Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து


தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வீரர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள பிரதமர்அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல்உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் விழா குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்ற புகழ்பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறதுஅவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல்உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளனர்

(Release ID: 1994629)

ANU/SM/PLM/KPG/KRS