Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் உள்ள மஞ்சள் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்: பிரதமர்


தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டதைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு, மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றுக்கான சிறந்த வாய்ப்புகளை இது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக நாடு முழுவதும் கடினமாக உழைக்கும் நமது மஞ்சள் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தி!

இது மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு, மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கான சிறந்த வாய்ப்புகளை உறுதி செய்யும். இது விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சீராகப் பயனளிக்கும்.”

 

***

PLM/DL