Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் வரும் உச்சநீதிமன்றத்திற்குப் பிரதமர் பாராட்டு


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் நீதி வழங்கும் முறையை மேம்படுத்தும் என்று திரு. மோடி கூறினார்.

இது குறித்து ஏ.என்.ஐ.யின் எக்ஸ் சமூக வலைதளப்பதிவிற்கு பிரதமர்  பதிலளித்திருப்பதாவது;

உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் நம் நாட்டில் நீதி வழங்கும் முறையை மேம்படுத்தும்.

***

SM/ANU/IR/RS/GK