Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படை ஊர்வலத்தில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை ஊர்வலத்தில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை ஊர்வலத்தில் பிரதமர் உரை

தேசிய மாணவர் படை ஊர்வலத்தில் பிரதமர் உரை


 

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை ஊர்வலத்தில் உரையாற்றினார்.

எப்போது தேசிய மாணவர் படை மாணவர்களுடன் தான் இருக்கும்போது, கடந்த கால நிகழ்வுகளில் தான் நிறைந்து போவதாகக் கூறினார்

கடந்த ஓராண்டில், தூய்மை பாரத இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு முக்கிய முயற்சிகளுடன் தேசிய மாணவர் படை வீரர்கள் பங்கேற்றுள்ளதற்காக அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கேரளா வெள்ளத்தின்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவர்களது பங்கு மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

இன்று, உலகம் முழுவதும் இந்தியாவை ஒளிரும் நட்சத்திரமாக உற்று நோக்குகிறது என பிரதமர் தெரிவித்தார். இந்தியா வெறும் திறன்களை மட்டும் பெறவில்லை,  அத்திறன்களை நிறைவேற்றியும் வருகிறது என்ற கருத்து தற்போது உள்ளது என்றார் அவர்.

பொருளாதாரம் அல்லது பாதுகாப்பு, எதுவாக இருப்பினும், இந்தியாவின் திறன்கள் விரிவடைந்துள்ளன என்றார் அவர். மேலும், இந்தியா அமைதிக்கான ஆதரவாளராக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பிற்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியா தயங்காது என்றார் அவர்.  கடந்த நான்கரை ஆண்டுகளில் பாதுகாப்பிற்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அணுசக்தி முனையத்தை உருவாக்கிய வெகு சில நாடுகளில் தற்போது இந்தியாவும் உள்ளது என்று அவர் கூறினார். தேசம் பாதுகாப்புடன் இருந்தால்தான், இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.‘

அவர் மாணவர்களின் கடுமையான உழைப்பினை பாராட்டினார். அவர்களில் பலர் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர், தேசிய மாணவர் படையை சேர்ந்த பல வீரர்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளனர் என்றார். இது தொடர்பாக, புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை ஹிமா தாஸ் பற்றி அவர் குறிப்பிட்டார். கடின உழைப்பு மற்றும் திறமை ஆகியவையே வெற்றியை தீர்மானிப்பவைகளாகும் என்றார் அவர். மிக முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) என்ற கலாச்சாரத்தை மாற்றி இ.பி.ஐ. – “ஒவ்வொரு நபரும் முக்கியமானவர்” என்பதை இடம் பெறச் செய்வதற்காக அரசு முயன்று வருகிறது என்றார். மாணவர்கள் அனைத்து விதமான தீமைகளையும் தவிர்த்து, சுய மற்றும் நாட்டின் நன்மைக்காக உழைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கிடவும், பணியிடங்களில் அவர்களது எண்ணிக்கையை உயர்த்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். முதல்முறையாக இந்திய விமானப் படையில் பெண்கள், போர் விமானிகளாக உருவாகியுள்ளனர் என்றார் அவர்.

புதிய இந்தியாவில் ஊழல் ஒரு பகுதியாக இருக்காது என பிரதமர் உறுதிபடக் கூறினார். ஊழலில் ஈடுபடுபவர்களை விட்டுவிட மாட்டோம் என்றார் அவர். அரசின் நலத் திட்டங்கள் குறித்து அதிகளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என வீரர்களை வலியுறுத்தினார். எதிர்வரவுள்ள தேர்தல்களின்போது அதிகளவில் வாக்களிக்க இளைஞர்களை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சமீபகாலத்தில் தில்லி நகரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருந்தலைவர்களுடன் தொடர்புடைய பல்வேறு புதிய இடங்களுக்கு மாணவர்கள் சென்றிருக்க இயலும் என்றார் அவர். இது தொடர்பாக, செங்கோட்டையில் உள்ள கிராந்தி மந்திர் மற்றும் அலிப்பூர் சாலையில் உள்ள டாக்டர்.பீம்ராவ் அம்பேத்காரின் மஹாபரிநிர்வான ஸ்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்டர். இந்த இடங்களுக்குச் செல்லும் ஒருவர், மக்களுக்காக உழைப்பதற்கான புதிய சக்தியை நிரம்பப் பெறுவார் என்றார் அவர்.