Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து


தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தையொட்டி அப்படையின் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது; “தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.  மிகவும் சவாலான தருணங்களில் மக்களுக்கு சிறந்த சேவையை அவர்கள் வழங்குகின்றனர்.  அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.  நவீன பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை நுணுக்கங்களை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது”.

***