Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரை


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) கேடட்டுகளின் வாழ்க்கை சீருடை, அணிவகுப்பு மற்றும் முகாம்களை தாண்டியது என்றார். என்.சி.சி. அனுபவம் கேடட்டுகளுக்கு லட்சிய அனுபவத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவர் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை கேடட்டுகளின் திரளணியில் உரையாற்றினார்.

இந்தியாவை குறித்த பார்வை, அதன் சக்தி மற்றும் அதன் வேற்றுமை ஆகியவற்றை இந்த கேடட்டுகளுக்கு என்.சி.சி.யின் அனுபவம் அளிக்கும் என்றும் அவர் கூறினார். மன்னர்கள், அரசாளுபவர்கள் மற்றும் அரசாங்கங்களால் ஒரு நாடு உருவாகுவதில்லை, நாடு, அதன் குடிமக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பண்டிதர்கள், விஞ்ஞானிகள், பணியாளர்சக்தி மற்றும் துறவிகளால் உருவாக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

என்.சி.சி. கேடட்டுகள் எதிர்கால இந்தியாவிற்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன், நமது இளைஞர்களின் சக்திக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளனர் என்றும் அவர் பாராட்டினார்.

இந்தியாவை தூய்மைப்படுத்துதலை முன்னோக்கி எடுத்து செல்ல என்.சி.சி. பங்காற்றுவதற்காக அவர் பாராட்டினார். டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.