Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.


 

நாட்டில் உள்ள  கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்ப்பகுதி நோய், ப்ரூசெலாஸிஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.09.2019) மதுராவில் தொடங்கி வைத்தார்.

 

இந்த இரண்டு நோய்களையும் ஒழிக்கும் முயற்சியாக ரூ.12,652 கோடி செலவில்  முழுவதும் மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் மூலம்,  600 மில்லியன் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படும்.

 

தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டம், நாட்டின்  687 மாவட்டங்களிலும் உள்ள வேளாண் அறிவியல் மையங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தடுப்பூசி மற்றும் நோய் நிர்வாகம், செயற்கைக் கருவூட்டல், உற்பத்தித்திறன் குறித்த தேசிய பயிலரங்கு ஆகியவற்றையும்  பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

ஏராளமாகத் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், “சுற்றுச்சூழலும், கால்நடைகளும், இந்தியப் பொருளாதார சிந்தனைப் மற்றும் தத்துவத்தில் எப்போதும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. தூய்மை இந்தியாவாக இருந்தாலும், ஜல்ஜீவன் இயக்கமாக இருந்தாலும், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்பாடாக இருந்தாலும், நாம் எப்போதும் இயற்கைக்கும், பொருளாதாரத்திற்கும் இடையே, சமச்சீரான நிலையைப், பராமரித்து வந்துள்ளோம். இதன் காரணமாகவே வலுவான புதிய இந்தியாவை நம்மால் கட்டமைக்க முடிந்துள்ளது“ என்றார்.

 

நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைக்கும் நோக்கத்தோடு, தூய்மையே சேவைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

“இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் நமது வீடுகள், அலுவலகங்கள், பணியிடங்கள் ஆகியவற்றிலிருந்து ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்”.

 

“ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக்  பொருட்களுக்கு எதிரான இயக்கத்தில், சுயஉதவிக் குழுக்கள், சிவில் சமூகம், தொண்டு நிறுவனங்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் என அனைவரும் இணைய வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்”.

 

“பாலித்தீன் பைகளுக்கு மலிவான, எளிதான மாற்றுகளை நாம் கண்டறிய வேண்டும். புதுமைத் தொழில்கள் மூலமாக பல தீர்வுகளை நம்மால் காணமுடியும்”.

 

கால்நடை சுகாதாரம், ஊட்டச்சத்து, பால்பண்ணை  சம்பந்தமான மற்ற பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

“விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் கால்நடை வளர்ப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கால்நடை வளர்ப்பு, மீன்வளம், தேனீ வளர்ப்பு ஆகியவற்றின் முதலீடுகள் அதிக வருவாயைத் தரும்”.

 

“கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் அது தொடர்பான பணிகளில், புதிய அணுகுமுறையுடன் நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். கால்நடைகள், பால்பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்”.

 

“கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் மற்றும் சத்தான உணவைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு உரிய தீர்வை நாம் காண வேண்டிய அவசியம் உள்ளது”. 

 

“இந்தியாவில் பால் வளத்துறையை விரிவாக்க புதிய கண்டுபிடிப்பும், புதிய தொழில்நுட்பமும் காலத்தின் தேவையாக உள்ளது. “புதுமை தொழில் முத்திரை சவால்” என்பதை நாம் தொடங்கியிருப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் நமது கிராமங்களிலிருந்துதான்  வரமுடியும்”.

 

“இளைஞர்களின் யோசனைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்குப் பொருத்தமான முதலீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்க நான் விரும்புகிறேன். இது  புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்”.

 

—-