Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கடல்சார் வாரம் தொடங்கப்படுவதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதார வளத்திற்கு கடற்கரைகளை திறத்தல் ஆகியவற்றை வலுப்படுத்தும் தேசிய கடல்சார் வாரத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய கடல்சார் வாரம் தொடங்குவதை குறிக்கும் வகையில் பிரதமருக்கு முதலாவது கடல்சார் கொடியை அணிவித்தது குறித்த தகவலுடன்  மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டிருக்கும் ட்விட்டருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். இந்தியாவின் புகழ்மிக்க கடல் வாணிப வரலாற்றைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நமது வளமான கடல்சார் வரலாற்றுடனான இணைப்பை ஆழப்படுத்தும் வாய்ப்பாக தேசிய கடல்சார் வாரம் இருக்கட்டும். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதார வளத்திற்கு கடற்கரைகளை திறத்தல் ஆகியவற்றையும் இது வலுப்படுத்தட்டும்.”

***

(Release ID: 1912402)

AD/SMB/AG/RR