Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கால்நடை இயக்கத்தில் கூடுதல் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கால்நடை இயக்கத்தின் கூடுதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குதிரை, கழுதை, கோவேறு கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு 50 சதவீத மூலதன மானியத்துடன் 50 லட்சம் ரூபாய் வரை தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, சுய உதவிக் குழு, கூட்டுப் பொறுப்புக் குழுவினர், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும். மேலும், குதிரை, கழுதை, ஒட்டகம் ஆகியவற்றின் இனங்களைப் பாதுகாக்க மாநில அரசுக்கு உதவி செய்யப்படும். குதிரை, கழுதை, ஒட்டகம் ஆகியவற்றுக்கான விந்து நிலையம், கரு இனப்பெருக்கப் பண்ணை அமைக்க மத்திய அரசு ரூ. 10 கோடி வழங்கும்.

கால்நடை காப்பீட்டுத் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான காப்பீட்டுக் கட்டணத்தில் பயனாளிகளின் பங்கு 20 சதவீதம், 30 சதவீதம், 40 சதவீதம் மற்றும் 50 சதவீதமாக உள்ள நிலையில், அது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2007868

***

ANU/PKV/IR/AG/KV