர்: நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அவர்கள் ஏதாவது பரிந்துரைக்கும்போது, மரியாதையுடன் ஒப்புக்கொண்டு, எப்படித் தொடரலாம், தேவையான தகவலை எங்கே பெறுவது, என்ன உதவி வழங்கலாம் என்று அவர்களிடம் கேளுங்கள். பின்னர், உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் மெதுவாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். படிப்படியாக, அவர்கள் தங்கள் மனதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் மற்றும் உங்கள் முன்னோக்கைப் புரிந்துகொள்வார்கள்.
மாணவர்: என் கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதிலளித்ததற்கும், எதிர்மறை எண்ணங்களை மனதில் நுழைய விடாமல் அமைதியாக இருப்பது, நேர்மறையாக இருப்பது போன்ற பல மதிப்புமிக்க பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இது ஒரு அற்புதமான அனுபவம். மிக்க நன்றி!
மாணவர்: இப்போதெல்லாம், பல மாணவர்கள் பரீட்சையின் போது தங்கள் தாளை சரியான நேரத்தில் முடிக்க முடியாத ஒரு சிக்கலை எதிர்கொள்கின்றனர், இதனால் மன அழுத்தம் மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. ஐயா, இப்படிப்பட்ட அழுத்தங்களையும் சூழ்நிலைகளையும் எப்படிச் சமாளிக்க முடியும்?
பிரதமர்: முந்தைய தேர்வுத் தாள்களை முழுமையாகப் பயிற்சி செய்வதே முதல் தீர்வு. நீங்கள் நன்றாக பயிற்சி செய்தால், சுருக்கமான பதில்களை எழுத கற்றுக்கொள்வீர்கள், நேரத்தை மிச்சப்படுத்துவீர்கள். பின்னர், தேர்வின் போது கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஆரம்பத்தில், உங்களுக்கு நன்கு தெரிந்தவற்றில் கவனம் செலுத்துங்கள், பின்னர் மிதமானவற்றுக்குச் செல்லுங்கள், இறுதியாக, சவாலானவற்றை முயற்சிக்கவும். ஒரு கேள்வி வேலை செய்யவில்லை என்றால், அதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் அடிக்கடி செய்யும் ஒரு தவறு, தங்களுக்குத் தெரியாதவற்றில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அவர்கள் செய்வதற்கு குறைந்த நேரத்தை ஒதுக்குவது. சில சமயங்களில் பதில் தெரிந்தால் மிக நீண்ட பதிலை எழுதி கணிசமான நேரத்தை செலவிடுகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும்.
மாணவர்: நான் பி.வி.ஆர் பாலிகா அங்காடி பத்ஷாலாவில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் ஆந்திராவை சேர்ந்தவன். உங்களுடன் இந்த அழகான இடத்தில் இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: மாறிவரும் தட்பவெப்ப நிலைகளைப் பற்றி நாங்கள் எங்கள் புத்தகங்களில் படித்து வருகிறோம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
பிரதமர்: நீங்கள் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள், மேலும் எனது நாட்டின் குழந்தைகளும் தட்பவெப்பநிலையைப் பற்றி கவலைப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் பெரும்பாலான பகுதிகளில், வளர்ச்சியானது நுகர்வோர் கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது – ஒருவரின் தனிப்பட்ட இன்பத்திற்காக அனைத்தும் உள்ளது என்ற மனநிலை. யாருக்காவது நல்ல மரச்சாமான்கள் வேண்டுமானால், 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் நிலையான மின்சாரத்தை விரும்பினால், 24×7 விளக்குகளை எரிய வைக்க தேவையான அளவு நிலக்கரியை எரிப்பார்கள். இதனால் இயற்கைக்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. நமது கலாச்சாரம் இயற்கையை சுரண்டுவது அல்ல.
எனக்கு வாழ்க்கை – சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்று ஒரு பணி உள்ளது. நமது வாழ்க்கை முறை இயற்கையைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். நம் கலாச்சாரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலையில் தரையில் கால் வைக்கும் முன் பூமி அன்னையிடம் மன்னிப்பு கேட்க கற்றுக்கொடுக்கிறார்கள், அவளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை ஒப்புக்கொள்கிறார்கள். நாம் மரங்களை வணங்குகிறோம், அவற்றைச் சுற்றி திருவிழாக்கள் கொண்டாடுகிறோம், நதிகளை தாயாக கருதுகிறோம். இந்த மதிப்புகள் நம்மை பெருமையுடன் நிரப்ப வேண்டும். இந்தியா தற்போது ‘தாய் பெயரில் ஒரு மரம்’ என்ற ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சாரத்தை நடத்தி வருகிறது – இரண்டு தாய்மார்களுக்கு அஞ்சலி: ஒருவர் நம்மைப் பெற்றெடுத்தவர், மற்றவர் நமக்கு வாழ்க்கையை வழங்குபவர். உங்கள் தாயின் நினைவாக ஒரு மரத்தை நட்டு, அதை அவரது உயிருள்ள நினைவூட்டலாக பராமரிக்கவும். இந்த மரம் எந்த விலையிலும் வளர வேண்டும். நாம் அதை கவனித்துக்கொள்ள வேண்டும். என்ன நடக்கும்? மக்கள் பெரிய அளவில் மரங்களை நடுவார்கள். இந்த பொறுப்பு மற்றும் உரிமை உணர்வு பெரிய அளவில் இயற்கையைப் பாதுகாக்க உதவும்.
மாணவர்: இயற்கை நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம். மரங்கள் பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும் என்பதால், நாம் அதில் ஈடுபட வேண்டும். நாம் இயற்கையை வளர்க்க வேண்டும்.
பிரதமர்: எல்லோரும் தங்கள் மரங்களை நடுவதற்கு தயாராகி விட்டார்கள் போல! மேலே சென்று அவற்றை நடவும். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஒரு உதவிக்குறிப்பைப் பகிர்ந்து கொள்கிறேன். மரத்தின் அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட மண் பானையை வைக்கலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அதை நிரப்ப வேண்டும், மேலும் குறைந்த நீரைப் பயன்படுத்தினால் மரம் நன்றாக வளரும். இது எங்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைமுறையாகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மாணவர்: நன்றி, ஐயா!
மாணவர்: ஐயா, இங்கு வந்து இந்த அருமையான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி.
பிரதமர்: அப்படியானால், இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது எது?
மாணவர்: சுற்றுச்சூழல் பற்றிய விவாதம் ஐயா !
பிரதமர்: சுற்றுச்சூழல்!
மாணவர்: ஆமாம் ஐயா ! நீங்கள் உண்மையிலேயே எங்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். இந்த நாள் முழுவதும் மறக்கமுடியாததாக இருக்கும், மேலும் தேர்வுகள் இனி எங்களுக்கு அழுத்தமாகத் தெரியவில்லை.
பிரதமர்: மதிப்பெண்கள் குறைவாக வந்தாலும், தேர்வுகள் குறித்து மன அழுத்தம் இல்லை?
மாணவர்: சரியாகச் சொன்னீர்கள் ஐயா – வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் முக்கியம்.
மாணவர்: ஐயா, இப்போது தேர்வுகள் எங்களைக கண்டு அஞ்ச ஆரம்பிக்கும்!
பிரதமர்: அருமை! அனைவருக்கும் மிக்க நன்றி!
மாணவர்: நன்றி, ஐயா!
பிரதமர்: இப்போது, வீட்டிலேயே ஆதிக்கம் செலுத்த வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், நமக்கு இப்போது நேரடி இணைப்பு உள்ளது! உங்கள் ஆசிரியர்களையும் பயமுறுத்தாதீர்கள்!
மாணவர்: இல்லை, ஐயா! விடைபெறுகிறேன் ஐயா!
பொறுப்புத் துறப்பு: இது மாணவர்களுடனான பிரதமரின் உரையாடலின் தோராயமான மொழிபெயர்ப்பு, அசல் உரையாடல் இந்தியில் இருந்தது.
*****
Had a wonderful interaction with young students on different aspects of stress-free exams. Do watch Pariksha Pe Charcha. #PPC2025. https://t.co/WE6Y0GCmm7
— Narendra Modi (@narendramodi) February 10, 2025