நமஸ்காரம்!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பல்வேறு மாநிலங்களின் ஆளுனர்களே, முதலமைச்சர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திருமதி.ஸ்மிருதி இராணி, திருமதி.தர்ஷனா ஜர்தோஷ், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திமுதி.ரேகா சர்மா, அனைத்து மாநில மகளிர் ஆணையங்களின் தலைவர்களே, உறுப்பினர்களே, மகளிர் சங்கங்களின் தன்னார்வலர்களே, விருந்தினர்களே, சககோதர, சகோதரிகளே!
தேசிய மகளிர் ஆணையத்தின் 30-வது நிறுவன தின விழாவில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனிநபரின் வாழ்க்கையாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் சரி, 30 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்து மிகவும் முக்கியமானது. புதிய சக்தியுடன் புதிய பொறுப்புகளை நோக்கி முன்னேறிச் செல்லும் காலமிது. தேசிய மகளிர் ஆணையமும் அதே வழியில் தான் பயணிக்கிறது என நான் நம்புகிறேன். இந்த அமைப்புக்கு மேலும் வலிமைய, மேலும் பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய ஆற்றல் புகுத்தப்பட வேண்டும். மாறிவரும் இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. எனவே, தேசிய மகளிர் ஆணையத்தின் பங்களிப்பையும் விரிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம். அதுபோன்ற சூழலில், நாட்டிலுள்ள அனைத்து மகளிர் ஆணையங்களும், தங்களது நோக்கத்தை விரிவுபடுத்துவதுடன், அந்தந்த மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு புதிய வழி காட்ட வேண்டும்.
நண்பர்களே,
சுதந்திரப் பெருவிழா காலத்தில், புதிய இந்தியாவைப் படைக்க உறுதியேற்பதே, நம் முன்பாக உள்ள கடமை. தற்போது, ’அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் மற்றும் அனைவரும் முயற்சிப்போம்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு தற்போது பணியாற்றி வருகிறது. அனைத்து வாய்ப்புகளும், அனைவருக்கும் சமமாக கிடைத்தால் மட்டுமே, அனைவருக்குமான வளர்ச்சி என்ற இந்த குறிக்கோளை நாடு அடைய முடியும். முன்பு வர்த்தகம் என்பது, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆண்களை மட்டுமே சார்ந்திருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மை யாதெனில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவின் வலிமை நமது சிறுதொழில் நிறுவனங்கள் தான், அவை தான் தற்போது குறு,சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் தொழிலகங்களில் பெண்களின் பங்களிப்பு, ஆண்களால் எந்தளவுக்கு இயலுமோ அந்த அளவிற்கு உள்ளது.
உதாரணத்திற்கு, ஜவுளித்தொழில், அல்லது மண்பாண்டம் தயாரித்தல் அல்லது விவசாயம் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி; போன்ற பல தொழில்களில், பெண்களின் ஆற்றலும் பெண்களின் திறமையும் முக்கியமானதாக உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தத் தொழிற்சாலைகளின் வலிமை அங்கீகரிக்கப்படவில்லை. பழமையான சிந்தனை உடையவர்கள், பெண்களின் திறமையை வீட்டு வேலையாக மட்டுமே கருதி வந்தனர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, இதுபோன்ற பழமைவாத அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் அதைத்தான் செய்து வருகிறது. தற்சார்பு இந்தியா இயக்கமும், பெண்களின் போட்டித்திறனை, நாட்டின் வளர்ச்சியுடன் இணைப்பதாக உள்ளது. அதன் பலனை தற்போது நாம் கண்கூடாகக் காண்கிறோம். முத்ரா திட்டத்தின் 70 சதவீத பயனாளிகள் பெண்களாக உள்ளனர். இத்திட்டத்தின் உதவியால், கோடிக்கணக்கான பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கி, மற்றவர்களுக்கும் வேலை வழங்கி வருகின்றனர். ஆறு–ஏழு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பது நாட்டிலுள்ள பெண்களின் வலிமையைக் காட்டுகிறது. 2016-க்குப் பிறகு, 56 துறைகளில் 60,000-க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது நம் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியது. இந்த நிறுவனங்களின் இயக்குனர்களாக இருப்பவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
நண்பர்களே,
புதிய இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகளிர் ஆணையங்கள் இந்தப் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்து சமுதாயத்தில் தொழில் முனைவோராக திகழ இயன்றவரை பாடுபட வேண்டும். பெண்களின் தனித்துவமான பணிகள் காரணமாக, இந்தாண்டு 34 பெண்கள், பத்ம விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்தளவுக்கு பத்ம விருதுகள் பெண்களுக்கு வழங்கப்பட்டதில்லை.
அதேபோன்று, இந்தியாவின் தவப்புதல்விகள், ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வென்று விளையாட்டு உலகிலும் அற்புதங்களைப் படைத்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பெரும் போரிலும், நமது செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பெண் விஞ்ஞாணிகள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
நண்பர்களே,
நாட்டில் ஒரு காலத்தில், பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது குறுகிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த வரம்பிற்குள் வரவே இல்லை. இந்த பாகுபாட்டைக் களைய நாங்கள் பாடுபட்டு வருகிறோம். தற்போது, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக, 9கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு, புகையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளிலேயே நவீன கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கான்கிரீட் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பேறுகால உதவித்தொகைகள், மற்றும் மான்ய உதவிகள், கோடிக்கணக்கான பெண்களுக்கு அவர்களது ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம், நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
தற்போது நாட்டிலுள்ள பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மாணித்துக் கொள்வதுடன், நாட்டின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டுகின்றனர். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம் காரணமாக, பள்ளிக்கூடங்களில், படிப்பை பாதியிலேயே கைவிடும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், இணையக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி உதவி எண் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு, சமுதாயத்திற்கு தொடர்ந்து வலுசேர்க்கும்.
இந்த நம்பிக்கையுடன், இந்த நிறுவன நாள் விழாவில் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
நன்றி!
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793875
—–
Speaking at the 30th NCW Foundation Day programme. https://t.co/JYmLQaRDU9
— Narendra Modi (@narendramodi) January 31, 2022
राष्ट्रीय महिला आयोग की स्थापना के 30 वर्ष होने पर बहुत-बहुत बधाई।
— PMO India (@PMOIndia) January 31, 2022
30 वर्ष का पड़ाव, चाहे व्यक्ति के जीवन का हो या फिर किसी संस्था का, बहुत अहम होता है।
ये समय नई जिम्मेदारियों का होता है, नई ऊर्जा के साथ आगे बढ़ने का होता है: PM @narendramodi
आज बदलते हुए भारत में महिलाओं की भूमिका का निरंतर विस्तार हो रहा है।
— PMO India (@PMOIndia) January 31, 2022
इसलिए राष्ट्रीय महिला आयोग की भूमिका का विस्तार भी आज समय की मांग है।
ऐसे में, आज देश के सभी महिला आयोगों को अपना दायरा भी बढ़ाना होगा और अपने राज्य की महिलाओं को नई दिशा भी देनी होगी: PM @narendramodi
सदियों से भारत की ताकत हमारे छोटे स्थानीय उद्योग रहे हैं, जिन्हें आज हम MSMEs कहते हैं।
— PMO India (@PMOIndia) January 31, 2022
इन उद्योगों में जितनी भूमिका पुरुषों की होती है, उतनी ही महिलाओं की होती है: PM @narendramodi
पुरानी सोच वालों ने महिलाओं के स्किल्स को घरेलू कामकाज का ही विषय मान लिया था।
— PMO India (@PMOIndia) January 31, 2022
देश की अर्थव्यवस्था को आगे बढ़ाने के लिए इस पुरानी सोच को बदलना जरूरी है।
मेक इन इंडिया आज यही काम कर रहा है।
आत्मनिर्भर भारत अभियान महिलाओं की इसी क्षमता को देश के विकास के साथ जोड़ रहा है: PM
न्यू इंडिया के ग्रोथ साइकल में महिलाओं की भागीदारी लगातार बढ़ रही है।
— PMO India (@PMOIndia) January 31, 2022
महिला आयोगों को चाहिए कि समाज की entrepreneurship में महिलाओं की इस भूमिका को ज्यादा से ज्यादा पहचान मिले, उसे promote किया जाए: PM @narendramodi
पिछले 7 सालों में देश की नीतियाँ महिलाओं को लेकर और अधिक संवेदनशील हुई हैं।
— PMO India (@PMOIndia) January 31, 2022
आज भारत उन देशों में है जो अपने यहां सबसे अधिक मातृत्व अवकाश देता है।
कम उम्र में शादी बेटियों की पढ़ाई और करियर में बाधा न बने, इसके लिए बेटियों की शादी की उम्र को 21 साल करने का प्रयास है: PM