Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேஜு விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் வரவேற்பு


தேஜு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இதனை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று திறந்து வைத்தார்.

“2022 நவம்பரில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அவர்களால் டோனி போலோ விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், தேஜு விமான நிலையத்தை  தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, நமது மாநிலத்தின் இணைப்பை  மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று எக்ஸ் சமூக ஊடகத்  தளத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு  தெரிவித்தார்.  இதற்கு பதில் அளித்த பிரதமர் கூறியதாவது:

“அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த  வடகிழக்குப் பகுதிகளுக்கும் இணைப்புக்கான ஒரு அற்புதமான செய்தி.”

***