Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து


என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உதய தினத்தை முன்னிட்டு, நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாட்டுன் செயல்படும் அனைத்து என்எஸ்ஜி வீரர்களுக்கும் இந்தியா வணக்கம் செலுத்துகிறது. அச்சுறுத்தல்களிலிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அந்தப் பணி வீரத்தையும் சிறந்த தொழில்முறைத் தன்மையையும் உள்ளடக்கியதாகும்.”

PLM/KR

Release ID: 2065220

 

 

 

***